உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2036ல் ஒலிம்பிக் போட்டி இந்தியா நடத்துகிறது: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

2036ல் ஒலிம்பிக் போட்டி இந்தியா நடத்துகிறது: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில், கிராமப்புறங்களில் விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும், கிராமோத்சவம் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. தென் மாநில அளவிலான, 17வது கிராமோத்சவ திருவிழா இறுதி போட்டிகள், கோவை, ஆதியோகி முன்பு நேற்று மாலை நடந்தது. மத்திய விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசுகையில், 17வது ஈஷா கிராமேத்சவம், விளையாட்டு திருவிழா மட்டுமல்ல; பாரதத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் கொண்டாட்டம். விளையாட்டில் கிடைப்பது தோல்வியல்ல; அனுபவம். 2036ல் நம் பாரதம் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த உள்ளது, என்றார். ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு நிருபர்களிடம் பேசுகையில், ஈஷா கிராமோத்சவம் மூலம், 35 ஆயிரம் கிராமங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. 2028ம் ஆண்டுக்குள், 28 மாநிலங்களிலும், கிராமோத்சவம் நடத்தப்படும். நம் நாடு வல்லரசாக வேண்டுமெனில், இளைஞர்களிடம் போதை பழக்கத்தை ஒழிக்க வேண்டும். அதற்கு, விளையாட்டுதான் ஒரே தீர்வு,என்றார். பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், செஸ் விளையாட்டு வீராங்கனை வைஷாலி, பாரா ஒலிம்பிக் வீரர் பவினா படேல் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ragupathy
செப் 22, 2025 11:18

தேவையில்லாத...


அப்பாவி
செப் 22, 2025 10:03

இப்பதான் இந்தியாவில் நடத்தறோம்னு விண்ணப்பம் போட்டிருக்காய்ங்க. அதுக்குள்ளே நடத்தியே முடிச்சிருவாரு.


KOVAIKARAN
செப் 22, 2025 08:34

நல்லது. இளைஞர்களை தட்டி எழுப்பும் இத்தகைய செயல்கள் தொடர வாழ்த்துக்கள். இந்த விளையாட்டு விழாவில், தமிழகத்திலிருந்து எதனை பேர் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றனர்?


மாபாதகன்
செப் 22, 2025 11:41

குடுமிக்கார நபர் தான் கோவைக்கார போர்வையில் ஒளிந்துள்ள என்பது மறந்து விட்டது??


Thravisham
செப் 22, 2025 07:02

இத்தாலிய மாபியா கான்கிரெஸ்ஸின் எடுபுடி மன்மோகன் சிங் மந்திரியான சுரேஷ் கல்மாடி கடேசி காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் செஞ்ச அல்ட்ரா மெகா ஊழல் ஞாபகத்துக்கு வருது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை