உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விரைவில் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்: துணை ஜனாதிபதி சிபிஆர்

விரைவில் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்: துணை ஜனாதிபதி சிபிஆர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்,'' என துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ew8ib7h1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னையில் டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 34வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பட்டம் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் முக்கிய பங்கி வகிக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இன்று பட்டம் வாங்கியவர்கள் நேர்மையுடன் தேசத்திற்காக சேவை செய்யும் மனப்பான்மையுடன் சிறந்து விளங்க வேண்டும். பல்கலைக்கழகக் கல்விக்குப் பிறகும் மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொழில்நுட்பம் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. மாணவர்கள் காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும். விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும். 2047ம் ஆண்டுக்கு முன்பே இந்தியா வளர்ந்த நாடாக மாறும். இவ்வாறு சி.பி. ராதாகிருஷ்ணன் பேசினார்.விழாவில், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், நிறுவனத்தின் வேந்தர் ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
ஜன 02, 2026 21:35

இவர் ஒருத்தர்தான் சொல்லலை.


Barakat Ali
ஜன 02, 2026 20:18

ஏழை மேலும் ஏழையாகிறான் ...... கவுன்சிலர் கூட ஐந்தாண்டு பதவி முடிந்ததும் பங்களா கட்டுகிறார் ..... பிசினஸ் நடத்துகிறார் .... இந்த லட்சணத்தில் விரைவில் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் ????


நாகராஜ்
ஜன 02, 2026 19:42

பணவீக்கம் குறைந்து பொருளாதார வளர்ச்சி அதிகரித்தால் நல்லது தான்


Narayanan Muthu
ஜன 02, 2026 19:07

வரும் வரும்னா எப்ப வரும் 2047 ஆ இல்ல 2057 ஆ


vivek
ஜன 02, 2026 20:26

.எதுக்கு இப்படி கதறுகிறாய்


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜன 02, 2026 20:40

எரியுது?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை