வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இவரு ஈரோடு கிழக்கு தொகுதியில் நின்றதற்கு பதிலாக மியாட் அல்லது அப்பல்லோ தொகுதியில் நின்றிருக்கலாம். வென்றதில் இருந்து தொகுதிக்கு போகாமல் ஆஸ்பத்திரிக்கு செல்வதிலேயே காலம் கடத்துகிறார்.
சென்னை:ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் இளங்கோவன், 75; தமிழக காங்., முன்னாள் தலைவர். சென்னை மணப்பாக்கத்தில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன், காய்ச்சல் பாதிப்பு மற்றும் சளி தொல்லையால், சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைகள் தொடர்ந்த நிலையில், அவருக்கு, நுரையீரலில் சளி தொற்று அதிமாகி, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே, தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து, டாக்டர்கள் கூறுகையில், 'காங்., தலைவர் இளங்கோவனுக்கு, செயற்கை சுவாச கருவி பொருத்தி, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நிலை முன்னேற்றம் குறித்து கண்காணித்து வருகிறோம்' என்றனர்.
இவரு ஈரோடு கிழக்கு தொகுதியில் நின்றதற்கு பதிலாக மியாட் அல்லது அப்பல்லோ தொகுதியில் நின்றிருக்கலாம். வென்றதில் இருந்து தொகுதிக்கு போகாமல் ஆஸ்பத்திரிக்கு செல்வதிலேயே காலம் கடத்துகிறார்.