உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரு சம்பவங்களில் 5 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

இரு சம்பவங்களில் 5 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

கும்பகோணம் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், பாரத் நகரை சேர்ந்தவர் ராஜேஷ், 42; கோவை தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி ஆர்த்தி, 40; தனியார் வங்கி ஊழியர். இவர்களின் மகள்கள் ஆருத்ரா, 11, சுபத்ரா, 7.நேற்று மதியம் ஆர்த்தி, பாபநாசத்தில் தோழி வளைகாப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு, இரண்டு மகள்களுடன் உத்தாணி பகுதியில், கண்களை கட்டியபடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். கும்பகோணம் ரயில்வே போலீசார் உடல்களை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர். இதே போல, திருவிடைமருதுார், கட்டளை தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ரேவதி, 50, மகள் மகேஸ்வரி, 30, ஆகியோர் நேற்று மாலை மயிலாடுதுறையில் இருந்து மைசூரு சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்