உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வங்கதேசத்தினருக்கு போலி ஆதார்; அரசு டாக்டரிடம் விசாரணை நிறைவு

வங்கதேசத்தினருக்கு போலி ஆதார்; அரசு டாக்டரிடம் விசாரணை நிறைவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: திருப்பூரில் வங்கதேசத்தினர் போலி ஆதார் கார்டு பெற்ற விவகாரத்தில், அரசு டாக்டர், ஆதார் மைய பெண் ஊழியர் ஆகியோரிடம் போலீசார் விசாரணையை நிறைவு செய்தனர்.திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த தன்வீர் அகமது, அகமது மம்மூஸ் உட்பட, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இருவரும் வங்கதேசத்தில் உறவினரை கொலை செய்து விட்டு, இந்தியாவுக்கு தப்பி வந்தது தெரிந்தது.கடந்த, ஒரு ஆண்டுக்கு முன், அருள்புரத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர், இ-சேவை மையம் மூலம் ஆதார் கார்டு பெற்று கொடுத்தது தெரிந்தது. அவர் மீது போலி ஆவணங்கள் தயாரிப்பு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.வங்கதேசத்தினருக்கு ஆதார் கார்டு பெற சான்று வழங்கிய பல்லடத்தை சேர்ந்த அரசு டாக்டர், மாநகராட்சி வளாகத்தில் உள்ள இ-சேவை மையம் தற்காலிக பெண் ஊழியர் மற்றும் பேன் கார்டு வாங்கி கொடுத்த நபர் என, மூன்று பேரிடம் விசாரிக்க திட்டமிட்டு, போலீசார் தரப்பில் சம்மன் கொடுத்தனர்.

விசாரணை நிறைவு

இச்சூழலில், ஆதார் கார்டு பெற சான்று வழங்கிய டாக்டர், பெண் ஊழியர் ஆகியோர் நேரில் விசாரணைக்கு ஆஜாரானார்கள். அதில், சம்பந்தப்பட்ட வங்கதேசத்தினருக்கு ஆதார் கார்டுக்கு பெற மாரிமுத்து விண்ணப்பத்துடன் சென்றார். அவர்களை நேரில் பார்க்காமல் டாக்டர் சான்று கொடுத்தது தெரிந்தது. அவர்கள் வங்கதேசத்தினர் என்ற விபரம் தங்களுக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.அவர்களிடம் பெற்ற வாக்குமூலம் அனைத்தும், குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட உள்ளது. அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

துறைகளுக்கு பரிந்துரை

இதுகுறித்து திருப்பூர் மாநகர போலீசார் கூறியதாவது:வங்கதேசத்தினர் கைது செய்த விவகாரத்தில், ஆதார் கார்டு பெற்று கொடுத்த மாரிமுத்து கைது செய்யப்பட்டார். அவரிடம் கிடைத்த தகவலின் படி, சான்று வழங்கிய அரசு டாக்டர், இ-சேவை மைய பெண் ஊழியர் ஆகியோருக்கு சம்மன் கொடுத்து விசாரித்தோம்.விண்ணப்பதாரர்கள், வங்கதேசத்தினர் என்பது தெரியாது என்று சொன்னவர்கள், கொண்டு வந்த விண்ணப்பத்தில் நேரில் பார்க்காமலே டாக்டர் கையெழுத்து போட்டு கொடுத்தது தெரிந்தது. இதனை தங்களுக்கு தெரியாது என்று மறுத்தாலும், அவர்கள் செய்தது தவறு. விசாரணை மற்றும் வாக்கு மூலம் குறித்து குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்படும்.துறை ரீதியான நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மாரிமுத்து மூலம் ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்க வைத்திருந்த, 11 விண்ணப்பம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

R S BALA
அக் 02, 2024 12:32

ரூ 500 க்கு ஆசைப்பட்டு டாக்டர் சான்றளித்துவிட்டார் ஆனால் இப்போது நிலைமை... பாவம். இனி பெயரை பார்த்தாலே யோசித்து செயல்படுங்கள்..


Yuvaraj Velumani
அக் 02, 2024 10:37

ஆயுள் தண்டனை தவறும் பட்சத்தில் தூக்கு தண்டனை


Gokul Krishnan
அக் 02, 2024 10:17

இதை எல்லாம் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் தீவிர விசாரணை செய்ய மாட்டார்கள் திருப்பதி லட்டு விவகாரம் என்றால் உடனே விசாரணை நடத்த விடாமல் மாநில அரசை கண்டிப்பார்கள்


GMM
அக் 02, 2024 08:49

போலி ஆதார் பற்றி ஆணையத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும். உண்மை - போலி கண்டறிய பொலிஸாரிடம் மூல ஆதாரம் இருக்காது. பொலிஸார் ஆணைய உத்தரவின் போரில் மட்டும் விசாரிக்க முடியும். அரசு டாக்டர் சான்று கொடுக்கும் முன் அவர் பணிபுரியும் மருத்துவ மனையில் விவரம் பதியப்பட்டு பராமரிப்பில் இருக்க வேண்டும். தவறு என்றால் ஆயுளுக்கும் சான்று கொடுக்க கூடாது. புரோக்கர் தண்டித்தது சரியே. நாடு முழுவதும் அங்கீகாரம் இல்லாத புரோக்கர் தடை செய்ய வேண்டும்.


Kalyanaraman
அக் 02, 2024 08:38

போலி ஆதார் கார்டு பாஸ்போர்ட்கள் வருவதையே மத்திய - மாநில அரசுகள் நிறுத்த முடியவில்லை. இப்படி இருந்தால் இந்தியா வல்லரசாக எப்படி மாறும்?. முதலில் இது குறித்து சரியாக விசாரணை நடத்தாத அதிகாரிகளுக்கு கடும் தண்டனை கொடுத்தால் தான் வருங்காலத்தில் விசாரணை சரியாக நடக்கும். குற்றவாளிகள் பிடிபடுவார்கள். போலியான நபர்களுக்கு ஆதார் கொடுப்பது நிற்கும். கடும் தண்டனைகளும் விரைவான விசாரணையையும் மட்டுமே குற்றங்களை குறைக்க உதவும்.


S.L.Narasimman
அக் 02, 2024 07:39

துறை ரீதியான நடவடிக்கை என்றால் தேசதுரோகிகளை தப்ப விடுவுவதற்கான வழி. உருப்படாத நம் சட்டங்கள்.


சாண்டில்யன்
அக் 02, 2024 08:20

இங்கு மட்டுமல்ல பல மாநிலங்களிலும் இது போன்ற சட்டத்துக்கு புறம்பான செயல்கள் எல்லா மட்டத்திலும் நடை பெறுகின்றன இந்த வழக்கில் சில ஆயிரங்கள் கைமாறியிருக்கலாம் பல கோடிகளை சுருட்டும் விலாங்கு மீன்களும் தப்பி விடுகின்றனவே உதாரணமாக செபி தலைவர் மீதான குற்றச்சாட்டு ஆனால் வழக்கு போடவில்லை பிக்பாக்கெட்டும் தேச துரோகம் என்கிறார்கள் இப்போது இது ஒரு ட்ரெண்ட் இதில் "தேச துரோகம்" எங்கு வந்தது என்று விரிவாக விளக்கலாம் யாவரும் தெரிந்து கொள்ளலாம்


Barakat Ali
அக் 02, 2024 12:01

\ இப்போது இது ஒரு ட்ரெண்ட் இதில் "தேச துரோகம்" எங்கு வந்தது // சாண்டில்யன் மகராஜ் ..... ஆளை பார்க்காமலேயே இந்திய இறையாண்மை தொடர்புடைய சர்டிபிகேட்டில் கையெழுத்து ... இது தேச துரோகம் இல்லாமல் வேறென்ன ?? நமது ராணுவ ரகசியங்களை எதிரி நாட்டுக்கு கொடுத்தால்தான் தேச துரோகம் என்று நினைக்கிறீரா ?? அது நீங்கள் பார்த்த திரைப்படங்களில் அப்படி இருந்திருக்கலாம் .... அது சரி .... வங்கதேசத்தவருக்கு நீங்கள் பரிந்து கொண்டு வரும் காரணம் என்னவோ ??


சாண்டில்யன்
அக் 02, 2024 16:07

e சேவா மைய்யங்களை தனியாருக்கு தாரை வார்த்து மிக உயரிய மட்டத்தில் உள்ள அதிகாரிகள் நாலு காசு பார்ப்பது இ-சேவை மைய பெண் ஊழியர் ஒப்பந்த ஊழியர்தான் பான் கார்டு பெற்றுத் தரவும் தனியார் தரகர்கள் உண்டு எந்த சேவையும் தனியார் மயம் நாட்டில் ஆதி பேர் மாரிமுத்து போன்ற "தொழில்" செய்துதான் பிழைக்க வேண்டியுள்ளது அரசு வேலை கிடைக்கிறதா என்ன? பங்கு விலை வீழ்ச்சியில் ஆயிரமாயிரம் கோடி லாபம் தந்து கமிஷன் பெறுவது தேர்தல் நிதி பத்திர உத்தியை கொண்டு ஜபர் தஸ்தா கல்லா கட்டியது இப்படி பல தேச பக்திகள் செய்து இந்த தேச நலனுக்காகவே பாடு படுகிறார்கள் யாரெல்லாம் தேச துரோகியென வர்ணிக்கப் படுகிறார்கள்? சங்கிகள் ஒருவராவது உண்டா? அப்படியிருக்கையில் இப்படியொரு கோடாலிக் காம்பு இருப்பது என்ன காரணமோ? பங்களா தேஷிலிருந்து இங்கே பஞ்சம் பிழைக்க ஓடி வருவதேன்?


சாண்டில்யன்
அக் 02, 2024 16:09

"முதலில் அவர்கள் உங்களைப் புறக்கணிக்கிறார்கள், பின்னர் அவர்கள் உங்களைப் பார்த்து சிரிக்கிறார்கள், பின்னர் அவர்கள் உங்களுடன் சண்டையிடுகிறார்கள், பிறகு நீங்கள் வெற்றி பெறுவீர்கள்." - மகாத்மா காந்தி இன்று காந்தி ஜெயந்தி


muthu
அக் 02, 2024 07:26

How many agents in india like marimuthu


Kumar Kumzi
அக் 02, 2024 07:21

பங்களாதேஸ் கள்ளக்குடியேறிகளோடு உள்ளூர் தேசவிரோதிகளையும் நாடுகடத்துங்கள் நாட்டுக்கு கேடு விளைவிக்கும் துரோகிகளை சுட்டுக்கொல்லுங்கள்


சாம்
அக் 02, 2024 06:50

டாக்டர் மர்மா வா


நிக்கோல்தாம்சன்
அக் 02, 2024 06:16

இதுபோன்று தான் எல்லா இடங்களிலும் நடக்கிறது , ஆனால் நான் இப்போ வசிக்கும் இடத்தில் முஸ்லிம்கள் வங்க தேச முஸ்லிம்களால் நிறைய நொந்து போய்விட்டார்கள் , அடிபட்ட பிறகு அவர்களுக்கு உதவுவதையும் நிறுத்தி விட்டார்கள் , தமிழக முஸ்லிம்களும் உணரும்போது தான் இந்த நிலை சீரடையும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை