ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி
கோவை: திருமலையாம்பாளையத்திலுள்ள நேரு மேலாண்மை கல்லூரியில், 'உணர்வு- 2011', எனும் மாணவர்களுக்கான ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடந்தது. முதலாமாண்டு மாணவர்களுக்கான இந்நிகழ்ச்சியில், ' மாணவர்களை மனதளவில் மேலாண்மை படிப்புக்கு தயார்படுத்துதல், வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கல்லூரியின் கல்விமுறை மற்றும் கலாசாரம் குறித்து தெரிந்து கொள்ளுதல், ஆளுமைத்திறன் மற்றும் கூட்டு முயற்சியை மேம்படுத்துதல், உடன் பயிலும் மாணவர்கள் மற்றும் நிர்வாகி, ஆசிரியர்கள் குறித்து அறிந்து கொள்ளுதல், மாணவர்களின் கற்பனை மற்றும் ஆக்கத்திறனை மேலாண்மை பயிற்சி விளையாட்டுகள் மூலம் ஊக்குவித்தல்' போன்றவை குறித்து விளக்கப்பட்டது.'சுல்ஷான் எனர்ஜி' நிறுவன பொது மேலாளர் சவுந்தரராஜன் துவக்கி வைத்தார். பேராசிரியர் நந்தினி வரவேற்றார். நேரு கல்வி குழுமத்தின் செயலாளர் கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் பிராங்க்ளின் ஜான், என்.ஐ.ஐ.டி.எம்., கல்லூரி முதல்வர் மோசஸ் டேனியல் உள்பட பலர் பேசினர். பேராசிரியர் விஜயா நன்றி கூறினார். ஐந்து நாட்கள் நடந்த நிகழ்ச்சியில், பேராசிரியர் நஞ்சன்பாலு, அன்ஜேஸ்குமார், செந்தில்குமார் உள்பட பலர் பேசினர். கலாசார நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.