உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவசாயத்தில் சந்தையை திறக்க முடியாது அமெரிக்க வர்த்தக பேச்சில் இந்தியா உறுதி

விவசாயத்தில் சந்தையை திறக்க முடியாது அமெரிக்க வர்த்தக பேச்சில் இந்தியா உறுதி

புதுடில்லி:விவசாயம், பால்வள பிரிவுகளில் சந்தையை திறந்து விட முடியாது என இந்தியா தெரிவிப்பதால், அமெரிக்காவுடனான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகிறது.விரைவில் இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை கையெழுத்திட உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.எனினும், இருநாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாவதில் இழுபறி நீடித்து வருகிறது. அன்னிய முதலீடுகளை அனுமதிக்காமல் நீண்ட காலமாக பாதுகாக்கப்பட்டு வரும் விவசாயம், பால்வளம் ஆகியவற்றில் சந்தையை திறந்துவிட அமெரிக்கா கோரி வருகிறது. இதற்கு, இந்தியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது.குறிப்பாக, சோளம், எத்தனால், சோயாபீன் மற்றும் பால் பொருட்கள் பிரிவுகளை ஒப்பந்த கட்டமைப்புக்குள் கொண்டு வர இயலாது என இந்தியா கைவிரித்துள்ளது.இதுதொடர்பாக பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் விவசாயத் துறை மற்றும் விவசாயிகளை வலுவிழக்கச் செய்யும் எந்த ஒரு முடிவுக்கும் இந்தியா சம்மதிக்காது என தெரிவித்தார்.

எத்தனால்

எத்தனால் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில், அமெரிக்கா தான் உலகில் முன்னிலை வகிக்கிறது. கடந்தாண்டு அந்நாட்டிலிருந்து அதிக எத்தனால் இறக்குமதி செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. தொழில்துறை தேவைகளுக்காக மட்டுமே எத்தனால் இறக்குமதி செய்ய இந்தியா அனுமதிக்கிறது. இதைக் காட்டிலும் எரிபொருள் கலப்புக்கான எத்தனால் சந்தையே பெரியது என்பதால், அமெரிக்கா அதை குறிவைத்துள்ளது. ஆனால், இந்தியா அனுமதி வழங்க மறுக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Iyer
ஜூலை 05, 2025 02:33

• ரசாயன விவசாயத்தை முழுவதும் தடை செய்து - பசு ஆதார இயற்கை விவசாயத்தை கட்டாயம் ஆக்குங்கள். • ஆபத்தான ரசாயன உரங்கள், விஷம் வாய்ந்த பூச்சி கொல்லிகள், புகை கக்கும் ட்ராக்டர்கள் இவற்றில் செலவிடப்படும் கோடிக்கணக்கான வீண் செலவு சேமிக்கப்படும். • நமது விவசாயிகள் செலவே இன்றி - சத்து நிறைந்த உணவுப்பொருட்களை உற்பத்தி செய்து செழிப்படைவார்கள் • சிக்கிம் மாநிலம் இதற்கு சிறந்த முன்னுதாரணம் ஆகும்


M Ramachandran
ஜூலை 05, 2025 01:11

நல்ல வேளை கொத்தடிமை ராகுல் காங்கரஸ் ஆட்சியில் இல்லை. ஆம் மொலாசம் போய் விடுவோம். விவசாயம் நம் நாட்டின் உயிர் நாடி. அதைய்ய அழிக்க அமெரிக்கா முற் படும். முன்பே பல உதாரணம் உண்டு.


M Ramachandran
ஜூலை 05, 2025 00:50

நல்ல முடிவு. அமெரிக்காவைய்ய எப்போதுமே நம்பக்கூடாது. cut throaat. இதயமற்றவன் முன்பு ஒரு சமயம் C.subaramaniyam மத்திய விவசாயம் உணவு அமைச்சராக யிருந்தபோது உணவு பற்றா குறைய்ய இருந்த போது PL 480 திட்டத்தின் கீழ் நமக்கு நெல்லை அமெரிக்காவிடமிருந்து வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடும்படி வற்புறுத்தி பிறகு தானியாத்தைகப்பலில் அனுப்பினான். சி.சுபராமணியம் இந்தியா வந்தவுடன் காங்கரஸ் உட்கட்சிய கூட்டத்தில் காமராஜர் கொதித்யெழுந்தார். பேச முற்பட்ட போது ஒருமையில் உட்காருடா என்று கோபத்துடன் கூறினார். அந்த நெல் மறு உற்பத்திக்கு லாயக்கற்ற மற்றும் அதனுடன் நீர் வளத்தையம் பயிர் உயிர் நாடிகளையும் உறிஞ்ச கூடிய முற்செடி விதைகளை கலந்து அனுப்பி விட்டார்கள். அதில் தான் அமெரிக்காவின் மட்ட மான புத்தி தெரிந்தது. இதே போல் குருசேவ் காலத்தில் உணவு பஞ்சம் வந்த காலத்தில் ரஸ்சியாவும் அமெரிக்கானால் வஞ்சிக்க பட்டார்கள். ஏழு கப்பல்களில் கோதுமைய மாவு வாங்கி நார்கள். அதில் கண்ணாடி தூள் கலந்து அனுப்பி வைக்க ரஸ்சியாவில் இறக்குமதி ஆவதற்குள் சாம்பிள் டெஸ்ட் செய்த போது இது தெரிந்து அத்தனை மாவையும் கடலில் கொட்டினார்கள். ரசியர்களுக்கு அந்த மாதிரி கெடு புத்தி இல்லை. நாமாவது காலத்திலேன்பிஹஎதிர்பார்ப்பும் யில்லாமலுதவிகரம் நீட்டுவது ரஷ்யா அதனால்தான் மோடி மிக கவன மாக கையாள்கிறார்.


palani
ஜூலை 04, 2025 21:58

Government should encourage farmers to produce more raw material for ethanal


Ramaraj P
ஜூலை 04, 2025 15:27

அப்பாச்சி ஆர்டர் கொடுத்து 5 வருடங்கள் ஆகி விட்டது.


Ganesh
ஜூலை 04, 2025 14:57

இது அமெரிக்காவின் நல்ல முடிவு.... இல்லையென்றால் எல்லா நாட்டிலயும் சண்டை வரவழைத்து குண்டு, ஏவுகணை வியாபாரம் செய்வார்கள்... நல்ல புத்தி வந்து விவசாய பொருட்களை விற்பனை செய்கிறேன் என்கிறார்கள்... ஆனால் நம்முடைய நாட்டின் உள்ளே வரவிட கூடாது...


Nathan
ஜூலை 04, 2025 13:10

சிறப்பான முடிவு


அப்பாவி
ஜூலை 04, 2025 06:28

பரவாயில்லை. ஒரு 50 லட்சம் கோடிக்கு அப்பாச்சி, துப்பாக்கிக்கு ஆர்டர் குடுங்க. அட்ஜஸ்ட் பண்ணிப்பாங்க.


chanakyan
ஜூலை 04, 2025 08:53

அது சரி. தேசபக்தி மிக்க நல்லாட்சியாளர்களுக்குத் தான் எல்லாவற்றையும் சமன் செய்து அழுத்தங்களை சமாளித்து கொண்டு செல்ல வேண்டிய கவலையெல்லாம். தவறான சோப்பில் மூளைச் சலவை செய்யப்பட்ட சில அப்பாவிகளுக்கு மோடியோ, பாஜகவோ தேசத்துக்கு எந்த நன்மை செய்தாலும் எதிர்வினையாற்றித்தான் பழக்கம்.


vivek
ஜூலை 04, 2025 15:43

அப்பாவி மண்டையில் களிமண் கூட இருக்க வாய்பில்லை....என்ன ஒரு பிறப்பு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை