உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மெத்தபெட்டமைன் கடத்தல் அதிகரிப்பு

மெத்தபெட்டமைன் கடத்தல் அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மெத்தபெட்டமைன் கடத்தல் அதிகரிக்கும் நிலையில் சமீப காலமாக இளைஞர்களிடம் அதிகளவில் பறிமுதல் செய்யப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகள் இந்திய - இலங்கை எல்லைக்கு அருகில் உள்ளது. இங்கிருந்து குறைவான நேரத்தில் இலங்கை சென்றடைய முடியும். இதனால் பெரும்பாலான கடத்தல் பொருட்கள் ராமநாதபுரம் பகுதியில் இருந்து தான் இலங்கைக்கு கடத்தப்படுகின்றன.கஞ்சா, போதை மாத்திரைகள், மஞ்சள், பீடி இலைகள், தங்கம் போன்ற பொருட்கள் கடத்தல் தொடர்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது மெத்தபெட்டமைன் என்ற போதைப்பவுடருன் இளைஞர்கள் கைதாகி வருகின்றனர்.கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷனில் ரோந்து பணியில் இருந்த போலீசார் நவ.,23 ல் சக்கரக்கோட்டை டாஸ்மாக் கடை பின்புறம் நின்ற ஹமீது அகமது 21, ஹபீப் முகமது 22, ஆகியோரை கைது செய்து 13 கிராம் மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்தனர்.கீழக்கரை பகுதியில் சில நாட்களுக்கு முன் ஒருவர் கைது செய்யப்பட்டு மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டு நாட்களில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கீழக்கரை பகுதியில் நேற்று முன் தினம் 4 கிராம் மெத்தபெட்டமைன் போதை பவுடருன் இருந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இம்மாவட்டத்தில் மெத்தபெட்டமைன் கடத்தல், விற்பனை அதிகரித்து வருகிறது. எங்கிருந்து யாரால் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்து போலீசார் விசாரிக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

தமிழ்வேள்
டிச 10, 2024 20:24

சின்னவரு ஜிந்தாபாத்... நம்ம ஜாஃபர் சாதிக்கும் ஜிந்தாபாத்...அமீர் அண்ணா வாழ்க வாழ்க.. எல்லாம் காட்டிக் கொடுக்காத வரை.. அப்புறம் அண்ணாநகர் ரமேசு, நண்பன் சாதிக் கதைதான்...


விஸ்வநாத் கும்பகோணம்
டிச 10, 2024 09:34

இனிமேல் தமிழகத்தில் எங்காவது மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டால்....நான் இங்குதான் இருப்பேன். முதல்வர் உறுதி.


ராமகிருஷ்ணன்
டிச 10, 2024 09:18

ஜாபர் சாதிக் கூட்டாளிகள் கீழக்கரை பகுதியில் ஏராளமாக உள்ளனர். தமிழக அரசின் ஆசி பெற்ற சின்ன பாக்கிஸ்தான் அது. NIA மற்றும் ராணுவம் அங்கு நிரந்தரமாக இருந்தால் தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை ஒடுக்கலாம.


ஆரூர் ரங்
டிச 10, 2024 09:17

இத்தனைக்கும் அப்பகுதி எம்பி நவாஸ் கூரியர் கம்பெனிக்காரர். டெல்லி NCBக்கு கூரியரில் புகாரை அனுப்புவார்.


Svs Yaadum oore
டிச 10, 2024 08:50

சாராய கம்பெனி நடத்தறவன் எல்லாம் தேர்தலில் ஜெயித்து மந்திரியாக்கினால் இப்படித்தான் சமூக நீதி மத சாப்பின்மையாக போதை கள்ள சாராய வியாபாரம் கொழிக்கும் ....


Svs Yaadum oore
டிச 10, 2024 08:48

விடியல் திராவிடனுங்க ஆட்சி வந்த பிறகுதான் இந்த போதை கள்ள சாராயம் அதிகரிப்பு ....ராமநாதபுரம் கீழக்கரையாம் ....


அப்பாவி
டிச 10, 2024 08:44

வேற கேள்வி கேக்காம பொருள் வெச்சிருந்தா தூக்கு ந்னு சட்டம் கொண்டு வரணும். அதை உட்டுட்டு சீர்திருற்றம் கிண்டாந்துட்டோம்னு மெடல் குத்திப்பாங்க.


rasaa
டிச 10, 2024 08:29

தமிழகம் ஒளிர்கிறது. எந்த கொம்பனாலும் குறை சொல்லமுடியாது. சாட்சி வேங்கைவயல், வெங்கடேஷ்


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 10, 2024 08:03

தங்குஸ்தன் தானுங்க ஆபத்து .... நேத்து சட்டசபையில் தீர்மானம் போட்டு தமிழர்களைக் காப்பாத்திட்டோம் .....


Nandakumar Naidu.
டிச 10, 2024 07:36

போதைப்பொருள், மருந்துகள் கலப்படம், உணவுப்பொருள்கள் கலப்படம், தீவிரவாதம் மற்றும் பெண்களின் மீது வன்முறை இவற்றிற்கு தூக்கு தண்டனை தவிர வேறு தண்டனை இல்லை என்ற சட்டம் வேண்டும். அதுவும் வீடியோ ஆதாரம் இருக்கும் பட்சத்தில் மூன்று மாதத்திற்குள் தூக்கில் போட வேண்டும். ஜாமீன் வழங்கக்கூடாது. அப்போதுதான் நாடு உருப்படும்.


chennai sivakumar
டிச 10, 2024 08:24

கனவுதான் காண வேண்டும் சார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை