உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., இல்லை என்றால் தி.மு.க., அழிந்து 20 வருடம் ஆகியிருக்கும்: சீமான்

பா.ஜ., இல்லை என்றால் தி.மு.க., அழிந்து 20 வருடம் ஆகியிருக்கும்: சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''பா.ஜ., என்று ஒன்று இல்லை என்றால் தி.மு.க., என்ற கட்சி அழிந்து, 20 வருடங்கள் ஆகி இருக்கும்'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் உங்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி உள்ளார். அரசின் இந்த முன்னெடுப்பை எப்படி பார்க்கிறீர்கள் என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு சீமான் அளித்த பதில்: உங்களுடன் முதல்வர் சரி, இவ்வளவு நாளாக அவர் யாருடன் இருந்தார். இந்த கேள்விக்கு யாரிடம் பதில் இருக்கிறது. வீடு தேடி அரசு போகிறது. இவ்வளவு நாட்களாக அரசு யாரை தேடி சென்றது. ஓரணியில் திரள்வோம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dl82nrf3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கூடி கொள்ளையடிக்க, கூடி கொலை செய்ய அதற்கு தானே? வேறு எதற்கு? கூடி குடிக்க, வேறு எதற்காக ஓரணியில் திரள்வோம். ஓரணியில் தேர்தலுக்கு 6 மாதம் இருக்கும் போது திரள்வீர்கள். அதற்கு முன் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள். மொழி காக்க என்று போட்டு இருக்கிறீர்கள். மண் காக்கிறார்கள். இவ்வளவு நாட்களாக திருடி சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். மண், மானம், மொழி காக்க எப்பொழுது வருவீர்கள். நாட்டுக்கு பிரச்னை என்று இப்பொழுதான் கேட்கிறார்கள். தேர்தல் வரும் போது ஒரு காதல் வருகிறது. தோண்டப்பட்ட குழிகள் மூடப்படும். சாலைகள் போடப்படும். எல்லாம் நடக்கும். மின்சாரங்கள் அணையாமல் கொடுக்கப்படும். இது தான் தேர்தல் அரசியல், கட்சி அரசியல்.என்றைக்கு இந்த இரண்டையும் கடந்து மக்கள் அரசியல் இந்த மண்ணில் மலர்கிறதோ அன்று தான், காமராஜரின் ஆட்சி இந்த மண்ணில் மலரும். இல்லையென்றால் மலராது. பா.ஜ., என்று ஒன்று இல்லை என்றால் தி.மு.க., என்ற கட்சி அழிந்து, 20 வருடங்கள் ஆகி இருக்கும். தி.மு.க.,வை பதவியில் அமர்த்தியது ஸ்டாலினா? பிரதமர் மோடியா?தி.மு.க., கட்சி உழைத்து வென்று இருக்கிறதா? பா.ஜ., வெற்றி பெற வைத்து இருக்கிறதா? அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பின்னர் என்ன நடந்தது. ரெய்டு வந்ததும் பிரதமர் மோடியை ஓடி போய் பார்த்தது யார்? அங்கு போய் கையை பிடித்து கெஞ்சியது யார்? இப்படி ஒரு அரசியல் கட்டமைப்பை திராவிட கட்சிகளை தவிர வேறு யார் செய்வார்கள். இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

பேசும் தமிழன்
ஜூலை 15, 2025 20:06

உனக்கு என்னப்பா... நீ பைத்தியம்... நீ என்ன வேண்டுமானாலும் பேசுவ.... ஆமாம் நீ என்ன தான் சொல்ல வாற ???


தாமரை மலர்கிறது
ஜூலை 15, 2025 19:41

பிஜேபி இல்லையென்றால், சீமானை இந்நேரம் ஸ்டாலின் உள்ளே தள்ளி இருப்பார்.


Infomation Technology Officers ASSOCIATION Tamilnadu Municipal Dept
ஜூலை 15, 2025 18:22

முதலில் பிசேபி இல்லையென்றால் சைமன் கட்சி அணிலான் கட்சி இருக்குமா. இவர் பெண்களை எவ்வாறு மதித்தார் என்பதை விசயலட்சுமி வழக்கிலேயே தெரிந்து கொண்டோமே.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 15, 2025 16:24

சொல்வது சீமான் என்பதால் சீமானை கடித்து குதறுவார்கள். ஆனால் பாஜகவைப்போல திமுகவை காப்பாற்றும் கட்சி வேறில்லை என்பதுதான் உண்மை. 2ஜி வழக்கில் திமுகவை காப்பாற்றியது பாஜக. தமிழகத்தில் அனைத்து ஊடகங்களையும் திரை உலகத்தையும் அடக்கி வைத்திருக்கும் சன் குழுமத்தை தொலைபேசி வழக்கில் காப்பாற்றியதும் பாஜக. இராஜீவ் கொலை வழக்கில் திமுகவை காப்பாற்றியது பாஜக. செந்தில் பாலாஜியை காப்பாற்றியதும் பாஜக. சிறைக்கதவை திறந்து மூடி பொன்முடியாரை காப்பாற்றியதும் பாஜக. இவை அனைத்தும் முக்கிய வழக்குகள் .இவைதவிர அமலாக்கத்துறையிடம் சிக்கிய 30000 கோடி என்ன ஆயிற்றோ யாமறியோம் .


என்னத்த சொல்ல
ஜூலை 15, 2025 17:59

பிஜேபி நினைத்தால் யாரையும் காப்பாற்றி விட முடியும் என்றால், இங்கு நீதிக்கு என்ன வேலை.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 15, 2025 19:20

இங்கு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன், பொன்முடிக்கு ஜாமீன் என சொல்வதை பார்த்த பின்னும் நீதி இருப்பதாக நினைக்கிறீர்களா?


Pandi Muni
ஜூலை 15, 2025 15:43

என்னய்யா சொல்லுற . நல்ல மன நல மருத்துவர போய் பாரு


Palanisamy Sekar
ஜூலை 15, 2025 15:34

தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் மத்தியில் இப்படி ஓர் ஆதங்கம் இருக்கத்தான் செய்கின்றது. அமலாக்கத்துறை சோதனையில் 39,000 கோடி ஊழல் நடந்துள்ளது என்கிறார்கள். அதனையே நம்ம அமீத்ஷா அவர்களும் பொதுவெளியில் சொன்னார்கள். அப்படி இருக்கையில் ஏன் நடவடிக்கை என்பதே இல்லை. கனிமொழி பார்க்கின்றார், ஸ்டாலின் பார்க்கின்றார்., உ நிதி பார்த்துவிட்டு வருகின்றார்கள். பின்னர் எந்த நடவடிக்கையுமே எடுக்க மாட்டேன் என்றால் எதற்க்காக திமுக எதிர்ப்பு நாடகம்? எவ்வளவோ கட்சியில் உழைத்தவர்கள் நாடுமுழுக்க இருக்கும்போது கனிமொழியின் தலைமையில் வெளிநாட்டு தூதுறவராக அனுப்பவேண்டும்? கெஜ்ரிவால் மீது எடுத்த அதே சாராய ஊழலைப்போல தமிழகத்திலும் உறுதியாக செய்திகள் வந்த பின்னரும் ஏன் திமுக மீது நடவடிக்கை எடுக்காமல் தயக்கம் காட்டுகின்றது. பொன்முடிக்கு தண்டனையை கொடுத்தது நீதிமன்றம் தான்..ஆனால் இந்த நொடிவரை அவர் மீது ஊழல்வளக்கின் தண்டனையை ஏன் மேற்கொள்ளவில்லை? இதெல்லாம் யாரிடம் சொல்லி கதறுவது? அண்ணாமலையிடமா? நயினாரிடமா? மற்றவர்கள் எல்லோரும் அடுத்த எம் எல் ஏ பதவிக்கு சிந்தித்துக்கொண்டிருப்பதால் தொண்டர்களுக்கு சீமான் சொல்வதை கேடுக்கும்போது மனசு வலிக்கத்தான் செய்யும். திமுகவே அடுத்த ஆட்சி என்று பாஜக முடிவு செய்துவிட்டதுபோலும்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 15, 2025 16:15

தமிழ்நாட்டில் பலரின் கருதும் இதுதான் ...உண்மையை தெளிவாக சொல்லிவிட்டிர்கள் ....பாஜக தலைவர்கள் இதை படிக்கவேண்டும் ... வாழ்த்துக்கள்


ganesan
ஜூலை 15, 2025 17:23

தமிழ் நாடு மாக்கள் தான் திருத்தணும்


ganesan
ஜூலை 15, 2025 17:27

356 போட்டு ஆட்சியை கலைச்சிருவோமா . மீண்டும் 500 வாங்கிட்டு இந்த மாக்கள் யாருக்கு வோட்டு போடுவானுங்க தெரியுமா


SIVA
ஜூலை 15, 2025 15:21

பிஜேபி இல்லை என்றால் இந்த நாட்டை திமுக 20 ஆண்டுகளுக்கு முன்பேய் அழித்து இருக்கும் , பிஜேபி இருக்க கூடாது என்று நினைக்கும் இவர் இன்று திமுகவின் பி டீம் , ஆனால் அன்னான் நேர்மையான ஆள் யார் கிட்ட காசு வாங்கினாலும் வாங்கின காசுக்கு மேல கூவுவார் , இன்று அதிமுக பிரச்சாரத்தால் திமுக எதிர்ப்பு வாக்குகள் ஓரணியில் திரள்கின்றது அதை திசை திருப்ப இந்த கூப்பாடு ....


Perumal Pillai
ஜூலை 15, 2025 14:46

100/100 unmai.


ராமகிருஷ்ணன்
ஜூலை 15, 2025 14:35

சீமாண்டி திமுகவினர் பற்றி சொல்வது உண்மை தான். ஆனால் இவனே யோக்கியன் இல்லையே. பெரும் புளுகினி பயல் ஆச்சே,


nagendhiran
ஜூலை 15, 2025 14:03

இறந்தவர்களை வைத்து கதை சொல்வதில் நம்ம சைமனுக்கு இணை அவரே?


சமீபத்திய செய்தி