ஐ.ஏ.எஸ்., அதிகாரி இடமாற்றம்
சென்னை: வருவாய் மற்றும் நிர்வாக கமிஷனராக, சாய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.மாநில வருவாய் நிர்வாக கமிஷனராக இருந்த ராஜேஷ் லக்கானி, சமீபத்தில் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, அவரது பதவி காலியானது. அப்பதவிக்கு, தமிழக தொழில் முதலீட்டு கழகத்தின் தலைவராக இருந்த சாய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை, தலைமைச் செயலர் முருகானந்தம் வெளியிட்டுள்ளார்.