உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நான் சொல்பவர்களுக்கு மட்டுமே டெண்டர் தரணும்; தி.மு.க., ஒன்றிய செயலாளர் பேசும் ஆடியோ வைரல்

நான் சொல்பவர்களுக்கு மட்டுமே டெண்டர் தரணும்; தி.மு.க., ஒன்றிய செயலாளர் பேசும் ஆடியோ வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உடுமலை: உடுமலை ஒன்றிய குழு தலைவரின் கணவரை, உடுமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் தங்கராஜ் என்ற மெய்ஞான மூர்த்தி, மொபைல்போன் மூலம் டெண்டர் தொடர்பாக மிரட்டும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றிய தலைவராக இருப்பவர் மகாலட்சுமி முருகன். இவரது கணவரை மொபைல்போன் மூலம் தொடர்பு கொண்ட தங்கராஜ் என்ற மெய்ஞான மூர்த்தி, டெண்டரை தங்களுக்கு கூறும் நபர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் எனக்கூறி மிரட்டல் தொனியில் பேசியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zs4rhtvy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதில், தங்கராஜ் என்ற மெய்ஞான மூர்த்தி பேசும்போது, நான் கொடுத்த லிஸ்ட்டில் உள்ளவர்களுக்கு வேலையை கொடுக்க வேண்டும். உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை வாங்கிக் கொண்டு நான் சொல்லும் ஆட்களுக்கு வேலையை கொடுக்க வேண்டும். மாற்றி யாருக்காவது கொடுத்தால், கெட்ட கோபம் வரும். உங்கள் மேல் உள்ள மரியாதை முறிந்துவிடும்.வேண்டாத வேலையெல்லாம் செய்ய வேண்டாம். நான் யாருக்கு சொல்கிறோமோ அதை செய்யுங்கள். நான் என்ன சொல்றேனோ அதை கேட்க வேண்டும். மாத்தி செய்தால் சங்கடம் தான் வரும். நீங்க இதை மீறி செய்துவிட்டுபோனால் செய்துட்டு இதோடு போங்கள் வராதீங்க எனக்கூறுகிறார். மறுமுனையில் பேசுவதை இவர் சரியாக கேட்காமல், தான் சொல்வதை மட்டும் செய்ய வேண்டும் என கோபத்துடன் கூறும் அவர், தான் சொல்லும் நபர்களுக்கு மட்டுமே ஒப்பந்தத்தை வழங்க வேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளார்.இது குறித்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Ramesh
டிச 08, 2024 08:10

உலகத்தில யாரும் சொல்லாததையா இவரு சொல்லறாரு. அட போங்கப்பா நாங்க தீமூக்காவுக்கு தான் ஒட்டு போடுவோம். போயி ஆகுற வேலையை பாரு.


PARTHASARATHI J S
டிச 08, 2024 06:04

காற்றுள்ள போதே தூற்றிக்கொள். ஆட்சியில் உள்ள போதே சம்பாதித்துக்கொள். திமுக அதிமுக இரண்டுமே பொதுச்சொத்தை சூறையாடுவது காலம் காலமா நடக்குது. டெண்டராம் நாம்கே வாஸ்.


panneer selvam
டிச 08, 2024 01:13

It is not surprise or shocking incident but a routine incident at every level of government activities as per Dravidian Model . Looting the public projects , started in 1967 during DMK rule under leadership of Kalaingar as PWD minister and perfected by DMK leadership thereafter and streamlined by AIADMK under supreme leader JJ and her assistant Sasikala . How could organise a local party function in a grand manner by local party functionary ? How to bring sizable crowd for senior leaders meeting of Dravidian Parties ? It costs money so local party functionary indulge in looting public wealth whatever the means available to him . Simple example , how Temple Hundi collections are snatched by Sekarbabu and award all temple contracts to DMK leaning contractors . Every Dravidian Ministers are doing the same .


Nava
டிச 07, 2024 22:37

இது தான் திராவிட மாடலின் கல்லாபெட்டி நிறைக்கும் முறைங்க .நீங்க 200ரூபா பிரியாணி வாங்கி கிட்டு ஓட்டை மட்டும் போட்டு விட்டு போயிருங்க மத்ததை கச்சிதமா அவங்க பார்த்து கொள்வார்கள்.


Barakat Ali
டிச 07, 2024 22:10

இது போல லட்டு லட்டா கிடைச்சும் கூட ஏன் அதிமுக இதை அரசியாக்கல ???? தேர்தல் நெருங்கிட்டு இருக்கு ..... யோசிக்க வேண்டிய விஷயம் ....


adalarasan
டிச 07, 2024 21:59

எப்பொழுதும் நடப்பது தானே >?


m.n.balasubramani
டிச 07, 2024 20:10

மூடிட்டு 20, 500 வாங்கிட்டு போவோம் , சொரணை கெட்ட நாம , இந்த ஆடியோ வந்து ஒரு வாரம் ஆச்சு , என்ன ரியாக்ஷன் , ஒரு கூந்தலும் கிடையாது , அடுத்த சட்டமன்ற உறுப்பினர் எழுதி வைத்து கொள்ளவும்


அப்பாவி
டிச 07, 2024 20:05

கட்டப்பஞ்சாயத்து நடத்தி காண்டிராக்டை வாங்கிடும் திருட்டு திராவிடனுங்க. எப்போ ஒழியுவாங்களோ?


GMM
டிச 07, 2024 20:00

திமுக ஒன்றிய செயலாளர் கட்சி நியமனம் - அரசு பணியில் ஜீரோ அதிகாரம். உடுமலை ஒன்றிய செயலாளர் அரசு நியமனம். அரசு பணியில் முழு அதிகாரம். முதலில் இப்படி திராவிடம் பெயர் வைப்பதை நீதிமன்றம் தடுத்து இருக்க வேண்டும். எந்த மக்கள் பிரதிநிதிகளுக்கும் நிர்வாக அதிகாரம் கிடையாது.? அரசியல் வாதிகள் நிழலாக இருந்து நிர்வாகத்தை ஆட்டி வைக்கின்றனர். ஊழல் அதிகாரிகளுக்கு அரசு பணி மிக கடினமானது. அரசியல் வாதிகளிடம் சிக்கி விடுவர்.


என்றும் இந்தியன்
டிச 07, 2024 19:04

இதுதான் 1967 லிலிருந்து ஸர்வசாதாரணமாக நடக்கின்றது திருட்டு திராவிட அறிவிலி ஊழல் அரசாட்சியில்


சமீபத்திய செய்தி