உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 12 இடங்களில் எலி மருந்து வைத்ததே காரணம்; 2 குழந்தைகள் உயிரிழப்பில் பகீர்

12 இடங்களில் எலி மருந்து வைத்ததே காரணம்; 2 குழந்தைகள் உயிரிழப்பில் பகீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை குன்றத்தூரில் உள்ள வீட்டில் எலி மருந்து வைத்து 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வீட்டில் 3 இடங்களுக்கு பதிலாக 12 இடங்களில் எலி மருந்து வைத்ததே உயிரிழப்புக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர்.சென்னை, குன்றத்துார் அருகே, மணஞ்சேரியைச் சேர்ந்தவர் கிரிதரன், 34. குன்றத்துாரில் ஒரு தனியார் வங்கி மேலாளர். இவரது வீட்டில், எலிகள் தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இதை கட்டுப்படுத்த, எலி மருந்து அடிக்கும் தனியார் நிறுவனத்தை, ஆன்லைனில் தொடர்பு கொண்டுள்ளார். இதையடுத்து, நிறுவனம் சார்பாக ஒரு ஊழியர், கிரிதரன் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு வந்துள்ளார். வீட்டின் உட்புறம் அளவுக்கு அதிகமாக மருந்து அடித்து சென்றுள்ளார்.பின், இரவு உணவு சாப்பிட்டு, மனைவி பவித்ரா, 30, மகள் விஷாலினி, 6, மகன் சாய் சுதர்சன், 1, ஆகியோருடன், கிரிதரன் படுத்து உறங்கினார். நேற்று காலை எழுந்ததும், அனைவருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்குடன் மயக்கம் ஏற்பட்டது. பெற்றோர், இரு குழந்தைகள் என, நான்கு பேரும் மீட்கப்பட்டு, குன்றத்துார் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, மகள் விஷாலினி, மகன் சாய் சுதர்சன் ஆகியோர், சிகிச்சை பலனின்றி இறந்தனர். கிரிதரன், பவித்ரா ஆகியோர், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இவர்கள் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டனர் என டாக்டர்கள் தெரிவித்தனர். குன்றத்துார் போலீசார் விசாரித்து, தி.நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் இருவரை கைது செய்தனர். நிறுவன உரிமையாளர் பிரேம்குமாரை தேடி வருகின்றனர்.போலீசார் விசாரணையில், 'வீட்டின் அறையில் 3 இடங்களுக்கு பதிலாக 12 இடங்களில் எலி மருந்து வைத்ததே 2 குழந்தைகள் இறப்புக்கு காரணம்' என்பது தெரியவந்தது. வேளாண் துறையில் கடிதம் கொடுத்துவிட்டு நிறுவனத்திற்கு சீல் வைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

aaruthirumalai
நவ 15, 2024 22:22

தல அரட்டை ஊழியர்கள் இப்ப அதிகம். அனுபவம் ரொம்ப குறைவே.


தமிழ்வேள்
நவ 15, 2024 20:29

24ஆம் எலிகேசி மன்னர் அஞ்சு லட்சம் நிவாரணம் தருவாரா?


Natchimuthu Chithiraisamy
நவ 15, 2024 19:51

எல்லாமே ஆன்லைன் தான். அவனுக்கு தெரிந்தது அவனிடம் நச்சரித்தது பலன் பெற்றது இது செய்தி அல்ல!மற்றவர்களுக்கு எச்சரிக்கை. குழந்தைகளை எதற்கெடுத்தாலும் ஆன்லைன் என்று பழக்கப்படுத்தாதீர்கள்.


sundarsvpr
நவ 15, 2024 15:26

ஐந்து அறிவு உள்ள பிராணி பூச்சிகளால் உயிர் இழக்கிறோம். அவஸ்தைப்படுகிறோம் . அதனால் இவைகளை மருந்து வைத்து கொல்லுகிறோம் ஆறு அறிவுயுள்ள மனிதன் இவ்வாறு செய்வது தவறு. 2024க்கு முன் எலிப்பொறி வைத்து பிடிப்பார்கள். எலியை கொல்லாமல் ஊருக்கு வெளியில் எலிப்பொறியை திறந்துவிடுவார்கள். இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு தடுக்க ஏன் முடியவில்லை? விஷம் வைத்து எலியை கொல்வது சரியென்றால் .. இந்த விசம்தான் உங்கள் குழந்தைகளை கொன்றுள்ளது. சரிக்கு சரி. எலி குழந்தைகளை கொல்லவில்லை எலிகள் நிரபராசிகள். ஊழல் செய்த அரசியல்வாதிகள் நடமாடும்போது எலிகள் வீட்டில் ஓடினால் என்ன நஷ்டம்?


கனோஜ் ஆங்ரே
நவ 15, 2024 17:54

தோ வந்துட்டாருய்யா... ஜீவகாருண்ய கட்சித் தலைவரு...? இவர் “பீட்டா” கட்சி தலைவர் போலிருக்கு...? உன்னை ராத்திரியில எலி கடிச்சு... அதுனால எலி ஜுரம் வந்தா தெரியும்... எலியோட மகிமை...?


SUBRAMANIAN P
நவ 15, 2024 15:11

சுத்தம்.. அடுத்த பிரச்சனையா... என்னால தூங்கவே முடியல.. நாளைக்கு என்ன பிரச்சனை வரப்போகுதோ ? முதல்வர் புலம்பல்.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 15, 2024 14:56

விஷ மருந்து குறித்த வழி காட்டு நெறிமுறைகள் ஏதும் இல்லையா ???? வேதனை தரும் நிகழ்வு ......


Nandakumar Naidu.
நவ 15, 2024 14:31

மிகவும சோககமான செய்தி. யாரை குறை சொல்வது? எல்லாம் விதி என்று தான் சொல்ல வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை