உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் 4 மணிக்கு வந்திருந்தால் இதுபோன்ற விபத்து நடந்திருக்காது: செந்தில் பாலாஜி பேட்டி

விஜய் 4 மணிக்கு வந்திருந்தால் இதுபோன்ற விபத்து நடந்திருக்காது: செந்தில் பாலாஜி பேட்டி

கரூர்: விஜய் அன்று மாலை 4 மணிக்கு வந்திருந்தால் இது போன்ற அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.கரூரில் நிருபர்கள் சந்திப்பில் செந்தில் பாலாஜி கூறியதாவது: கடந்த 27ம் தேதி கரூரில் நடந்த துயர சம்பவம் மிகவும் துயரமானது. யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாதது. அந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதிக்கு கரூர் மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மக்களுக்கு ஆதரவாக இருந்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நன்றி. 29 ஆண்டுகளாக பொது வாழ்வில் இருக்கிறேன். 1996ம் ஆண்டு பொது வாழ்வு தொடங்கியது.கரூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் இதுவரை நடக்காத ஒன்று. வரும் காலத்தில் இதுபோன்ற துயர சம்பவம் கரூரில் மட்டுமல்ல தமிழகத்தில் எங்கேயும் நடக்காத அளவிற்கு, அனைவரும் சேர்ந்து இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். இதபோன்ற துயர சம்பவம் தமிழகத்தில் எங்கேயும் வரும் காலத்தில் நடக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

பேச்சை கேட்கவில்லை!

மேலும் செந்தில் பாலாஜி கூறியதாவது: மக்களுக்கு தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவது கூட்டத்தை நடத்தும் அரசியல் கட்சியினரின் பொறுப்பு. வேலுச்சாமிபுரத்தில் அவர்கள் வருவதாகக் குறிப்பிட்ட 12 மணிக்கு, சுமார் 5,000 பேர் திரண்டிருந்தனர். நேரம் செல்லச்செல்ல, பணி முடிந்து மக்கள் அதிகமாகத் திரண்டனர். தவெக.,வினர் ஏற்பாடு செய்திருந்த ஜெனரேட்டர் ஆப் ஆன போதும், மின் விளக்குகள் அணையவில்லை. அங்கு மின்தடை ஏற்படவில்லை. விஜய் பேசிக்கொண்டிருந்த போதே மக்கள் தண்ணீர் கேட்டு கூச்சலிட்ட காட்சிகள் பதிவாகியுள்ளன.கரூரில் மட்டும் ஏன் நடந்தது என்று கேட்கிறார். அவரது அனைத்து பிரசாரத்திலும் மக்கள் மயக்கமடைந்த சம்பவங்கள் நடந்தன. அதனை சரி செய்யும் சூழலை அவர்கள் உருவாக்கவில்லை. போலீசாரின் எந்த பேச்சையும் கேட்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வியும், பதிலும்!

நிருபர்: கரூரில் மட்டும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி என விஜய் கேள்வி எழுப்பி உள்ளாரே?செந்தில் பாலாஜி பதில்: பொதுவாக அரசியலாக பார்க்க விரும்பவில்லை. மனிதாபிமான அடிப்படையில் உதவிக்கரம் நீட்டப்பட்டது. உயிரிழந்த 41 பேரில், 31 பேர் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 27 குடும்பங்களை சார்ந்தது. யார் மீது தவறு என பேசாமல் இனிமேல் இதுபோல் நடக்காமல் இருக்க முயற்சி எடுக்க வேண்டும். எந்த அரசியல் கட்சியின் கூட்டாக இருந்தாலும் இனி இதுபோன்று நடக்க கூடாது. வேலுச்சாமி புரத்தில் 1000 முதல் 2000 செருப்புகள் வீதியில் கிடந்தன. ஆனால் ஒரு தண்ணீர் பாட்டில் கூட இல்லை. இதில் இருந்தே தெரிகிறது. மக்களுக்கு குடிநீரோ, பிஸ்கட், பாக்கெட்டோ வழங்கப்படவில்லை. விஜய் அன்று மாலை 4 மணிக்கு வந்திருந்தால் இது போன்ற அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது. இவ்வாறு செந்தில் பாலாஜி பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 71 )

JANA VEL
அக் 08, 2025 18:25

நீங்க ஓர் 4 மணி நேரம் அங்கே இல்லாம இருந்தா என்ன ஆயிருக்கும் . சொல்லுங்க


S.V.Srinivasan
அக் 08, 2025 09:58

என்ன புதுசா ஜோசியம் சொல்றாரு. சந்தேகமா இருக்கே.


Matt P
அக் 07, 2025 08:16

யார் மீது தவறு என பேசாமல் இனிமேல் இதுபோல் நடக்காமல் இருக்க முயற்சி எடுக்க வேண்டும்..-_செந்திலு .யார் மீது தவறு என்று யாரும் தெரிந்து விடாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லலாம்.


K.Rajasekaran
அக் 06, 2025 05:14

சதிச்செயல் செய்தவனே நீ தானே, எப்படி இருந்தாலும் உண்மை ஒருநாள் வெளிவரும், இறைவன் அந்த குடும்பங்களை அருளட்டும்.


vbs manian
அக் 05, 2025 10:43

உப்பு சப்பில்லாத வாதம். கருணாநிதி எம்ஜிஆர் பலமணி நேரம் கழித்து வந்ததை மாணவ பருவத்தில் பார்த்திருக்கிறேன்.


Indhuindian
அக் 04, 2025 19:32

அவர் வராமலே இருந்தா இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது. திமுக ஆட்சிக்கு வரமாலேயே இருந்தா தமிழகம் இந்த அளவுக்கு கேவலமாக போயிருக்காது.


Easwar Kamal
அக் 03, 2025 18:44

என்ன 4 மணி. விஜய் அந்த கூட்டத்துக்கு போகாமல் இருந்து இருந்தல் இந்த நிகழ்வு நடந்து இருக்காது அடுத்து அதைத்தான் சொல்லுவானுவ. அதுதானே உங்களுக்கு வேண்டும். இன்னும் 6 மாசமாவது விஜய் கட்டி போட்டு விட்டால் அடுத்து இந்த எடப்பாடி. கண்டிப்பாக எளிதில் தோற்கடித்து விட்டால் இனி எந்த கொம்பனும் உங்களை ஒன்னும் பண்ண முடியாது. உங்க MIND வாய்ஸ் கேக்குது. ஆனால் அந்த ஆண்டவன் ஒருத்தன் இருக்கிறான்னு மறந்து விடுகிறீர்களே. அவர் என்ன பிளான் வச்சு இருக்கிறாரோ ?


D.Ambujavalli
அக் 02, 2025 18:21

முதல்வர், துணை முதல்வர், அவ்வளவு ஏன், எம். எல். ஏ கவுன்சிலர் கூட எந்தக்கூட்டத்துக்காவது குறித்த நேரத்தில் வந்திருக்கிறார்களா? என்னவோ, இவர் லேட்டாக வந்ததால்தான் இத்தனை களேபரம் என்று பழியைத் தூக்கிப் போடுகிறார் சொந்த ego [பிரசனையில் எல்லா அராஜகத்தையும் செய்துவிட்டு, எப்படியாவது இவரை அரசியலுக்குப் பெரிய கும்பிடு போட்டு விலக வைக்க வேண்டும் இல்லாவிட்டால் 2026 பெரிய சோதனையாகிவிடும் அதற்காக வேண்டியதை கையில் எடுத்துவிட்டார்கள். அப்பாவி உயிர்கள் நூறு போனால் கூடப் பரவாயில்லை இவர்களுக்கு


S.L.Narasimman
அக் 02, 2025 07:59

காலக்கொடுமை. அநியாயமாக இறந்த உயிர்களின் ஆதரவற்ற பெற்றோர், மனைவி குழந்தைகளை நினைத்தால் இதயமே கனக்கிறது.


Mani
அக் 02, 2025 07:07

தலைவர்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டால் கூட்டம் கலைந்து தானே செல்லும்


முக்கிய வீடியோ