பாலுக்கு ஊக்கத்தொகை
சென்னை:கறவை மாடுகள் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், ஆவினுக்கு பால் வழங்கும் அனைவருக்கும், லிட்டருக்கு 3 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க, அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, 2025 மார்ச் வரை, 407 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. 3.80 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைந்துள்ளனர். கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்திற்கு, 128 கோடி ரூபாய், தற்போது விடுக்கப்பட்டு உள்ளதாக, அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.