உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்களை சந்தித்தால் நோய் இருந்தாலும் குணம் ஆகிவிடும்; முதல்வர் ஸ்டாலின்

மக்களை சந்தித்தால் நோய் இருந்தாலும் குணம் ஆகிவிடும்; முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''மக்களை சந்தித்தால் தான் எனக்கு, உற்சாகம் வரும். எனது உடலில் ஏதாவது நோய் இருந்தாலும் நல்லா ஆகிடும்'' என முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்தார்.'நலம் காக்கும் ஸ்டாலின்' என்கிற பெயரில் சிறப்பு மருத்துவ முகாம், தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது. சென்னையில் நடந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின் முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு, நேற்று முன் தினம், தலைமை செயலகம் அலுவலகத்திற்கு சென்று எனது வழக்கமான பணியை தொடங்கினேன்.

உற்சாகம் வரும்!

அப்போது எனது செயலாளர்கள் வெளி நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்க சொன்னார்கள். அது எல்லாம் தள்ளி வைக்க வேண்டாம். மக்களை சந்தித்தால் தான் எனக்கு, உற்சாகம் வரும். எனது உடலில் ஏதாவது நோய் இருந்தாலும் நல்லா ஆகிடும். எனவே மக்களி பணி செய்தால், எனது உடல் நலத்தை கொடுத்துடும் என்று சொல்லி தான் இங்கு வந்து இருக்கிறேன்.

மக்களின் நலன்

மருத்துவமனையில் இருந்துவிட்டு வந்த பிறகு, கோட்டைக்கு வெளியே நான் கலந்து கொண்டு பேசும் முதல் நிகழ்ச்சி இது. நாட்டு மக்களின் நலன் காக்கக்கூடிய நிகழ்ச்சி. நாட்டு மக்களுடைய நலன் தான் என்னுடைய நலன். https://www.youtube.com/watch?v=d1te2II2A8c நம் ஆட்சி பொறுப்புக்கு வந்த போது, என்ன நிலை இருந்தது என்று யாரும் மறந்து இருக்க மாட்டீர்கள். கொரோனா 2வது அலை, ஆம்பூலன்ஸ் தட்டுப்பாடு, ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு என தமிழகம் நெருக்கடியில் தவித்து கொண்டு இருந்தது. நான் உட்பட எல்லா அமைச்சர்களும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராகவே மாறிவிட்டோம். தடுப்பூசி எல்லோரும் போடுவதை உறுதி செய்தோம். கொரோனா நேரத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்க கூடாது என்று ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 2 தவணையாக ரூ.4 ஆயிரம் கொடுத்தோம். கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்தி இது தான் மக்களை காக்கும் அரசு என்று நிரூபித்தோம்.

இரண்டு கண்கள்

கல்வியும், மருத்துவமும் இந்த ஆட்சியின் இரண்டு கண்கள் என்று சொல்லி, மருத்துவத்திற்கு ஏராளமான திட்டங்களை தொடங்கி இருக்கிறோம். எல்லோருக்கு உடலில் சின்னச்சின்ன பிரச்னைகள் இருக்கும். அதற்காக அவரை நோயாளி என்று கூறக்கூடாது. நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு வருவோரை மருத்துவ பயனாளிகளாகவே பார்க்க வேண்டும்.

அக்கறை

குடும்பத்தில் ஒருவரைக் கவனிப்பது போல், முகாமிற்கு வரும் மக்களை மருத்துவப் பணியாளர்கள் அக்கறையுடன் கவனிக்க வேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். அப்படி நம்முடைய உடல் நலமாக இருந்தால் தான் மகிழ்ச்சி உடன் வாழ முடியும். உழைக்க முடியும், சாதிக்க முடியும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 68 )

Dv Nanru
ஆக 09, 2025 17:33

மக்களுக்கு நோய் பரவிடப்போகுது நீங்க அப்போலோ அமெரிக்க போய்விடுவீங்க பொது மக்கள் ஏழை மக்கள் GH தான் போகணும் ..


kumarkv
ஆக 09, 2025 15:51

இவர் நோய் எல்லாம் மக்களுக்தான் வரும்


நிக்கோல்தாம்சன்
ஆக 07, 2025 03:24

யார் சார் அவரு


Matt P
ஆக 06, 2025 07:43

இனிமேல் அப்போலோவுக்கோ லண்டவனுக்கோ போக மாட்டார் போல. அப்பா என்று அழைப்பதற்கு பதிலா தாத்தா என்றோ மாமா என்றோ அழைத்து பாருங்க. மக்களை சந்திப்பதையே நிறுத்தி விடுவார் என்று நமபலாம்.


Rajasekar Jayaraman
ஆக 03, 2025 08:51

பிரதமரை சந்திக்க பயந்து பொய் சொல்லி ஏமாற்றும் திருட்டு திராவிடம் அழிவு நிச்சயம்.


xyzabc
ஆக 02, 2025 20:32

அற்புதமான dialog டாக்டர்கள் தேவையில்லை. இன்னொரு திட்டம் "உங்களுடன் மருத்துவர் ஸ்டாலின் "


Anantharaman Srinivasan
ஆக 02, 2025 23:25

உங்களுடன் மருத்துவர் ஸ்டாலின் என்ற தலைப்பைவிட " Nature cure மருத்துவர் ஸ்டாலின்" என்று வைக்கலாம்


Veluvenkatesh
ஆக 02, 2025 20:23

ஆமா, ஒரு தீராத மன வியாதி பிடித்த கும்பலிடம் ஆட்சி அதிகாரரத்தை கொடுத்து விட்டு இந்த பாவப்பட்ட டாஸ்மாக் நாட்டு மக்கள் தினம் தினம் ரத்த கண்ணீர் வடிப்பதற்கு ஏதாவது மருந்து இருந்தா சொல்லுங்க அண்ணாச்சி?


Nathan
ஆக 02, 2025 20:08

தன்னிடம் ஏமாந்தவர்களை பார்த்தால் ஏமாற்றியவர் குஷியாக இருப்பதும் அதனால் ஏமாற்றியவர் மகிழ்ச்சியால் உடல் நலம் பெறுவதும் உளவியலில் உண்மை தான்


தமிழ்வேள்
ஆக 02, 2025 19:07

இவரை சந்திக்கும் மக்களுக்கு பிடிக்கும் மன வியாதிகள்/ உளைச்சலுக்கு என்ன மருத்துவம்? என்ன மருந்து ...கிடைக்கும்?


GoK
ஆக 02, 2025 19:04

ஆனால் இன்னும் பிரதமரின் மூத்தோர்களுக்கான 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய்க்கான காப்பீட்டு திட்டத்தை முடக்கி வைத்திருக்கிறார் இந்த "ஆரோக்கியமான" ஆனால் அயோக்கிய முதல்வன். இந்தியாவிலே அந்த திட்டம் செயல் படாதது இங்கும் மேற்கு வங்கத்திலும்தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை