உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு; பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்பு

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு; பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை ; ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பால துவக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்புள்ளதாக பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்தனர்.ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் கடலுக்குள் பாம்பனில் ரயில்வே பாலம் உள்ளது. இப்பாலம் கடல் காற்றால் அடிக்கடி துருப்பிடிப்பது, பராமரிப்பதில் அதிக செலவு பிடிப்பதாக இருந்தது. இந்த இடத்தில் ரயில்கள் செல்கையில் வேககட்டுப்பாடு காரணமாக 10 கி.மீ., வேகத்தில் சென்று வந்தன.எனவே புதிய பாலத்தை நவீனமாக மாற்றி அமைக்க ரூ.550 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் முடிவடைந்து விட்டன. பாலத்தின் உறுதித் தன்மை குறித்த ஆய்வுகள் நடக்கின்றன. பழைய பாலம் இரண்டாக பிரிந்து இருபுறமும் பாலம் மேல்நோக்கி உயரும் வகையில் இருந்தது. தற்போது அமைய உள்ள பாலம் கடலில் கப்பல்கள் வரும்போது 'சென்சார்' உதவியால், பாலத்தின் பகுதி செங்குத்தாக மேல்நோக்கி உயரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இம்முறையில் அமையும் முதல் பாலம் இது.வடக்கே காசியைப் போல தேசிய அளவில் தெற்கே ஆன்மிக பூமியான ராமேஸ்வரத்திற்கு முக்கியத்துவம் உள்ளதால் பிரதமர் இவ்விழாவில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. அதற்கேற்ப ரயில்வே பொது மேலாளர் முதல் தொழில் நுட்ப நிபுணர்கள் வரை தொடர்ந்து பாலத்தை ஆய்வு செய்து வருகின்றனர். நவ.,13, 14 ல் இந்திய பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு செய்ய உள்ளார்.அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து, துவக்க விழா டிச.,4 முதல் 12ம் தேதிக்குள் இருக்கலாம். நவ.,27 க்குள் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை லண்டனில் அரசியல் படிப்பை முடித்து தாயகம் திரும்புகிறார். அவர் வந்தபின் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க உள்ளது. 2026 சட்டசபை தேர்தலுக்கான பணிகளை துவக்கும் வகையில் கோவையில் பிரமாண்ட மாநாடு நடத்த உள்ளார். உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்து மாநாடு நடப்பதாக உள்ள நிலையில், பிரதமரை பங்கேற்க செய்ய அண்ணாமலை ஆர்வம் காட்டுகிறார். இதனால் ராமேஸ்வரம் நிகழ்ச்சியுடன், பா.ஜ., மாநாட்டிலும் பங்கேற்கும் வகையில் பிரதமர் வர வாய்ப்புள்ளதாக கட்சியினர் கருதுகின்றனர்.வடக்கே காசியைப் போல தேசிய அளவில் தெற்கே ஆன்மிக பூமியான ராமேஸ்வரத்திற்கு முக்கியத்துவம் உள்ளதால் பிரதமர் இவ்விழாவில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Hakkim Hakkim
நவ 09, 2024 19:52

ஹாய்


சாண்டில்யன்
நவ 08, 2024 08:04

A metre-gauge railway ran along the bridge since its inception in 1914 till 2007 when it was upgraded to a 5ft 6in broad gauge line. The railway line connected Mandapam in mainland India and the பாம்பன் island via the bridge. A metre-gauge railway ran along the bridge since its inception in 1914 till 2007 when it was upgraded to a 5ft 6in broad gauge line.


Duruvesan
நவ 08, 2024 07:06

இதெல்லாம் யார் வேணா பண்ணட்டும், டாலர் மதிப்பு கூடி நெத்தி நம்மோட ரூவா வரலாறு காணாத இரக்கம். சும்மா பீலா உட்டுனு இறுக்கமா எதுனா பண்ணுங்க,


Edward,Aruppukkottai 626105
நவ 08, 2024 09:06

உன்னைப் போன்ற அறிவிலிகள் எல்லாம் Share market ஐ பற்றி பேசுவதுதான் வியப்பாக உள்ளது.


Svs Yaadum oore
நவ 08, 2024 07:01

ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே 1964-ம் ஆண்டு துண்டிக்கப்பட்ட அகல ரயில்பாதையை சீரமைக்க 2019 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார் ......ஆனால் விடியல் மதம் மாற்றிகள் அரசு 17.2 கி.மீ புதிய பாதை திட்டத்தை ஐந்தாண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளது .... காரணம் சுற்று சூழல் பாதிப்பாம் ...இந்த திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பை மாநில அரசு திரும்ப பெற்றுள்ளது ..இதற்கு என்ன காரணம் என்று விடியல் மதம் மாற்றிகள் விளக்கம் கொடுப்பார்களா ??.....கன்யாகுமரியில் மலையை வெட்டி கேரளாவுக்கு ஏற்றுமதி ..... விடியல் கார்பொரேட் முதலாளிகள் சம்பாதிக்க மக்கள் எதிர்ப்பை மீறி சென்னை பரந்தூர் விமான நிலையத்திற்கு 4000 ஏக்கர் விவசாய நிலம் ....இதனால் சுற்று சூழல் பாதிப்பு வராதாம் ...ஆனால் தனுஷ்கோடி ரயில் பாதைக்கு மட்டும் மதம் மாற்றிகளுக்கு சுற்று சூழல் பாதிப்பாம் ...


சாண்டில்யன்
நவ 08, 2024 07:55

ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே 1964-ம் ஆண்டு துண்டிக்கப்பட்ட "அகல ரயில்பாதை" ? அப்போதே அங்கே அகல ரயில் பாதை இருந்ததா எதோ தாது பித்துன்னு ஒளறுவற்காகவே உள்ளது இதில் முரசொலி வாசகர்னு கிண்டல் வேறு நடத்துங்க


Duruvesan
நவ 08, 2024 06:39

திராவிடம் உள்ள வரை பிஜேபி இங்கு நோட்டாவுக்கு கீழ் தான் என மிதல்வர் கூறி உள்ளார்


Kannan Chandran
நவ 08, 2024 07:50

பாவம் அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான், இன்றுவரை சுதந்திர தினத்திற்கு குடியரசு தினத்திற்கு வித்தியாசம் தெரியாத விடியலாருக்கு இதுமட்டும் தெரியுமா என்ன..


சரவணன்,துறையூர்
நவ 08, 2024 09:09

அப்படியே உன்னைப் போன்ற அறிவாலய கொத்தடிமைகள் இருக்கும் வரை என்ற வார்த்தையை சேர்த்திருக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை