உளவுத்துறை ஐ.ஜி.,க்கு கூடுதல் பொறுப்பு
சென்னை: உளவுத்துறை ஐ.ஜி., அஸ்ரா கர்க்கிற்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. தமிழக காவல் துறையின் உளவுத்துறை ஐ.ஜி., யாக, ஐ.பி.எஸ்., அதிகாரி அஸ்ரா கர்க் பணிபுரிந்து வருகிறார். இவர், 'உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி., பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்' என, அரசு நேற்று அறிவித்தது.