உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டவிரோத டிக்கெட் முன்பதிவு செய்த 4975 பேர் கைது! தெற்கு ரயில்வே தகவல்

சட்டவிரோத டிக்கெட் முன்பதிவு செய்த 4975 பேர் கைது! தெற்கு ரயில்வே தகவல்

சென்னை; சட்டவிரோத டிக்கெட் முன்பதிவு செய்த 4975 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம்; இந்தியா முழுவதும் ரயில்வேயில் போலி டிக்கெட் முகவர்கள் மற்றும் கள்ளச் சந்தையில் டிக்கெட் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வேயின் வணிக பிரிவு அதிகாரிகள், ஐ.ஆர்.சி.டி.சி. ஆகியவை இணைந்து இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், டிக்கெட் கவுன்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி ஒரே நேரத்தில் பெருவாரியான டிக்கெட்டுகளை எடுப்பவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதன்படி, கடந்த ஆண்டில் நாடு முழுவதும் நடத்திய பல்வேறு கட்ட சோதனைகளில், சட்ட விரோத டிக்கெட் முன்பதிவு தொடர்பாக மொத்தம் 4,725 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. டிக்கெட் முன்பதிவில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட 4975 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ரூ.53 கோடியே 38 லட்சம் மதிப்புள்ள 1,24,529 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, தட்கல் மற்றும் 100க்கும் மேற்பட்ட முன்பதிவு முறைகேடுகளில் ஈடுபட்டதை கண்டறிந்து 26,442 இணையதள ஐ.டி.கள் முடக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Subash BV
ஜன 21, 2025 18:34

SUITCASES POLITICS. STANDARD IN EVERY GOVT DEPARTMENT. THATS WHY TELLING DOING BUSINESS IS NOT GOVT BUSINESS, BECAUSE THEY ARE MORE BOTHERED ABOUT THEIR PURSES THAN THE NATION. WAKE UP.


V Gopalan
ஜன 21, 2025 16:48

BJP Govt is only paper tiger or need publicity. There is only one train from Mysore to Tuticorin in which availability of tickets will be a nightmare. Whereas beyond imagine, trains are being run to Kerala, it is not known as whether the Southern States are given a clear title deed only for Kerala. Besides, besides just because of availability of lands the terminal of SMVT Sir Visweswaraiah Terminal is far away, thank God, terminal is not formed in Bangarpet or Jolarpet. Train services for general public or for a rich. Train fare will be Rs.200 but auto fare from SMVT will be double the amount. Without proper planning, Railway is functioning. Why not they run some more trains from Mysore to Madurai and beyond. Why at all Kanyakumari to Bengaluru to run via Kerala. Having two Ministers, 40 MPs, from Tamilnadu they serve for Kerala and not Tamilnadu. Again, in the trains, cockroaches, rats are being given accommodation freely along with the passengers to perform journey. Middle class and below poverty needs trains which are affordable and not Vande Bharat. Absolutely, the BJP Govt is failed to meet the common mans needs.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜன 21, 2025 09:27

இதெல்லாம் சரிதான். ஆனால், இது எதனால் நடக்கிறது. ரயில்வே டிக்கெட்டுகளின் தேவை அதிகமிருக்கிறது. சேவை குறைவு. போதிய ரயில்களை இயக்கினால் இந்த மாதிரி திருட்டுத்தனங்களுக்கு தேவையில்லை. ஆனால், அரசு அதை செய்யாமல் அரசே தட்கல், ப்ரீமியம் தட்கல் என்று கட்டணக்கொள்ளையில் ஈடுபடுவதை யார் கேட்பது? அது என்ன நியாயம்?


சமீபத்திய செய்தி