உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை டெஸ்ட்டில் இந்தியா அபாரம்: 280 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது

சென்னை டெஸ்ட்டில் இந்தியா அபாரம்: 280 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை டெஸ்டில் அஸ்வின், ஜடேஜா சுழலில் சிக்கிய வங்கதேசம் இரண்டாவது இன்னிங்சில் 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 280 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 376, வங்கதேசம் 149 ரன் எடுத்தன. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 287 ரன் எடுத்த நிலையில் 'டிக்ளேர்' செய்தது. வங்கதேசத்துக்கு 515 ரன் என்ற கடின வெற்றி இலக்கை நிர்ணயித்தது. மூன்றாள் நாள் ஆட்டநேர முடிவில், வங்கதேச அணி 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8riu3sr7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நான்காவது நாள் ஆட்டத்தில் அஸ்வின், ஜடேஜா ஆகியோரின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஷான்டோ 82 ரன்களுக்கும், ஷாகிப் 25 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பிறகு வந்த வீரர்கள் நிலைக்கவில்லை. லிட்டன் தாஸ் -1, ஹசன் மிராஜ் -8, தஸ்கின் அஹமது -5, ஹசன் மக்முத்- 7 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். கடைசியில் வங்கதேச அணியின் பேட்டிங் 234 ரன்களுடன் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஸ்வின் -6, ஜடேஜா -3 , பும்ரா -1 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் 1-0 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி கான்பூரில் வரும் 27ம் தேதி துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sridhar
செப் 22, 2024 13:27

வேண்டுமென்றே இந்திய பௌலர்கள் ஸ்டம்ப்பை நோக்கியே பந்து வீசியது அதிர்ச்சி அளிக்கிறது . இஸ்லாமிய அணியான பங்களாதேஷை தோற்கடித்தது மாபெரும் சதி .


R Kay
செப் 22, 2024 16:45

இதை வன்மையாக கண்டித்து ராகுல், ஸ்டாலின், கெஜ்ரிவால் அடிஷி போன்றோர் கடற்கரையில் உண்ணாவிரதமிருக்க வேண்டும். அப்போதுதான், அடுத்த டெஸ்டிலாவது ஸ்டம்பை விட்டு விலகி அடிப்பதற்கு வாகாக பந்தை நம் அணியினர் போடுவார்கள். அதிஷி தேவோ பவ சாரி அதிதி தேவோ பவ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை