உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.500 கோடி கொடுத்து தகவல் தொழில்நுட்பம் கற்று தரச் சொன்னால் பாடத்திட்டத்தையே காணோமே? கொதிக்கின்றனர் தமிழக தலைமை ஆசிரியர்கள்

ரூ.500 கோடி கொடுத்து தகவல் தொழில்நுட்பம் கற்று தரச் சொன்னால் பாடத்திட்டத்தையே காணோமே? கொதிக்கின்றனர் தமிழக தலைமை ஆசிரியர்கள்

- நமது நிருபர் -'ஐ.சி.டி., எனப்படும், 'இன்பர்மேஷன் அண்டு கம்யூனிகேஷன் டெக்னாலஜி' திட்டத்தில், ரூ.500 கோடி ஒதுக்கி ஹைடெக் லேப்களை அமைத்து, பாடம் கற்றுத் தரச் சொன்னால், பாடத்திட்டத்தையே தமிழக அரசு உருவாக்கவில்லை' என அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.'ஆனால், தமிழகத்தில், ஆறு முதல் 10ம் வகுப்பு வரை அதற்கான பாடத் திட்டமே வகுக்கப் படவில்லை. எஸ்.எஸ்.ஏ., எனப்படும் அனைவருக்கும் கல்வி திட்டம் மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., எனப்படும் இடைநிலை கல்வி திட்டத்தை இணைத்து, பிளஸ் 2 வரை தரமான கல்வி வழங்க, 'சமக்ர சிக்ஷா அபியான்' என்ற ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.இதில், ஐ.சி.டி., எனப்படும், இன்பர்மேஷன் அண்டு கம்யூனிகேஷன் டெக்னாலஜி திட்டம் துவங்கி, அதன் நோக்கமாக 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கணினி கல்விக்கு, 'ஹைடெக் லேப், இன்டர்நெட், ஸ்மார்ட் கிளாஸ் ரூம்' அமைப்பது, ஆறாம் வகுப்பு முதலே, கணினி கல்வி கற்றுத்தர நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவை வரையறுக்கப்பட்டுள்ளது.

ஹைடெக் லேப்

இதற்கு, 700 மாணவர்கள் வரை உள்ள பள்ளிகளில், 'ஹைடெக் லேப்' அமைக்க, ஒரு பள்ளிக்கு, தலா 6.40 லட்சம் ரூபாய், அதற்கு மேல் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல், 'லேப்' அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அத்துடன் இன்டர்நெட் கட்டணம் உள்ளிட்ட ஆண்டு பராமரிப்பு, கணினி பயிற்றுநர் சம்பளம் என, ஒரு பள்ளிக்கு, 2.40 லட்சம் ரூபாய் வீதம் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில், தமிழகத்தில் உள்ள அரசு, அதன் உதவி பெறுபவை என, 6,454 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், 'ஹைடெக் லேப்' அமைக்க, 500 கோடி ரூபாய்க்கு மேல், 2022ல் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், 'லேப்' அமைக்கப்பட்டது.

வீடியோதான் ஓடுது

ஆனால், தமிழக அரசு பள்ளிகளில் உள்ள இந்த லேப்கள், மாதம் ஒருமுறை படிப்பறிவுத்திறன் சோதித்தல், 'நான் முதல்வர்' வீடியோ பார்த்தல், சினிமா ஒளிபரப்பு, ஆசிரியர்களுக்கு ஆன்லைன் பயிற்சி, மொழி ஆய்வகம் உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் கணினி கல்வி பயிற்சி அளிக்கப்படுகிறது.இருப்பினும், இங்குள்ள, 6,454 பள்ளிகளில், 1,172 கணினி பயிற்றுநர்கள் உள்ளனர். பகுதிநேர பயிற்றுநராக, 763 பேர் உள்ளனர். மீதி, 5,794 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இது குறித்து, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: சி.பி.எஸ்.இ., தனியார் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதலே, 'ஐ.டி.,' எனும் கணினி கல்வி கற்பிக்கப்படுகிறது. குறிப்பாக, கணினி பயன்பாடு, மொழி, 'லாஜிக்கல் திங்கிங்' உள்ளிட்ட பலவற்றின் அடிப்படைகள் கற்று தரப்படுகின்றன. ஐ.சி.டி., திட்டத்தில், ஹைடெக் லேப்களை பெற்ற பஞ்சாப், 6,100க்கும் மேற்பட்ட தகுதியான பயிற்றுநர்களை நியமித்து, ஆறாம் வகுப்பு முதல் கணினி கல்வியை வழங்கி வருகிறது. அதேபோல தமிழகத்திலும் கணினி கல்வி பாடத்திட்டம் வகுத்து, 5,000க்கும் மேற்பட்ட கணினி பயிற்றுநர் பணியிடங்களை, மத்திய அரசு நிதியில் நிரப்பி இருந்தால், மாணவர்கள் பயனடைந்திருப்பர்.

மாற்றி விட்டனர்

இங்கு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும், கணினி அறிவியல் பாடப்புத்தகம் உள்ளது. ஆறு முதல் 10ம் வகுப்பு வரை, பாடத்திட்டமே வகுக்கப்படவில்லை. அதற்கென மாணவர்களுக்கு வகுப்பு நேரங்களும் ஒதுக்கப்படுவதில்லை.மேலும், அதன் பயன்பாட்டையே திசை மாற்றி விட்டனர். பயிற்றுநர் சம்பளத்தை, திட்ட நிதியில் ஒதுக்கீடு செய்தும், அவர்களை நியமிக்காதது, பாடத்திட்டத்தை உருவாக்காமல் இருப்பது உள்ளிட்டவற்றால், இத்திட்ட நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை.இதனால், அரசு பள்ளிகளிலும் கணினி கல்வி வந்துவிட்டால், தனியார் பள்ளிகளுக்கு வரவேற்பு குறைந்துவிடும் என்ற நோக்கம் காரணமா, என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 56 )

krishna
பிப் 23, 2025 23:00

INDHA NAATHAM PIDITHA TASMAC KANJA MANAL KANIMAVALA KOLLAI DRAVIDA MODEL AATCHI THUDAITHU ERIYA PATTAL THAMIZH NAATULKU NALLADHU GOPALAPURAM MAFIA KUMBAL IRUKKA VENDIYA IDAM PUZHAL SIRAI.


Sivasankaran Kannan
பிப் 23, 2025 22:35

இந்த திராவிட திருடர்கள் மொத்தத்தையும் சுருட்டி, ஹிந்தி எதிர்ப்பு நாடகம் போடுவாங்க.. 2026ல இந்த நாதாரிகளை விரட்டா விட்டால் தமிழ்நாடு மாணவர் எதிர்காலம் சாராயத்திலும், கஞ்சா போதையிலும் அழியும்.. பொதுமக்கள் விழித்துக்கொள்ள வேண்டும்


adalarasan
பிப் 23, 2025 22:09

மானாட மயிலாட போக்ராம்மே காணபிக்காமல் இருந்தால் சரி "


Bye Pass
பிப் 23, 2025 21:03

மனமகிழ் மன்றங்களாக மாற்றாமல் இருந்தால் நல்லது


M Ramachandran
பிப் 23, 2025 20:24

என் கல்வி எனது உரிமை. இதை எல்லா மாணவர்களும் பெற்றோர்களும் தந்தி அடித்து தமிழக அரசுக்கு அனுப்புங்கள்


nv
பிப் 23, 2025 20:14

திருட்டு திராவிட மாடலின் அவலம்.. இங்கு அப்பா மற்றும் அவரின் வாரிசுகள் எல்லாம் எவ்வளவு முடியுமோ, எங்கெல்லாம் முடியுமோ அனைத்தையும் சுருட்டி விடுவர்.. மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்


KavikumarRam
பிப் 23, 2025 19:08

இப்படி தாண்டா மத்திய அரசு கொடுக்கும் நிதியை கொள்ளையடிச்சிட்டு நிதி தரலன்னு ஊர ஏமாத்தி கொள்ளையடிக்கிறானுங்க இந்த நிதி குடும்பம்.


sankaranarayanan
பிப் 23, 2025 17:54

ஐ.சி.டி., எனப்படும், இன்பர்மேஷன் அண்டு கம்யூனிகேஷன் டெக்னாலஜி திட்டம் துவங்கி எங்களது ஆளும் கட்சிக்கு என்ன பயன் அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது ஆதலால் இதுபோன்ற எல்லாவித செலவுகளும் தடை செய்யப்பட்டு எங்களது தேர்தல் நிதிக்கு பயன்படும் வழியில் நாங்கள் இனிமேல் இவைகளை விட்டு விட்டுவிடுவோம் எங்களுக்கு முதலில் தேர்தலில் வெற்றிபெற்று தமையனை அரியணையில் உட்கார வைத்து அழகு பார்த்தபின்தான் மற்ற எல்லாவித செலவுகளும் செய்யப்படும் இது எங்களது ஆட்சியின் எங்களது அரசின் கெசட்டு அறிக்கையாகும்


Shunmugham Selavali
பிப் 23, 2025 16:52

இது திராவிட மாடல் அரசு. டாஸ்மாக் கடை அல்லது பார் வேண்டும் என்றால் உடணடியாக தெருவுக்கு தெரு கிடைக்கும். கல்வி என்று யார் கேட்டாலும் கோ பேக் மோடி என்று முழங்குவோம். இது திராவிட கூமுட்டைகள் நிறைந்த, 200 ரூபாய் ஓசி பிரியாணி குவாட்டர் இலவசங்களுக்கு வாக்களிக்கும் படிப்பறிவு இல்லாத படித்தும் நல்லது கெட்டது தெரியாத எருமைகள் நிறைந்த நாடு.


Veluvenkatesh
பிப் 23, 2025 15:40

அகில உலக துணை நடிகர் உதயண்ணா ரசிகர் மன்ற தலீவரு ஏரியா சூப்பர் மந்திரி அப்பா செயலி வெளியீட்டில் பிசியாக இருப்பதால், இது குறித்து அடுத்த வரும் தீயமுக ஆட்சியில் பரிசீலிக்கப்படும். ஒதுக்கீடு துகை மன்ற வளர்ச்சி நிதிக்கு செலவு செய்தாச்சு- போங்க போங்க கூட்டம் போடாதீங்க-உபி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை