உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 5 ரயில் நிலையங்களில் ஐ.ஆர்.சி.டி.சி., உணவகம்

5 ரயில் நிலையங்களில் ஐ.ஆர்.சி.டி.சி., உணவகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : திருவண்ணாமலை, விருத்தாசலம் உட்பட ஐந்து ரயில் நிலையங்களில், தனியார் பங்களிப்புடன் உணவகங்களை அமைக்க, ஐ.ஆர்.சி.டி.சி., திட்டமிட்டுள்ளது.இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில், ரயில் மற்றும் விமானத்தில் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன. இது தவிர, முக்கிய ரயில் நிலையங்களில், தனியார் பங்களிப்போடு உணவகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து, ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது:

பயணியர் வருகை அதிகமாக இருக்கும் ரயில் நிலையங்களை ஆய்வு செய்து, தேவைக்கு ஏற்ப, தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு, உணவகங்களை அமைத்து வருகிறோம். தற்போது, புதிதாக நடுத்தர ரயில் நிலையங்களில், சிறிய உணவகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, திருவண்ணாமலை, விருத்தாசலம், சென்னையில் மயிலாப்பூர், வேளச்சேரி, பழவந்தாங்கல் ஆகிய ரயில் நிலையங்களில்,. ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில் உணவகங்கள் அமைக்கப்படும். இதற்கான, 'டெண்டர்' வெளியிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்படுவர். பின்னர், ஒன்பது ஆண்டுகளுக்கு உணவகங்கள் வைக்க அனுமதிக்கப்படும். சைவம், அசைவ உணவுகள் நியாயமான விலையில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

veeramani
பிப் 28, 2025 09:36

இந்திய ரயில்வேயின் அருமையான கருத்து தென் மாவட்டங்களுக்கும் இந்த முறை செயல்படுத்தவேண்டும் ராமேஸ்வரம், காரைக்குடி, சிவகாசி, செங்கோட்டை, நாகர்கோயில் டவுன், திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி போன்ற நடுத்தர இடங்களிலும் உணவகங்கள் அமைக்கப்படவேண்டும்


Rajan A
பிப் 28, 2025 06:30

உணவின் தரம் இன்னும் கேள்வியே? வெஜ் - நான் வெஜ் இரண்டும் ஒன்றாகவே விற்று வருகின்றனர்.


Ray
பிப் 28, 2025 06:09

பல காலமாக ரயில்வே செய்துவந்ததை 2002 இல் IRCTC வசம் போனது பெரிய நிலையங்களில் மட்டும் இருந்தது சிறிய நிலையங்களிலும் வருகிறது எப்படி போணியாகப் போகிறது என்பது லைசென்சிக்களின் தரமான சேவையில்தான் உள்ளது.


A Viswanathan
பிப் 28, 2025 09:22

உணவு தரமாக இருக்க வேண்டும். விலை A கிரேட் உள்ள உணவகத்தை போல கூட இருக்கலாம். இப்போதுகொடுக்கும் தேனீர் வெறும் சுடுதண்ணீர்.கண்டிப்பாக ஐஆர்சிடிசி கவனம் செலுத்த வேண்டும்.


முக்கிய வீடியோ