உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாட்கோவில் ரூ.10 லட்சம் கடனுக்கு ரூ.3.5 லட்சம் மானியம்: 2 ஆண்டில் 4,687 பேர் பெற்று சுயதொழில் செய்கின்றனர்

தாட்கோவில் ரூ.10 லட்சம் கடனுக்கு ரூ.3.5 லட்சம் மானியம்: 2 ஆண்டில் 4,687 பேர் பெற்று சுயதொழில் செய்கின்றனர்

தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த, 4,687 பேர், கடந்த இரண்டு ஆண்டுகளில், தாட்கோ வில் மானியத்துடன் கூடிய கடன் பெற்று, சுயதொழில் செய்து முன்னேறி வருகின்றனர்.தமிழ்நாடு ஆதிதிரா விடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகமான தாட்கோ நிறுவனம் சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தினரின் பொருளாதார மேம்பாட்டிற்காக, பல்வேறு உதவிகள் செய்யப் படுகின்றன. இச்சமூக மக்கள் தொழில் துவங்க, தொழிலை விரிவுபடுத்த மத்திய - மாநில அரசு வழங்கும் மானியத்துடன் கூடிய கடன், தாட்கோ வழியே வழங்கப் படுகிறது.முதல்வரின் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் அருந்ததியர் சமூக மக்களுக்கு, அதிக பட்சம் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இதில், 3.5 லட்சம் ரூபாய் மானியம்.https://x.com/dinamalarweb/status/1949629159824851290முதல்வரின் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் அருந்ததியர் சமூக மக்களுக்கு, அதிக பட்சம் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இதில், 3.5 லட்சம் ரூபாய் மானியம்.இத்திட்டத்தின் கீழ், கடந்த இரண்டு ஆண்டுகளில், 4,687 பேர் பயன் அடைந்துள்ளனர். ஆட்டோ வாங்குதல், அழகு நிலையம் அமைத்தல் என, 15 பிரிவுகளின் கீழ், 89 கோடி ரூபாய் மானியத்துடன் கூடிய கடன் பெற்றவர்கள், சுய தொழில் துவங்கி முன்னேறி வருகின்றனர்.இத்திட்டத்தின் கீழ், கடந்த இரண்டு ஆண்டுகளில், 4,687 பேர் பயன் அடைந்துள்ளனர். ஆட்டோ வாங்குதல், அழகு நிலையம் அமைத்தல் என, 15 பிரிவுகளின் கீழ், 89 கோடி ரூபாய் மானியத்துடன் கூடிய கடன் பெற்றவர்கள், சுய தொழில் துவங்கி முன்னேறி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் சிறியதாக பேனர் அச்சிடும் கடை வைத்து, தொழில் செய்து வந்தேன். அதில், போதிய லாபம் கிடைக்கவில்லை. 'பிரின்டிங் இயந்திரம் வாங்குவது' என் நீண்ட நாள் கனவு. தற்போது, அது நனவாகி உள்ளது. தாட்கோவில் விண்ணப்பித்து, 10 லட்சம் ரூபாய் கடன் பெற்று, 'பிரின்டிங்' இயந்திரம் வாங்கி உள்ளேன். டிசைன் மற்றும் அச்சிடுதல் இரண்டும் செய்வதால், மாதம் 1 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. - கார்த்திக், நாமக்கல் மாவட்டம், அருந்ததியர் தெரு. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத, காகிதப்பை உற்பத்தி செய்யும் தொழிலை தேர்வு செய்து, தாட்கோவில் விண்ணப்பித்து, 3 லட்சம் ரூபாய் கடன் பெற்று தொழில் துவங்கினேன். இயந்திரம் வாங்கி, நேரடி தயாரிப்பில் ஈடுபடுவதால், மாதம், 50,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது. - சரண்யாதேவி, தென்காசி மாவட்டம். தாட்கோவில் கடன் பெற்று எங்களது பர்னிச்சர் தொழிலை விரிவுபடுத்திய பின், மாதம் 80,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. - அண்ணாதுரை, தென்காசி மாவட்டம். அதிகாரிகள் அலட்சியத்தால் பயன் பெறாத மாவட்டங்கள் கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, தென்காசி ஆகிய மாவட்டங்களில், 25க்கும் குறைவான நபர்களே, கடந்த ஆண்டு தாட்கோ வழியே கடன் பெற்றுள்ளனர். மாவட்ட மேலாளரின் அலட்சியம், ஆளும் கட்சியினர் சிபாரிசு, இடைத்தரகர் ஆதிக்கம் உள்ளிட்ட பிரச்னையால், பயனாளிகள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. இப்பிரச்னையில் தாட்கோ இயக்குநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

gnanaprakasam gnanaprakasam
ஜூலை 31, 2025 20:42

ஐயா வணக்கம், நான் நான் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் திருமந்துரை கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் சிறு தொழில் தொடங்குவதற்க்காக தாட்கோ மூலம் விண்ணப்பித்து இருந்தேன். நான் விண்ணப்பித்து இன்றுடன் 7 மாதம் முடிந்து விட்டது ஆனால் இன்னும் எனக்கு லோன் கிடைக்க வில்லை.


Shanmugam Ilangumanan
ஜூலை 31, 2025 11:08

வாழ்க்கை வழிகாட்டி


Sathiya Jothi
ஜூலை 29, 2025 17:58

நாங்கள் 12 வருடங்களாக வுட் கார்விங் ஒர்க் நடத்தி வருகிறோம்.எங்களுக்க்கு அரசாங்கத்திடமிருந்து,எந்த லோன் வசதியும் தரவில்லை,தனியார் நிறுவனத்தில் தான் லோன் வாங்கி கட்டுகிறோம் .தாட் கோ மூலம் லோன் கிடைத்தால் எங்களுக்கு உதவியாக இருக்கும் .Ramanadhapuram


sarath pavi
ஜூலை 29, 2025 15:05

மானியங்கள் பொய் சொல்றாங்க சார் மானியமா வரல ஒன்னும் வரல சார் ரெண்டு வருஷம் ஆச்சு சார் இந்த ஆபீஸ் போய் சொல்றாங்கன்னு தெரியல எல்லா அரசாங்கம் பொய் சொன்னா இன்டர்வியூ அட்டென்ட் பண்ண வச்சாங்க லெட்டர் வீட்டுக்கு வந்துச்சு எல்லாரும் வந்துருங்க ஆனா மானியம் மட்டும் ஒத்துக்கணும் கேட்டா பணம் இல்லை உண்மையா பொய்யான என்று கேட்டு பதில் நீங்க தான் சார் சொல்லணும்


Mohan
ஜூலை 29, 2025 17:56

கரெக்ட்.பூரம் விளம்பரம் மட்டும்தான் அப்படியே மானியம் கொடுத்தாலும் 100க்கு 50 பர்ஸன்ட் கட்சிக்காரனுக்கும், ஆஃபீசிஎல் வேலை பாக்குறவனும் தின்னுட்டு போவனுக .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை