மேலும் செய்திகள்
காஸ் டேங்கர் லாரிகள் 'ஸ்டிரைக்' துவங்கியது
10-Oct-2025
சென்னை:இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள், நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தென் மண்டல எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் லாரிகள் வாயிலாக, எல்.பி.ஜி., காஸ் வினியோகம் செய்து வருகிறது. தென் மண்டல எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. லாரிகளுக்கு அனுமதி கடிதங்கள் வழங்கப்படாதது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், போரட்டத்துக்கு தடை விதிக்க கோரி, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் அனுாப்குமார் சமந்த்ராய், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனு விபரம்: டேங்கர் லாரி வேலை நிறுத்தம் காரணமாக கோடிக் கணக்கில் நிதி இழப்பு ஏற்படும். எல்.பி.ஜி., சமையல் காஸ் என்பது அத்தியாவசிய பொருள். அதை வினியோகம் செய்ய விடாமல் தடுப்பது, அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திற்கு விரோதமானது. எனவே லாரிகள் அறிவித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
10-Oct-2025