உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க., பிரமுகரை கொன்றோருக்கு பிரியாணி கடையில் ரகசிய அறை அமைத்து அடைக்கலம் தந்தேன் கைதான இம்தாத்துல்லா வாக்குமூலம்

பா.ம.க., பிரமுகரை கொன்றோருக்கு பிரியாணி கடையில் ரகசிய அறை அமைத்து அடைக்கலம் தந்தேன் கைதான இம்தாத்துல்லா வாக்குமூலம்

சென்னை:'பா.ம.க., பிரமுகர் ராமலிங்கத்தை கொலை செய்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தேன்' என, கைதான இம்தாத்துல்லா, என்.ஐ.ஏ., அதிகாரிகளிடம் தெரிவித்துஉள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் மர்ம நபர்களால், 2019ல், பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம் கொல்லப்பட்டார். இவ்வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இம்தாதுல்லா,35, என்பவரை கைது செய்தனர். ஐந்து நாள் காவலில் உள்ள இ வர், என்.ஐ.ஏ., அதிகாரிகளிடம் அளித்துள்ள வாக்குமூலம்: நாங்கள், 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' என்ற அமைப்பில் இருந்தோம். இந்த அமைப்பின் சார்பில், தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில், ஹிந்துக்களை மத மாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டோம். திருபுவனத்தில் மத மாற்றம் செய்ய, மக்களை சந்திக்க சென்ற போது ராமலிங்கம் தடுத்தார். கடுமையான வார்த்தைகளால் திட்டினார். இதனால், அவரை கொலை செய்ய, 18 பேர் சேர்ந்து தீர்மானித்தோம். கொலைக்கான சதி திட்டம், தேனி மாவட்டம் முத்துதேவன்பட்டியில் செயல்பட்டு வந்த, அறிவகம் என்ற முஸ்லிம் மத பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தீட்டப்பட்டது. அதன்படி, ராமலிங்கத்தை கொலை செய்த பின் தலைமறைவானோம். 'எங்கள் கூட்டாளிகள் ஐந்து பேர் குறித்து துப்பு கொடுத்தால், தலா 5 லட்சம் ரூபாய் தரப்படும்' என, என்.ஐ.ஏ., அறிவித்தது. நான் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆம்பூர் பிரியாணி என்ற பெயரில் கடை நடத்தி வந்தேன். இந்த கடையில் ரகசிய அறை அமைத்து, என்.ஐ.ஏ., அதிகாரிகளால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாஹூல் ஹமீது, நபில் ஹாசன், அப்துல் மஜீத் ஆகியோருக்கு அடைக் கலம் கொடுத்தேன். இவர்களை கொடைக்கானலில் உள்ள பூம்பாறை என்ற இடத்திலும் தங்க வைத்து நிதி உதவி செய்து வந்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Krishnamurthy Venkatesan
அக் 14, 2025 21:19

கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் அவருக்காக பாமக, பாஜக, அதிமுக போன்ற கட்சிகள் மிக பெரிய அளவில் போராட்டம் செய்திருக்க வேண்டாமா? மத தீவிரவாதிகளை எந்த மதமாக இருந்தாலும் வேரோடு ஒடுக்க வேண்டும்.


Yaro Oruvan
அக் 13, 2025 18:03

மக்கள் இந்த பிரியாணி கும்பல் நடத்தும் வணிக நிறுவனங்களை தவிர்த்தால் அவர்கள் திருந்துவார்கள் .. செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா


shakti
அக் 13, 2025 16:30

பிரியாணி கடை , மசூதி , தர்காஹ் போன்ற பல இடங்களில் பங்கர் அறைகள் உள்ளனவா என்ற சந்தேகம் பல நாட்களாக உண்டு


Sesh
அக் 14, 2025 14:33

சந்தேகம் தேவையில்லை . கண்டிப்பாக உண்டு .ரகசிய அறை ஆயுதம் , தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்.


Natchimuthu Chithiraisamy
அக் 13, 2025 10:24

நாங்கள், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பில் இருந்தோம். இந்த அமைப்பின் சார்பில், தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில், ஹிந்துக்களை மத மாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டோம்.


m.arunachalam
அக் 13, 2025 07:49

பிரியாணி பைத்தியங்கள் மறைமுகமாக இதற்கு துணைபோகின்றார்கள் . தெளிதல் நலம்.


நிக்கோல்தாம்சன்
அக் 13, 2025 07:49

அறிவகம் ??? எப்பா நாத்திகம் பேசும் தமிழக திராவக கழகத்தினரே , நீங்க இப்பயாவது முழியுங்க , கடவுள் ,இறை , தூதர் இல்லை என்று சொன்னால் மட்டுமே நாத்திகம் இல்லையா , உங்களின் தாயின் கற்பை விற்பதை போன்றாகும் என்பதனை ஒத்துக்கொள்ளுங்க