தொழில்நுட்ப நிபந்தனையால் சிக்கல்
ஐகோர்ட் தீர்ப்பு வந்த பின்னும், தொழில்நுட்ப நிபந்தனைகளை வெளிப்படையாக அறிவிக்காததால், மீண்டும் மின் வாரியத்திற்குசிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, ராயல் இன்ஜினியரிங் நிறுவன மேலாண் இயக்குனர் ஜவகர் கூறியதாவது: ஐகோர்ட் தீர்ப்பு வந்த மறுநாளே, மின் வாரிய அதிகாரிகள் எந்த முன்னறிவிப்பின்றி கோவைக்கு வந்து, தொழிற்சாலையில் ஆய்வு நடத்தினர். மேம்போக்காக பார்த்துவிட்டு, என் தொழிற்சாலையில், தொழில்நுட்பத் தகுதியில்லை என, மேலதிகாரிகளுக்கு கூறியுள்ளனர். என் தொழிற்சாலை வசதிகளை புகைப்பட ஆதாரங்களுடன், மின் வாரியத்திற்கு தாக்கல் செய்த பின்னும், வழக்கு தொடர்ந்த காரணத்தால், வேண்டுமென்றே டெண்டரில் தட்டிக் கழிக்க சில அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். எனவே, டெண்டரில் தொழில்நுட்ப நிபந்தனைகளை வெளிப்படையாக அறிவிக்க கோரி, ஐகோர்ட்டில் மேல்முறையீடு வழக்கு தொடர உள்ளேன். இவ்வாறு ஜவகர் கூறினார்.இந்த புகாரால், கோர்ட் தீர்ப்பு வந்த பின்னும் டெண்டரை திறந்து, டிரான்ஸ்பார்மர் வாங்க முடியாமல் மின் வாரியத்திற்குமீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.