உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு: மார்ச் 19ல் பொன்முடி நேரில் ஆஜராக உத்தரவு

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு: மார்ச் 19ல் பொன்முடி நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமைச்சர் பொன்முடி மார்ச் 19ல் நேரில் ஆஜராக சென்னை சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2006-2011 ல் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி மீது ரூ.28.26 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குபதிவு செய்திருந்தது.இந்த வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை மற்றும் 26 கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்தது. இதில் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோர் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.இந்த கூடுதல் குற்றப்பத்திரிகை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழில் வேலவன், பொன்முடி, அவரது மகன்கள் கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி உள்ளிட்டோர் மார்ச்-19 அன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

மால
மார் 05, 2025 19:02

ஒன்னும் ஆகாது. ஏமாளி சசி மட்டும்தான்


kumar
மார் 05, 2025 18:27

இவர்களுக்கெல்லாம் தண்டனை கொடுக்கவே முடியாது.. ஏற்கனவே குற்றவாளி என்று தீர்ப்பில் அறிவிக்கப்பட்ட பொன்முடியை உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.. அவர் தற்போது அமைச்சராக உள்ளார்..ஏழைக்கு ஒரு நீதி பணக்காரனுக்கு ஒரு நீதி...நீதிபதிகளுக்கே வெளிச்சம்


Sesh
மார் 05, 2025 18:14

அடுத்த வாய்தா ஜூன் 10-2026......


Rajan A
மார் 05, 2025 17:50

அய்யா வயதாகிவிட்டது. இப்போதெல்லாம் கட்சி ஊர்வலத்தில் குத்தாட்டம் மட்டுமே போட முடிகிறது. இன்னும் ஒரு 1 வருடத்திற்கு பின்பு எப்படியும் சும்மா இருக்கும்போது வருகிறேன்


முக்கிய வீடியோ