வாசகர்கள் கருத்துகள் ( 2 )
என்ன ஒரு மர்மம்
கடத்தல் பேர்வழிகளாக இருக்கும். விபத்து ஏற்பட்டதும் ஓடி விட்டார்கள்.
ஈரோடு: ஈரோடில் கார், பைக் மோதியதில், இரு வாகனங்களும் எரிந்து நாசமாயின. ஈரோடு, கருங்கல்பாளையம், காந்தி சிலை எதிரில், வாட்டர் டேங்க் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு 'மகேந்திரா' கார் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து சென்ற ஈரோடு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அப்போது காரின் முன்பகுதியில், ஒரு பைக் எரிந்து கிடந்தது. கார், பைக்கில் வந்தவர்கள் அங்கு இல்லை; அவர்கள் யாரென தெரியவில்லை. கருங்க ல்பாளை யம் போலீசாரின் விசாரணையில், அதிவேகத்தில் வந்த அந்த கார், சாலையில் சென்று கொண்டிருந்த பைக் மீது மோதி, இழுத்தபடி சென்று, சாக்கடையில் மோதி நின்றிருக்கலாம் என கூறினர். அப்போது, தீப்பிடித்ததில் கார் மற்றும் பைக் எரிந்து சேதமாகி இருக்க வேண்டும் என, போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே, கார், பைக்கில் வந்தவர்கள் குறித்து, அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது.
என்ன ஒரு மர்மம்
கடத்தல் பேர்வழிகளாக இருக்கும். விபத்து ஏற்பட்டதும் ஓடி விட்டார்கள்.