உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை -திருச்சி இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: பயணிகள் 68 பேர் அவதி

சென்னை -திருச்சி இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: பயணிகள் 68 பேர் அவதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சி புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் 68 பேர் கடும் அவதி அடைந்தனர்.சென்னையில் இருந்து திருச்சிக்கு 68 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்கள் உட்பட 73 பேரை ஏற்றிக் கொண்டு இன்று காலை காலை 5.45 மணிக்கு இண்டிகோ விமானம் புறப்பட தயாரானது. கடைசி நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார்.உடனடியாக விமானியை நிறுத்திவிட்டு, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார்.பின்னர் விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, விமானத்தில் இருந்தபோது விமானப் பொறியாளர்கள் சிக்கலைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.பழுதுபார்ப்பு ஒரு மணி நேரத்திற்குள் முடிக்கப்பட்டது, மேலும் விமானம் காலை 6.45 மணிக்கு புறப்பட்டது. ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சமீபகாலமாக விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு பிரச்னை ஏற்பட்டு வருவது, பயணியர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Stalin
ஆக 06, 2025 13:16

சென்னை இருந்து திருச்சி செல்லும் விமானம் ATR பிளிக்ட் பழைய மாடல் சீக்கிரம் எல்லாத்தையும் Airbus company ku மாத்துங்க.


Ramesh Sargam
ஆக 06, 2025 12:26

தமிழகத்தில் இன்றைய போக்ஸோ கைது செய்தி மாதிரி, ஆசிரியர் இன்றைய விமான தொழில்நுட்ப கோளாறு என்று தினம் தினம் இந்தியாவில் நடக்கும் விமான கோளாறு செய்தி வெளியிடுவீர்களா?


அரவழகன்
ஆக 06, 2025 10:50

என்னைய்யா ஆச்சு விமான சேவைக்கு...பேய் பிசாசு காற்று கருப்பு தொல்லை என மந்திரித்த கயிறு கட்டி வேண்டுமோ..


VSMani
ஆக 06, 2025 10:15

உடனடியாக விமானியை நிறுத்திவிட்டு, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார். என்ன தமிழோ ? "விமானத்தை" நிறுத்திவிட்டு என்பதற்கு பதிலாக "விமானியை" நிறுத்திவிட்டு என்று எழுதியிருக்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை