கூலிப்படை கொலை அதிகரிப்பு: கார்த்தி
சிவகங்கை: கார்த்தி எம்.பி., அளித்த பேட்டி: தமிழகத்தில் கூலிப்படை கொலைகள் அதிகரித்துள்ளன. காரைக்குடியில் பிரதான சாலையில் ஊருக்கு நடுவில் நடந்த கொலை மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த மாதிரி சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே போகின்றன. முதல்வரும், காவல் துறையின் தலைவரும் இவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.ஜனநாயக நாட்டில் யார் போராட்டம் செய்தாலும், அதற்கு அனுமதிக்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்தாலும், கூட்டணி கட்சியாக இருந்தாலும் போராடுவதற்கு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.