உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்டை கீழே விழும் வரை காட்பாடி மக்களுக்காக உழைப்பேன்: துரைமுருகன் உருக்கம்

கட்டை கீழே விழும் வரை காட்பாடி மக்களுக்காக உழைப்பேன்: துரைமுருகன் உருக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலூர்: என் கட்டை கீழே விழும் வரை காட்பாடி தொகுதி மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன் என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார்.வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள வள்ளிமலை திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. அப்போது, அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: என்னை கேட்கிறார்கள் எப்படி சார் ஒரே தொகுதியில் வெற்றி பெறுகிறீர்கள் என்று, நான் தொகுதி என்று நினைக்கவில்லை. தொகுதியை கோவிலாக நினைக்கிறேன். ஓட்டு போடும் மக்களை தெய்வமாக நினைக்கிறேன். அதனால் தான் இந்த தொகுதியில் இத்தனை முறை வெற்றி பெற்றுள்ளேன். சட்டசபையில் கருணாநிதி 56 ஆண்டுகள் இருந்துள்ளார். அவருக்கு அடுத்து 53 ஆண்டுகள் சட்டசபையில் இருந்து வருகிறேன். என் கட்டை கீழே விழுகிற வரை காட்பாடி தொகுதி மக்களுக்காக பாடுபடுவேன். எங்களுக்கு எல்லாம் அதிக வேலை இருக்கிறது. டிவி காரங்க, 7ம் தேதி மழை பெய்யும் என சொல்கிறார்கள். பயங்கரமான மழை பெய்யும் என்று சொல்லிவிடுகிறார்கள். டிவியில் சொன்னதும் முதல்வர் ஸ்டாலின் தொகுதிக்கு போக சொல்கிறார். வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக, அலைந்து கொண்டு இருக்கிறோம். மற்ற தொகுதியுடன் ஒப்பிட்டு பாருங்கள்; மற்ற தொகுதிகளை விட நான் அதிக திட்டங்கள் கொண்டு வந்துள்ளேன். இவ்வாறு துரைமுருகன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 120 )

sankaranarayanan
நவ 30, 2024 11:01

கட்டை கீழே விழும் வரை காட்பாடி மக்களுக்காக உழைப்பேன் என்று துரைமுருகன் உருக்கமாக கூறியது எல்லோர் மனத்தையும் மிகவும் வேதனை படுத்தியுள்ளது ஆனால் இவர் கூறியது எந்த கட்டை என்று விளக்கமாக சொன்னால் சரியாக இருக்கும் இவர் சொன்னது பணக்கட்டைதானே சொல்லியிருப்பர் என்று எல்லோருக்குமே நன்றாகவே தெரியும் நடக்கட்டும் நடகட்டும் நாராயணா உன்செயத்தானே


G Ragavendran
நவ 30, 2024 07:07

காட்பாடி மக்களுக்கு அல்ல. தன் குடும்பம் மற்றும் கட்சிக்காக உழைக்கிறார்


S.V.Srinivasan
நவ 29, 2024 09:39

கட்டையை யாரு மண்டையைலாவது போடாம இருந்தா சரி.


S.V.Srinivasan
நவ 29, 2024 09:37

தமிழ் நாட்டில் உள்ளவர்களை 60 வருஷமா பிச்சை எடுக்க வெச்சது போதாதா. ஆக மொத்தத்தில் தமிழக மக்களுக்கு இந்த 3 1/2 வருஷம் ஒன்னும் நல்லது செய்யல இன்னும் இருக்கும் 1 1/2 வருஷமும் தமிழ் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய மாட்டோம். இப்படி பிச்சை போட்டே ஆட்சியை பறிப்போம். என்ன ஒரு அசிங்கமான எண்ணம். தமிழ் நாட்டின் சாபக்கேடு. மக்கள் திருந்த வேண்டும்.


Radha kadhiravan
நவ 26, 2024 10:54

தொகுதியை கோவிலாக நினைக்கிறேன். ஓட்டு போடும் மக்களை தெய்வமாக நினைக்கிறேன்... சொல்வது திமுக மினிஸ்டர். அர்த்தம் புரியுதா காட்பாடி மக்களே உஷார் ஐயா உஷார்


S.V.Srinivasan
நவ 29, 2024 09:41

தேர்தல் சமயத்தில் தெய்வங்களின் உண்டியலில் காசு போட்டு ஜெயிச்சுடுவேன் அப்படிங்கறாரு.


vijay
நவ 23, 2024 10:44

அது காட்பாடி மற்றும் தமிழக மக்களுக்கு அல்ல. விடியல் கட்சியின் தலைமை குடும்பத்தின் மக்களுக்காகவே. நீங்கள் எல்லாம் தலைமை குடும்பத்தின் எதிர்கால வாரிசுகளுக்கே போட்டி போட்டு சேவை செய்வீங்க, தேவை பதவி, பகுமானம்.


Venkateswaran Rajaram
நவ 21, 2024 10:22

இதுவரைக்கும் ஆட்டைய போட்டது பத்தலயா ...நீ ஓலைச்சு ஓலைச்சு காட்பாடி மக்கள் நீ கொடுக்கிற 1000 டு 10000 வாங்கிகிட்டு பிச்சக்கரங்களா தான் இருக்காங்க நீ தான் கோடி மேல பில்லியன் பில்லியன் ஆ சுருட்டிக்கிட்டு இருக்கே


sankaranarayanan
நவ 20, 2024 20:53

இவர் கூறுவது பணக்கட்டையையா அல்லது உடல் கட்டையா என்றே தெரியவில்லை


M Ramachandran
நவ 17, 2024 20:19

கட்டுமரம் அதிரியென இவரும் அவிழத்து விடுகிறார்


Kennedy
நவ 13, 2024 12:47

These people are living by cheating the people with their sweet words. Are they earned these wealth by hard work.How long our people will deceive themselves by these daylight robbers


முக்கிய வீடியோ