உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமேஸ்வரம் ஏர்போர்ட்டுக்கு ஐந்து இடங்களில் விரைவில் ஆய்வு

ராமேஸ்வரம் ஏர்போர்ட்டுக்கு ஐந்து இடங்களில் விரைவில் ஆய்வு

சென்னை : ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைய உள்ள, ராமேஸ்வரம் விமான நிலையத்திற்காக, ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை தாலுகாக்களில், ஐந்து இடங்களை தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவில், தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட இடங்களை பார்வையிட, உலகம் முழுதும் இருந்து பக்தர்கள், சுற்றுலா பயணியர் வருகின்றனர். கடல் உணவு அவர்கள், சாலை, ரயில் வாயிலாக, ராமேஸ்வரம் வர வேண்டியுள்ளது. இதனால், பயண நேரம் அதிகமாகிறது. ராமநாதபுரத்தில் உப்பு, கடல் உணவு பொருட்கள் உற்பத்தி அதிகம் உள்ளது. எனவே, அம்மாவட்ட பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், பயணியரின் பயண நேரத்தை குறைக்கவும், ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, இந்த ஆண்டு பட்ஜெட்டில் வெளியானது. விமான நிலையத்திற்காக, ராமநாதபுரம் மாவட்டத்தில், 500 - 700 ஏக்கர் நிலம் உள்ள ஐந்து இடங்களை, அரசு அடையாளம் கண்டுள்ளது. ராமநாதபுரம் தாலுகாவில் உள்ள பழங்குளம், தேவிப்பட்டினம், கும்பரம்; கீழக்கரை தாலுகாவில் உள்ள களரி, மாணிக்கனேரி ஆகிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இந்த இடங்களில் ஒன்றை தேர்வு செய்ய, இந்திய விமான நிலையங்களின் ஆணையம் வாயிலாக, விரைவில் சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.

அரசு நிலம் இது குறித்து, ராமநாதபுரம் மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:

விமான நிலையத்திற்கு இடம் அடையாளம் காண்பதில் சிரமம் உள்ளது. எனினும், 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி அதிகாரிகளுடன் இணைந்து, பல ஆண்டுகளுக்கு முன் உப்பு உற்பத்தி செய்யப்பட்ட இடம் உட்பட பல்வேறு வகைப்பாட்டைச் சேர்ந்த, ஐந்து இடங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. அவற்றில், அரசுக்கு சொந்தமான நிலம்தான் அதிகம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Samayan Venkatasamy
ஆக 26, 2025 17:37

நோ ldea


peermohammednurullaraja peermohammednurullaraja
ஆக 26, 2025 16:27

இராமேஸ்வரம் என்பது ஒரு பெரிய சுற்றுலா ஊர்.கட்டாயம் ஏர்போர்ட் தேவைப்படுகிறது.


venugopal s
ஆக 26, 2025 13:03

தமிழ்நாட்டில் எந்த ஒரு புதிய திட்டம் கொண்டு வந்தாலும் அஸ்து பாடுவதற்கு என்றே ஒரு கும்பல் காத்திருக்கிறது!


rajan
ஆக 26, 2025 12:39

ஏர்போர்ட் யாருக்காக வருகிறது மக்களுக்கவா .


Anand
ஆக 26, 2025 11:16

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கும் இந்த மதமாற்ற கும்பல் தான் பெரும் தடையாக இருந்தது. அதுபோல கன்னியாகுமரியில் இனயம் துறைமுகம் அமைக்கும் திட்டத்தை கெடுத்ததும் இந்த கும்பல் தான். நாட்டிற்கு ஒரு சாபக்கேடு.


P. S Karikalan
ஆக 26, 2025 10:01

என்னங்கடா கொடுமையா இருக்கு 10 வருடங்களுக்கு முன்பு இந்த இடத்தில் தான் விமான நிலையம் வருகிறது அதனால் ஏறத்தாழ 8000 ஏக்கர் நிலத்தை பத்திர பதிவு செய்ய தடை போட்டு இருக்கிறது. இடம்: இராமநாதபுரம் - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், விமான கடல் படை தளம் INS AGRANI இது, இதனை சுற்றி பெருங்குளம், ஆற்றங்கரை மற்றும் இரெட்டையூரணி சரகத்திற்கு உட்பட்ட இடங்கள் எடுப்பதாக தான் சொல்லி சர்வே எடுத்தார்கள்.


Seyed Omer
ஆக 26, 2025 09:52

ராமநாதபுரம் மாவட்டத்தில் நீர் ஆதாரத்தை பெருக்க ஒன்றியரசும் தமிழ்நாடு அரசும் முனைப்புடன் செயல்பட்டு ஏரி குளம் குட்டைகளை நிரப்பினால் விவசாயம் செழிக்கும் வீனாகும் காவிரி வைகை நீரை திருப்பி விட்டால் நன்று அரசுடன் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் இணைந்து இத்திட்டத்தை துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்


rama adhavan
ஆக 26, 2025 07:12

ராமேஸ்வரத்தில் அல்லது அருகாமையில் விமான நிலையம் தேவை இல்லை. மதுரையில் நல்ல விமான நிலையம் உள்ளது. அங்கிருந்து ராமேஸ்வரம் 150 கிமி தான். காரில் வரலாம். பாம்பன் பாலம், ரயில் பாலம் நன்கு பார்க்கலாம். கோயில், அரிச்சல் முனை செல்லலாம். மேலும் பெரிய விமான நிலையம் இங்கு அமைக்க முடியாது. பெரிய தொழிலும் இங்கு இல்லை. எனவே விமானநிலையம் வெறும் அறிவிப்புடன் மட்டும் இருக்கும். நடைமுறையில் வராது.


Svs Yaadum oore
ஆக 26, 2025 06:48

ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாம். இதற்கான அறிவிப்பு, இந்த ஆண்டு பட்ஜெட்டில் வெளியானதாம்.. இதெல்லாம் நாடகம் ... ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை அமைக்க மத்திய அரசு கொடுத்த 444 கோடி ரூபாய் பயனில்லாமல் போனது ....காரணம் ராமேஸ்வரம் ரயில்பாதைக்கு மதம் மாற்றும் கும்பல் எதிர்ப்பு.. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற மூகமுடியில் இந்த மதம் மாற்றும் கும்பல் பல்லுயிர் பெருக்கத்திற்கு ரயில் பாதை தடையாக இருக்கும் என்று ரயில் பாதை திட்டம் கைவிடப்பட்டது. அதே கதிதான் இந்த விமான நிலையத்திற்கும் ..ராமேஸ்வரத்தில் எந்த திட்டத்திற்கும் மதம் மாற்றும் கும்பல் அனுமதி தராது ....


AMMAN EARTH MOVERS
ஆக 26, 2025 09:22

இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் மதம் மாற்றும் கும்பல்னு சொல்லுவது வாடிக்கையாகிவிட்டது


Shekar
ஆக 26, 2025 09:49

மதம் மாற்று கும்பல் செய்யும் அட்டகாசம் கொஞ்சமல்ல, கண்ணை மூடிக்கொண்டு இருந்தால் நமக்கு நாமே ஆப்பு வைப்பதற்கு சமம். ஸ்டெர்லிட்ஆலை போராட்டம் நடத்தி பலரின் வாழ்வாதாரங்களை ஒழித்தது யார்? கூடம் குளம் அணு மின் ஆலைக்கு எத்தனை முட்டுக்கட்டை போட்டார்கள். இப்பவும் எந்த போராட்டம் நடந்தாலும் அவர்கள் கை உண்டு. மக்களிடம் காசு புழக்கம் அதிகரித்தால் இவர்கள் சொல் யாரும் கேட்கமாட்டார்கள். எனவே முன்னேற்றத்திற்கு அனைத்து தடைகள் ஏற்படுத்தி தங்கள் வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ளும் கூட்டம் அது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை