உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தென்னை ஏறும் தொழிலாளிக்கு ரூ.239ல் இன்சூரன்ஸ் திட்டம்

தென்னை ஏறும் தொழிலாளிக்கு ரூ.239ல் இன்சூரன்ஸ் திட்டம்

கம்பம்:தென்னை மரம் ஏறுவோர், தண்ணீர் பாய்ச்சுவோர் போன்ற தொழிலாளர்களுக்கு, 239 ரூபாய்க்கு புதிதாக இன்சூரன்ஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தேனி மாவட்டம், கம்பம் தோட்டக்கலை உதவி இயக்குனர் பாண்டியன் ராணா கூறியதாவது:தென்னை மரம் ஏறுபவர்கள், அறுவடை செய்பவர்கள், நீர் தொழில்நுட்பர்கள், தென்னையில் கலப்பினம் செய்யும் தொழிலாளர்கள், இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர தகுதி உடையவர்கள். 18 முதல், 65 வயதுடைய தொழிலாளர்கள் பதிவு செய்யலாம். இறப்பு, ஊனமடைதல், மருத்துவமனை செலவுகள், மீட்பு நாட்களில் தற்காலிக வருமான உதவி கிடைக்கும். உறுதி செய்யப்பட்ட காப்பீட்டு தொகை 7 லட்சம் ரூபாய். மருத்துவமனை செலவுகளுக்கு 2 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும்.ஆண்டு சந்தா, 239 ரூபாய் மட்டும் செலுத்த வேண்டும். காப்பீடு பற்றிய விபரங்களை அறிய, சம்பந்தப்பட்ட தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் அல்லது தென்னை வளர்ச்சி வாரியம், மண்டல அலுவலகம், கோவை என்ற முகவரி அல்லது 0422 -- 299 3684 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ