உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆணவ கொலைகள் அதிகரிப்பு: ஐகோர்ட் வேதனை மாணவர் மரண வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்

ஆணவ கொலைகள் அதிகரிப்பு: ஐகோர்ட் வேதனை மாணவர் மரண வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் ஆணவ கொலைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கடலுார் கல்லுாரி மாணவர் மரணம் குறித்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.கடலுார் மாவட்டத்தில் உள்ள அரசகுளி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஜெயசூர்யா. இவர், அப்பகுதியில் உள்ள கல்லுாரியில் பி.காம்., படித்து வந்தார். கடந்த மே 18ல் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.மரணத்தில் சந்தேகம்இந்நிலையில், தன் மகன் ஆணவ கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும், வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மாணவரின் தந்தை முருகன் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு, நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.அரசு கணேசன் வாதாடியதாவது: கல்லுாரியில் உடன் படித்த மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த மாணவியை காதலித்ததால், அந்த மாணவியின் உறவினர்கள், மனுதாரரின் மகனை அடிக்கடி மிரட்டி உள்ளனர்.கல்லுாரியில் உடன் படிக்கும் மாணவர் பிரவீன் என்பவர், மே 18ல் வலுக்கட்டாயமாக பைக்கில் ஜெயசூர்யாவை அழைத்து சென்றுள்ளார்; பின், வீடு திரும்பவில்லை. பல முறை மொபைல் போனில் தொடர்பு கொண்டதில், ஒரு முறை போனை எடுத்து, பிரவீன், ஜீவன் ஆகியோருடன் இருப்பதாக மனுதாரரிடம் தெரிவித்துள்ளார்.சிறிது நேரத்தில் மனுதாரரை அழைத்து, சாலை விபத்தில் ஜெயசூர்யா இறந்து விட்டார் என, குள்ளஞ்சாவடி போலீசார் கூறியுள்ளனர். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தும், போலீசார் மெத்தனப்போக்குடன் உள்ளனர். எனவே, விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் வாதாடினார்.அப்போது, போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், 'விசாரணை இன்னும் நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில், அதிவேகமாக பைக் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது.'சம்பவம் நடந்த அன்றிரவு, மூவரும் கடலுாரில் இருந்து, தங்கள் கிராமத்திற்கு திரும்பியபோது, பைக் சாலையோர மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மரணத்திற்கான காரணத்தை கண்டறிய, பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்' என தெரிவித்தார்.விசாரணை அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 'பாதிக்கப்பட்டவர் விபத்தில் இறந்தாரா அல்லது யாராவது வலுக்கட்டாயமாக அழைத்து சென்று கொலை செய்தனரா என்பதை பிரேத பரிசோதனை வாயிலாக அறிய முடியுமா? பிரேத பரிசோதனைக்கும், சம்பவம் நடந்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை. முழுமையான விசாரணை மட்டுமே, வழக்கில் உண்மையை வெளிக் கொணரும்' என்றார்.

பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

தமிழகத்தில் ஆணவ கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆனால், துரதிருஷ்டவசமாக இது போன்ற குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. ஆணவ கொலை அதிகரித்து வந்தாலும், உண்மை வெளியில் வருவதில்லை. இந்த வழக்கை பொறுத்தவரை, மாவட்ட காவல் துறையின் விசாரணையில், நீதிமன்றத்துக்கு சந்தேகம் உள்ளதால், விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றுவதற்கு, இது பொருத்தமான வழக்கு.எனவே, ஆணவ கொலை என்ற சந்தேகம் உள்ளதால், விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்படுகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்களை, இரண்டு வாரங்களில் சி.பி.சி.ஐ.டி., வசம் குள்ளஞ்சாவடி போலீசார் ஒப்படைக்க வேண்டும். சி.பி.சி.ஐ.டி., நியாயமாக விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

சிந்தனை
ஆக 05, 2025 16:42

இந்த நாட்டின் பாரம்பரிய வாழ்வியலையும் கல்வியையும் மூடநம்பிக்கை என்றும் இந்து மதம் என்றும் ஒதுக்கிய இந்த சட்டப்பதிகளின் தவறான அறிவுரைகளாலும், தவறான கல்வி முறையினாலும் வந்ததே இந்த சீர்கேடுகள் இன்று அழுது என்ன பயன் இப்போதும் திருந்த மாட்டீர்கள் இந்த நாடு அழியும் வரை எங்கள் வரியில் சாப்பிட்டு எங்களை அழிக்கும் உங்களை என்னவென்று சொல்வது


Brahamanapalle murthy
ஆக 05, 2025 15:00

this is one time Courts have rapped TN police for their poor performance. I do not know what has happened to TN Police which was once one of the best in the world. WHere are good officers gone in the Police Department?.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஆக 05, 2025 12:22

ஜாதிகளை ஒழித்து சமூக நீதியை நிலைநாட்டிய பெரியார் மண்ணில் ஆணவ கொலைகளா ?


G Mahalingam
ஆக 05, 2025 10:30

சிபிசிஐடி அதுவும் திமுக அரசின் கண்ரோல்தான்.


Kanns
ஆக 05, 2025 09:20

Police, Govt& Courts MUST ARREST Increasing SexHungry Attractions/Behaviours by Adolescent Girls-Boys in Public places even School girls Under FalseGarb of Love. No Parents incl SC Patents like it. Arrest, Defamations, Prosecutions/Convictions for Public Nuisance/Disorders Must. Excess Freedom is Dangerous


Jack
ஆக 05, 2025 09:16

பள்ளியில் ஜாதி என்ன என்று சேரும்போது கேட்காமல் இருக்க ஆர்டர் போடுவார்களா ?வர்மா காந்தி நேரு சர்மா பாசுவான் நாயக்கர் என்று சர்நேம் போடுவதை தடை செய்யும் அதிகாரம் உண்டா.


Kanns
ஆக 05, 2025 09:15

Police, Govt& Courts MUST ARREST Increasing SexHungry Attractions/Behaviours by Adolescent Girls-Boys in Public places even School girls Under FalsrGarb of Love. No Parents incl SC Patents like it. Arrest, Defamations, Prosecutions/Convictions for Public Nuisance/Disorders Must. Excess Freedom is Dangerous


ellar
ஆக 05, 2025 09:04

ஆணவ கொலை என்கின்ற பெயர் தவறாக அமைந்துவிட்டது ஒவ்வொரு குடும்பத்திலும் பெற்றோர் திட்டமிட்ட வழியில் காரியங்கள் நடைபெறாமல் மாற்றி நடைபெறும் பொழுது பெற்றவர்கள் முதலில் கெஞ்சி அழுது காலில் விழுந்து கேட்டு முடிவுகளை மாற்ற முயல்கிறார்கள் அதனுடைய இறுதியில் நடைபெறும் சிற்சில நிகழ்ச்சிகள் தவறாக சென்று விடுகின்றனர் எனவே இதில் ஆணவம் அடங்கவில்லை கௌரவம் தான் அடங்கியுள்ளது தன்னுடைய குடும்பத்தின் மரியாதையை காப்பாற்றவும் இவர குழந்தைகளின் வாழ்க்கையை காப்பாற்றவும் எடுக்கும் முயற்சிகளை எப்படி ஆணவம் என்று கூற முடியும். உண்மை இல்லாத மாய வாழ்க்கையை காட்டும் சினிமாக்காரர்களால் இந்த ஆணவம் என்கின்ற வார்த்தை உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது சமூகத்தை சீரழிக்கும் சினிமா நாகரீகத்தை ஆணவம் என்று எவ்வாறு கூறுவது


ديفيد رافائيل
ஆக 05, 2025 08:47

CBI க்கு மாற்றியிருக்கலாமே. CBCID கூட தமிழக அரசு கட்டுப்பாட்டில் தானே இருக்கு. வழக்கு எப்படி நேர்மையாக இருக்கும்.


GMM
ஆக 05, 2025 08:30

மாவட்ட காவல் துறையின் விசாரணையில், நீதிமன்றத்துக்கு சந்தேகம் இருந்தாலும் முடிவு தெரியும் வரை நீதிபதி குறுக்கிட முடியாது. ? விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றும் போது வேறு மாநில நீதிபதிக்கு ஏன் மாற்ற முடியாது.? ஆணவ காதல் கூட அதிகரித்து வருகிறது? பெண் திருமணம், மதம் மாற பெற்றோர் ஒப்புதல் கட்டாயம். உதயநிதி ஸ்டாலின் போல் ஆண் மகனுக்கு தேவையில்லை. திராவிட மாயை சட்டம் ஆக்குமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை