உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மனநலம் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் குறைபாடு இருந்தால் சொல்லுங்கள்: ஐகோர்ட் உத்தரவு

மனநலம் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் குறைபாடு இருந்தால் சொல்லுங்கள்: ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சாலைகளில் சுற்றி திரியும் மனநலம் பாதித்தவர்களை அடையாளம் காண்பதிலும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும், ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அது குறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.'பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மனநலம் பாதித்தவர்களை மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சேர்க்க உத்தரவிட வேண்டும்; இவ்விவகாரத்தில், ஏற்கனவே 2009ல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயல்படுத்த உத்தரவிட வேண்டும்' என, வேதாரண்யத்தை சேர்ந்த ராஜேந்திரன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.நடவடிக்கை இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வி.காசிநாதபாரதி ஆஜராகி, ''சாலைகளில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, சட்டத்துக்கு உட்பட்டு, காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க, அனைத்து மாவட்ட எஸ்.பி.,க்களுக்கும் டி.ஜி.பி., அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என, 2009ல் இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அது முறையாக பின்பற்றப்படவில்லை,'' என்றார்.கொள்கை வகுப்பு அதற்கு அரசு தரப்பில், 'மனநலம் பாதிக்கப்பட்ட வர்களை கையாளும் வகையில், ஏற்கனவே கொள்கை வகுக்கப்பட்டு விட்டது' என தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து நீதிபதிகள், 'மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை அடையாளம் காண்பதிலும், அவர்களுக்கு சிகிச்சையளிப்பதிலும் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அவற்றை நீதிமன்றத்தின் கவனத்திற்கு, மனுதாரர் கொண்டு வரலாம்.'மேலும், இதுபோன்ற சம்பவங்களை ஏதேனும் காணும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தகுந்த நடவடிக்கை எடுக்க, மனுதாரர் புகார்அளிக்கலாம்' என தெரிவித்து, மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி