உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜெயலட்சுமி மோசடி வழக்கில் இன்ஸ்பெக்டர், மனைவி ஆஜர்

ஜெயலட்சுமி மோசடி வழக்கில் இன்ஸ்பெக்டர், மனைவி ஆஜர்

மதுரை: சிவகாசி ஜெயலட்சுமி மோசடி வழக்கில் இன்ஸ்பெக்டர், அவரது மனைவி, மற்றொரு இன்ஸ்பெக்டரின் மனைவி ஆகியோர் மதுரை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராயினர். கோவை நகைக்கடை உரிமையாளர் முருகவேலிடம், ஜெயலட்சுமி ரூ.மூன்றரை லட்சத்திற்கு நகைகள் வாங்கி மோசடி செய்ததாக எஸ்.எஸ். காலனி போலீசார் தொடர்ந்த வழக்கு கோர்ட்டில் நடக்கிறது. வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் (கீழக்கரையில் பணிபுரிகிறார்), அவரது மனைவவி ஜீவரத்தினம், இன்ஸ்பெக்டர் ஷாஜகானின் மனைவி ரம்ஜான்பேகம் ஆகியோர் ஆஜராயினர். இன்ஸ்பெக்டர் சாட்சியத்தில், ''ஜெயலட்சுமி எஸ்.ஐ., உடைஅணிந்து தன்னை வந்து சந்தித்ததாகவும், பின் தனக்கு வேலை போய் விட்டதாக தெரிவித்ததாகவும், ஆன்லைன் வர்த்தகம் மூலம் போலீஸ் அதிகாரிகளின் மனைவிகளிடம் பழகியதாகவும்,'' தெரிவித்தார். இன்ஸ்பெக்டர்களின் மனைவிகள் அளித்த சாட்சியத்தில், ''ஆன்-லைன் வர்த்தகத்திற்காக எங்களிடம் லட்சக்கணக்கான ரூபாயை ஜெயலட்சுமி வாங்கி விட்டு, செக்குகள் தந்தார். அவற்றை வங்கியில் டெபாசிட் செய்த போது பணம் இல்லாமல் திரும்பின. பணத்தை கேட்ட போது தரமுடியாது என மறுத்து விட்டார்,'' என தெரிவித்தனர். மாஜிஸ்திரேட் கதிரவன் விசாரித்தார். சாட்சிகளை அரசு தரப்பில் உதயகுமார் விசாரித்தார். ஜெயலட்சுமி தரப்பு வக்கீல் மோகன்தாஸ் குறுக்கு விசாரணை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி