உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குரூப் - 1 அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து

குரூப் - 1 அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து

சென்னை: டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 அதிகாரிகள் ஐந்து பேருக்கு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் - 1 தேர்வில் தேர்ச்சி பெற்று, பல்வேறு துறைகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு, அவர்களின் பணி மூப்பு அடிப்படையிலும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பதவி காலியிடத்தில், அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும், சிலருக்கு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்கப்படும். அந்த வகையில், கடந்த 2023 ஜன., 1 முதல் டிச., 31 வரை காலியான பதவிகள் அடிப்படையில், குரூப் - 1 அதிகாரிகளான, கவிதா, முத்துகுமரன், லீலா அலெக்ஸ், வீரப்பன், ரேவதி ஆகியோருக்கு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, மத்திய அரசு, தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி