UPDATED : டிச 10, 2024 10:11 PM | ADDED : டிச 10, 2024 06:34 PM
சென்னை: அக்.,1 முதல் டிச.,10 வரையிலான காலகட்டத்தில் வட கிழக்கு பருவமழை எங்கு அதிகம் பெய்துள்ளது என்ற தகவலை சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. சமீபத்தில் கரையை கடந்த பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், திருவாண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனால், அம்மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. தொடர்ந்து வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது இலங்கை - தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது புயலாக மாறுவதற்கான வாய்ப்பு குறைவு என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.மழை அளவுஅக்., 1 முதல் இன்று வரை தமிழகம், காரைக்கால், புதுச்சேரியில் பதிவாக வேண்டிய மழை அளவு:40 செ.மீ.,பதிவான மழை அளவு: 45 செ.மீ.,இது 14 சதவீதம் அதிகம் என வானிலை மையம் கூறியுள்ளது.மாவட்டவாரியாகஇந்நிலையில் அக்., 1 முதல் டிச., 10 வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் இயல்பை விட அதிகமாகவும், இயல்பை விட குறைவாகவும் மழை பதிவான மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ளது.இதன்படி இயல்பை விட அதிகம் மழை பதிவான மாவட்டங்கள்சென்னை: 16 %கோவை: 47 %தர்மபுரி: 58 %திண்டுக்கல்:10 %ஈரோடு :4%கள்ளக்குறிச்சி:33 %கன்னியாகுமரி:3 %கரூர் : 13 %கிருஷ்ணகிரி: 79%மதுரை :21%நாகப்பட்டினம்:16%நாமக்கல்: 34%புதுக்கோட்டை :20%ராமநாதபுரம் :18%ராணிப்பேட்டை: 24%சேலம்:51%சிவகங்கை :23%திருப்பத்தூர்: 87%திருப்பூர் :26%திருவள்ளூர்: 12%திருண்ணாமலை :40% திருச்சி: 15%வேலூர்:22%விழுப்புரம்: 64 % கூடுதல் மழை பதிவாகி உள்ளது.இயல்பை விட குறைவாக பதிவான அளவு(இம்மாவட்டங்கள் அனைத்திலும் மழை அளவு மைனசில் பதிவாகி உள்ளது)அரியலூர் :-14 % செங்கல்பட்டு:-9 %கடலூர்:-5%காஞ்சிபுரம்:-13%மயிலாடுதுறை: -13%பெரம்பலூர்:-14%தென்காசி: -40%தேனி: -10%நெல்லை :-1%தூத்துக்குடி:-43%விருதுநகர்: -29% குறைவாக மழை பதிவாகி உள்ளது.இயல்பான அளவுநீலகிரிதஞ்சாவூர்திருவாரூர்