உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தியா என்று அழைத்தால் அரசியல் இருக்கிறது: கவர்னர் ரவி

இந்தியா என்று அழைத்தால் அரசியல் இருக்கிறது: கவர்னர் ரவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'இந்தியா என்று அழைத்தால் அரசியல் இருக்கிறது. பாரதம் என்றால் ஜாதி, மதம் இல்லாத தார்மீக தர்ம நாடு என்று பொருள்' என தமிழக கவர்னர் ரவி தெரிவித்தார்.சென்னை, கிண்டி ராஜ்பவனில் மொழிகள் தொடர்பாக, 2 நாட்கள் கருத்தரங்கு நடக்கிறது. இன்று துவக்க விழாவில் கவர்னர் ரவி பேசியதாவது: பாரதம் என்றால் ஜாதி, மதம் இல்லாத தார்மீக தர்ம நாடு என்று பொருள். பாரதம் என்பது தர்மத்தால் உருவானது. பாரத் என்பது இந்தியாவை விட வேறுபட்டது. ஐரோப்பியர்களே இந்தியா என அழைத்தனர். அப்படி அழைப்பதில் அரசியல் இருக்கிறது. எல்லா மொழி இந்திய இலக்கியங்களும் ஒற்றுமையை வலியுறுத்துகின்றன.

பாரத்

செப்பு மொழி பதினெட்டு உடையாள் என நாட்டின் ஒற்றுமையை பாரதி வலியுறுத்தி உள்ளார். இந்திய இலக்கியங்களில் எப்படி ஒற்றுமையுடன் வாழலாம் என காட்டப்பட்டுள்ளன. இந்தியா என்பதை பாரத் என்று அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. ஆனால் அதனை விளக்கவில்லை. இதனை குழந்தைகளுக்கு விளக்க வேண்டியது நம் கடமை. நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்பதே பாரதம். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Barakat Ali
நவ 17, 2024 12:22

வடக்கன்ஸ் எந்த மதத்தானும் இப்படி பேசுறதில்ல ... தெற்கே இரு மதத்தவர்கள் பேசுகிறார்கள் ன்னு பிரிஞ்சி கெடந்ததுதானே ன்னு தமிழகத்தை பிரிச்சு கொடுத்துட்டா நீயி குடும்பத்தோட தட்டு ஏந்தணும் கோவாலு ......


அப்பாவி
நவ 17, 2024 09:15

சரி.. எந்த இலக்கியங்கள் நாம் ஒத்துமையுடன் வாழலாம்னு சொல்லிருக்கு? ஆதிகாலத்திலிருந்து அவனவன் அடிச்சிக்கிட்டு செத்த கதை தானே நம்மகிட்டே இருக்கு?


அப்பாவி
நவ 17, 2024 09:09

பாரத வர்ஷே, பரதக் கண்டே என்ற சம்ஸ்கிருத வாக்கியற்றை வெச்சுக்கிட்டு பாரதம் நா அப்பிடி, இப்பிடின்னு கூச்சல் போடறாங்க. வட இந்தியாவின் ஒரு பகுதியை ஆண்ட ராஜா பரதன். அவன் என்னிக்கிம் முழு இந்தியாவுக்கும் ராஜா இல்லை. இந்த தேசம் பல்வேறு சிறு அரசுகளாக இருந்தது. ஆங்காங்கே குடிகள், பழங்குடிகள் ஆட்சி செய்தனர். இவுரு என்னமோ பாரதம்னா தெற்கே குமரிமுனை வரைக்கும் பரதன் ஆட்சி இருந்தாப்போலேயும், வைதிக மதம்தான் இருந்தது மாதிரி அடிச்சு உடறாரு. உண்மையில் ஔரங்சீப் காலத்தில்தான் தற்போதைய இந்தியாவின் பெரும்பகுதி ஒரு ஆட்சியின் கீழ் இருந்ததுன்னு சொல்லலாம். மத்தபடி இந்தியா ஒரு கொடியின் கீழ் இல்லவே இல்லை. அதற்கு பாரதம்னு ஒரே பேரு இருந்ததுமில்லை. சுதந்திரம் அடைந்தபோது 500 சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்ததுதான் உண்மை. உண்மையிலேயே இவருக்கு என்னமோ ஆயிருச்சு.


ஆரூர் ரங்
நவ 17, 2024 11:33

முப்பது கோடி முகமுடையாள் - உயிர் மொய்ம்புற வொன்றுடையாள் - இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள் - எனிற் சிந்தனை ஒன்றுடையாள் என்று (அன்றைய பாரதத்தின் மக்கள் தொகையான முப்பது கோடியைக் குறிப்பிட்டு), முகம் முப்பது கோடி என்று உயிர் ஒன்று என்றும், செப்பு மொழி பதினெட்டு ஆயினும் சிந்தனை ஒன்று என்றும், பாரத நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி பாரதி பாடியுள்ளார். பாரதம் என்பது பல கோடி ஜனங்களின் சங்கமம் . ஆன்மா ஒன்றே


Jay
நவ 16, 2024 22:42

இந்தியா என்ற வார்த்தை அரசியலாக ஆக்கப்பட்டுள்ளது உண்மைதானே. பாரதம் என்று சொல்ல வேண்டிய கட்டாயம் உருவாகிறது. கவர்னர் ரவி IPS அதிகாரியாகவும் சிபிஐ அதிகாரியாகவும் JKலும் வேலை செய்துள்ளார். பிரிவினைவாததையும் இந்தியாவிற்கு எதிரான செயல்களை நாகலாந்தில் கட்டுப்படுத்துவதிலும் பணியாற்றியவர். தமிழ்நாட்டில் பிரிவினைவாதம் தலை தூக்குவதை கட்டுப்படுத்த அனுப்பட்டவர். தமிழ் வருடப்பிறப்பை மாற்றுவதை தடுத்து நிறுத்தியவர். தமிழ்தாய் வாழ்த்தில் தாய் என்ற வார்த்தையை மாற்ற முயன்றபோது திராவிடம் என்ற வார்த்தையை நீக்கி பதிலடி கொடுத்தவர். இந்தியாவிற்க்கும் உள்நாட்டு கலாச்சாரத்திற்கு எதிராகவும் இங்கு நடப்பதை தொடர்ந்து எதிர்க்கக் தான் போகிறார்


hari
நவ 16, 2024 22:13

இந்த திராவிட சொம்புகள்


சாண்டில்யன்
நவ 16, 2024 20:02

பாரதம் என்றால் ஜாதி, மதம் இல்லாத தார்மீக தர்ம நாடு என்று பொருள் என்கிறார் ரவி. இந்த நாட்டில் ஜாதி மதம் இல்லாத வாழ்க்கையே இல்லை தார்மீகம் தர்மம் நேர்மை எங்காவது உள்ளதா என விஞ்ஞானிகள் ஆய்ந்து கொண்டுள்ளார்கள்.


சாண்டில்யன்
நவ 16, 2024 19:56

கூட்டணிக்கு ஒரு பேர் வச்சு இவங்களை கலங்கடிச்சுட்டாங்கன்னு வெட்ட வெளிச்சமாகிடுச்சு பரதன் அது காஸ்டலி செருப்புன்னு சொல்லி அதையும் பிடுங்கிகிட்டு போய்ட்டான் அதுக்கு மேல தெக்க வரவில்லை பரதன் ஆண்டதா சொல்லும் "பாரதம்" கைபர் கணவாய் ஒட்டிய சிறு பிரதேசம் மட்டுமே அங்கேயே வயித்தெரிச்சலில் பங்காளிங்க அடிச்சுகிட்டு செத்தானுங்கன்னுதான் இதிகாசங்கள் சொல்கிறது அதை வைத்துக் கொண்டு இந்த துணைக்கண்டம் முழுவது பாரதம்னு உரிமை கொண்டாட பாக்கிறானுங்க கிழக்கிந்திய கம்பெனி வருமுன் சிறு சிறு "ராஜ்ஜியங்கள்" "தேசங்கள்" தான் இருந்ததே ஒழிய இந்தியா என்று ஒன்றும் இல்லை


Dharmavaan
நவ 16, 2024 22:50

அரை வேக்காட்டு உளறல் அகண்ட பாரதம் என்பது ஆப்கானிஸ்தான் வரை இருந்ததாக தெரிகிறது இதில் எங்கே சிறு நிலப்பகுதி .என்று மேற்கோள் காட்ட முடியுமா


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 17, 2024 08:07

பாரதம் முழுவதும் ஒன்றாக ஆளப்பட்ட வரலாறு உண்டு ... அரபு வழிவந்த மூர்க்கத்துக்கு விதைபோட்டு விட்டு ஓடினவனிடம்தான் விசுவாசம் ..... நாட்டுக்கு விசுவாசமாக இரு ..........


T.sthivinayagam
நவ 16, 2024 18:07

காவி கலர் திருவள்ளுவர்க்கு மட்டும்தானா


சந்திரன்,போத்தனூர்
நவ 16, 2024 19:17

இனி வருகிற காலத்துல ஈ.வெ.ராமசாமிக்கும் காவிதான் அடையாளமாக இருக்கப் போகிறது.


karutthu kandhasamy
நவ 16, 2024 20:09

விரும்பினால் உங்களுக்கும் உண்டு


சாண்டில்யன்
நவ 16, 2024 21:25

தமிழ்நாடுன்னு பேர் வச்சா என்ன கிடைக்குமான்னு ஹமிழன் ஒருவன் நாடாளுமன்றத்தில் அண்ணாவை கேட்டான்


வைகுண்டேஸ்வரன்
நவ 16, 2024 17:47

சிந்து நதிக்கு யாரு சிந்து ன்னு பேர் வெச்சது? அங்கே ஆரம்பித்தது இந்து, இந்தியா. தக்காணப் தெற்கானப் பீடபூமி தான் செல்வம் திரு நிறைந்த இடம். திருவிடம் தான் திராவிடம். சொல்லியாச்சு.. எல்லோரும் கிளம்புங்க. போங்க போங்க... பஞ்சாயத்து ஓவர்.


raja
நவ 16, 2024 18:20

எப்புர்ரா....


hari
நவ 16, 2024 22:14

itho vanthutan


சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
நவ 16, 2024 17:29

தமிழ்நாட்டுக்கு ஆளுநராக இருப்பதால் இவரது பெயரையும் கதிரவன் என்று மாற்றிவிடலாம்


Dharmavaan
நவ 16, 2024 22:51

திராவிடம் தமிழ் பெயரா .முதலில் கிறுக்கன்கள் உணரட்டும்


karutthu kandhasamy
நவ 25, 2024 17:15

தமிழ்நாட்டுக்கு ஆளுநராக இருப்பதால் இவரது பெயரையும் கதிரவன் என்று மாற்றிவிடலாம் புதிய சூரியன் என அழைக்கலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை