உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிதம்பரம் கோவில் வரவு - செலவு விபரம் கேட்கிறது ஐகோர்ட்

சிதம்பரம் கோவில் வரவு - செலவு விபரம் கேட்கிறது ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:சிதம்பரம் நடராஜர் கோவிலின் மூன்றாண்டு வரவு- -- செலவு கணக்கு விபரங்களை தாக்கல் செய்யும்படி, பொது தீட்சிதர் குழுவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.'அனுமதி பெறாமல், கோவிலுக்குள் எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ள, பொது தீட்சிதர் குழுவுக்கு தடை விதிக்க வேண்டும். 'தணிக்கை மேற்கொள்ள கணக்குகளை சமர்ப்பிக்கும்படி, பொது தீட்சிதர் குழு செயலருக்கு உத்தரவிட வேண்டும்' என, ஹிந்து அறநிலையத் துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அறநிலையத் துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ''சட்ட விரோதமாக கட்டுமானம் செய்ய மாட்டோம்; அவ்வாறு நடந்தால், உடனே பணிகள் நிறுத்தப்படும் என, தீட்சிதர்கள் குழு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், அதை மீறி கட்டுமானங்களை மேற்கொள்கின்றனர்,'' எனக் கூறி, அதற்கான புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார். மேலும், ''கோவில் நிர்வாகம் சார்பில் 2023 - -24ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கலில், 2.09 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், ஆருத்ரா தரிசன விழாவின்போது மட்டும், 6 லட்சம் ரூபாய் வரை வருவாய் வருகிறது. ''சிறிய கோவிலில் கூட, ஆண்டு வருவாய் அதிகமாக இருக்கும்போது, பிரசித்த பெற்ற இக்கோவிலில் குறைந்த அளவில் வருவாய் எப்படி இருக்கும்?'' என்றும், கேள்வி எழுப்பினார்.அதற்கு பொது தீட்சிதர்கள் குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிசங்கர், ''சட்ட விரோதமாக கட்டுமானம் நடக்கவில்லை. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, கோவில் நிர்வாகத்தில் மறைமுகமாக அறநிலையத் துறை தலையிட முயற்சிக்கிறது. வரவு - செலவு தணிக்கை செய்யப்படுகிறது,'' என்றார்.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தை மீறி நடந்தால், கடும் உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் என எச்சரித்தனர். கோவிலின் கடந்த மூன்றாண்டு வரவு - செலவு, வருமான வரி தாக்கல் விபரங்களை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

adalarasan
பிப் 22, 2024 22:25

சரியான புரிதல் இல்லை, அங்கு நடக்கும் வழிமுறைகளை பற்றி> ஒரு சிறு உதாரணமாக,ஆருத்திரா அபிஷேகத்திற்கு, தனிப்பட்ட பொது மக்கள் பலர், நான் உட்பட, பால், தேன்,சந்தனம் முதலியவற்றை கடுவாளுக்காக கொடுக்கிறோம். உதாரணமாக பால் அபிஷேகம் மட் டும் குடம் குடமாக ,0ருமணி ராமாவது நடைபெறும். உள்ளூர், சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பொருட்கும் கோவிலுக்கு வரும். அதேபோல் கட்டளைக்காரர்கள் ,த்ருஷ்ட்ஸ் ஓவ்வொரு வேலை பூஜை செலவை ஏற்றுக்கொள்கிறார்கள். சுருக்கமாக சொல்லப்போனால், மக்கள் தானாக முன்வந்தும், கட்டளைக்காரர்கள் தலைமுறை, தலைமுறையாக மக்களால் நடத்தப்படும் உச்சபங்கள் நடை பெறுகிறது, ஓவ்வொரு குடும்பத்திற்கும், ஒரு கட்டளைக்கார தீக்ஷிதர் இருப்பார் அவர் குடுபங்கள் பல நூறு ஆண்டுகள்,இந்த முறையில் உச்சவங்களை நடத்துகிறார்கள், நடராஜ மூர்த்தியை,அன்றாடம் பூஜை செய்து கட்டி காக்கும் குடம்பத்திற்கும், VENDIYADHAI SEYKIRAARKAL, தனிப்பட்ட VIDAYAM IDHU ,IDHAI KELVI KETKA யாருக்கும் உரிமை, கிடையாதது,உ ண்டியல், கல்லாகிசன் கிடையாது. AAYIRAKKANAKKAANA ஏக்கர் தான விலங்கிலிருந்து சரியான வருமானம் கிடையாது. தனி தாசில்டர் உள்ளார். யரோ, கோவில் சொத்துக்களை அனுபவித்து வருகிறார்கள். நீதி மன்றம், அந்த கோவில் நிலா விவகாரத்தை சோதனை செய்யலாம்,ஆனால் தனி நபர் தங்கள் விருப்பப்படி காசாவிலுக்காக டிக்ஸ்ஹிதர் மூலம், கொடுப்பதை கேட்பது சரியாக தொழிலை. வஸ்திரம், புடவை, குழைதைகளுக்கு, துணிமணிகள்,, மற்றவர்கள் தலை விடமுடியாது. அரசாஙக கோவில்களில், உண்டியல் கோடியில் வரும் பணத்தை அரசாநகம் எப்படி செலவழிகிறது என்பதற்கு முதலில்,CAG ஆடிட்தேவை?


g.s,rajan
பிப் 22, 2024 20:26

இந்தியாவில் மற்ற மதங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் வரவு செலவு கணக்குகளைக் கேட்க நீதிமன்றத்துக்கு கொஞ்சமாவது "தில்: இருக்கா ...???


g.s,rajan
பிப் 22, 2024 20:20

சிதம்பரம் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் ,இதில் நீதிமன்றம் எப்படித் தலையிடலாம்..???கணக்குகளை ,வரவு செலவுகளை எப்படிக் கேட்க முடியும்...???புரியவில்லை .... ,


தத்வமசி
பிப் 22, 2024 15:31

இவர்களுடைய மீட்டிங் சிலவு முந்திரி பக்கோடா, சமோசா, இனிப்பு, காரம், டீ காபி எல்லாம் வடபழனி முருகன் கோவில் உண்டி அரோகரா. கபாலி கோவில் உண்டியல் சிவா சம்போ... உண்டியல் பணத்தில் ஜீப் கார் பெட்ரோல் டீசல் சிலவு நாராயணா.. சம்பளமும் உண்டியல் பணம் தான். அப்ப அறநிலையத்துறை ஏன் அரசாங்கத்தில் வேண்டும் ? இதை நீதி மன்றம் கேட்குமா ? ஆனால் சிதம்பரத்தில் மூக்கை நுழைக்க விரும்பும் அறநிலையத்துறைக்கு கணக்கு காட்ட வேண்டுமாம் ? நீதிமன்றத்திற்கு இது தெரியுமா ?


Velan Iyengaar
பிப் 22, 2024 19:50

கபாலி கோவில் நிலத்தில் சைவ மற்றும் வைஷ்ணவ பெரிய மனுஷனுங்க கூட்ட்டாக சைவமதுபான விடுதி நடத்தியது எல்லாம் புண்ணியக்கணக்கா இல்லை பாவகணக்கா??


P Karthikeyan
பிப் 22, 2024 15:20

அமைதி மார்கத்திடம் இப்படி கேட்க முடியுமா..


jayvee
பிப் 22, 2024 13:53

இப்படி சிலுவை மற்றும் ஒட்டக கூட்டத்திடம் கேட்குமா நீதிமன்றம்..


M S RAGHUNATHAN
பிப் 22, 2024 12:53

Before asking the Dikshithars of Sabha Nayakar Temple, why the High Court has not directed to submit the Audit reports of various temples which are under HRCE control. The HRCE has not subjected the temples' accounts and properties for years together but is recovering Audit fees regularly. Why this double standard ? Why the HC has not taken to task the HRCE about the non compliance of various directions issued by HC from time to time and sought the reasons for non compliance. The HRCE itself submitted records pertaining to lakhs of acres of teplelands land details are unavailable. Who is responsible for this ? HRCE is the biggest culprit and is hand in glove with thieves. Who gave the right to HRCE to purchase high end cars from the income of temples and let HRCE come out in where and how these cars are used ? Why temple funds are used to conduct the HRCE meetings. I humbly request the lordships to address these things before entering Chidambaram Temple. Final question : Is High Court a competent authority to call for the IT returns of the temple. Will they ask other Religious Boards to submit such IT returns ?


Velan Iyengaar
பிப் 22, 2024 13:46

If you have nothing to hide, why take cover under unjustifiable grounds? Why not subject yourself to Audit and come clean as quickly as possible??


kumar
பிப் 22, 2024 22:39

Precisely . The rationalist has spoken. If the madaraasas, dioceses, masjits have nothing to hide, why not submit to and neutral audits? They can come clean as quickly as possible and the public will also come to know the source of their revenue and income as well as their properties. The problem here is tematic defamation of the hindu faith and practices while at the same time providing all support and resources for the growth of the foreign faiths. As one who has crossed over, your Hindu pseudonym notwithstanding, that agrees with your agenda.


Velan Iyengaar
பிப் 23, 2024 08:27

Not withstanding to your judgemental comment on my pseudonym , the point of discussion here is Thillai Natarajar Temple and its accounts. Why you core sangis never restrict any of your arguments without invoking the foreign faiths? Any attempt to defame any religion is not accep. The question here is faith and practices are centred around one selfish sect more precisely subset of one selfish sect. Can you cite such precedences in any foreign faiths?


Velan Iyengaar
பிப் 22, 2024 12:35

புத்திபலம் அதிகம் இருந்தால் தகிடுதத்தமும் அதிகம் செய்வார்களோ??? சும்மா கேட்டேன்


Nachiar
பிப் 22, 2024 19:21

பொதுவாக ப்ராமண சமூகத்திறனாருக்கு புத்தி அதிகம் தான். அதனால் தான் அவர்களின் திறமைகளை இன்று சர்வதேசமும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பிராமணர்களை வெளியேற்றியதால் அவர்களுக்கு புகலிடம் கொடுத்த நாடுகளுக்குத் தான் நல்ல பலன் கிடைத்துக் கொண்டுள்ளது. வாழ்க பிராமணர்கள் தொரடர்க அவர்களது சேவைகள்.


Velan Iyengaar
பிப் 22, 2024 12:34

தில்லைநாதனின் நகைகளையும் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்....நகைகள கையாளும் அனைத்து ஆட்களின் கைரேகைகையும் பதிவுசெய்துவைக்க வேண்டும்


Narayanan Muthu
பிப் 22, 2024 12:20

சிதம்பர நடராஜர் கோவில் தீட்சிதர்களாகிய நிதி குறைப்பாளர்களுக்கு அடி வயிற்றை கலக்கும் ஒரு விவரத்தை நீதிமன்றம் கேட்டிருக்கிறது. நல்ல வரவேற்கக்கூடிய ஒன்று.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை