உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டத்தில் முறைகேடு: சி.பி.ஐ., விசாரணை கோரி சவுக்கு சங்கர் வழக்கு

தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டத்தில் முறைகேடு: சி.பி.ஐ., விசாரணை கோரி சவுக்கு சங்கர் வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவோர்களாக்கும் தமிழக அரசின் திட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி சென்னை ஐகோர்ட்டில் யுடியூபர் சவுக்கு சங்கர் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக சவுக்கு சங்கர் தொடர்ந்து புகார் கூறி வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி சி.பி.ஐ.,யிடம் புகார் மனு அளித்து இருந்தார்.இந்நிலையில் அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: தூய்மைப் பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அவர்களை தொழில்முனைவோர்களாக்கும் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதேபோல், தூய்மை பணியாளர்களுக்கு 50 சதவீத மானியத்துடன் நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள், உபகரணங்கள் வழங்கும் நமேஸ்தே(National Action for Mechanised Sanitation Ecosystem (NAMASTE) ) திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளன. இந்த திட்டத்தை அமல்படுத்தும் பணிகள் சட்டவிரோதமாக தனியார் அமைப்புக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை முக்கிய பங்கு வகித்துள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்க ஒதுக்கப்பட்ட தொகை உண்மையான பயனாளிகளுக்கு செல்லவில்லை. இது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, மார்ச் 27 ம் தேதி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.இந்த வழக்கு கோடைகால அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநராயணன் முன்பு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

RAAJ68
மே 14, 2025 09:41

தேன் நேரு மற்றும் திமுக அமைச்சர்கள் பலரிடமிருந்து நீங்கள் கோடிக்கணக்கில் பணம் வாங்குவதாக திருச்சி சூர்யா சொல்கிறார் உங்களிடம் எழுநூறு கோடிக்கு மேல் கருப்பு பணம் உள்ளதாக சொல்கிறார் உங்கள் காதலிக்கு ஐந்து கோடியில் பங்களா வாங்கி கொடுத்ததாக சொல்கிறார் இதற்கெல்லாம் நீங்கள் ஏன் மறுப்பு சொல்லவில்லை நீங்கள் முதலில் யோக்கியனா என்று சோதித்துக் கொள்ளுங்கள்


DINAGARAN S
மே 14, 2025 04:14

கீழோராய் இருக்கும் அப்பவாவிகள் வயிற்றில் அடிக்கும் இந்த நாச கார கும்பளை அடித்து நோறிக்கி சிறையில் தள்ள வேண்டும் செய்யும் வரை ஓய வேண்டாம்


திருட்டு திராவிடன்
மே 14, 2025 02:30

இவனைப் பிடித்து உள்ளே வைத்து நொங்கு எடுக்க வேண்டும். பொய் பேசுவதையே வழக்கமாகக் கொண்ட பித்தலாட்டக்காரன். இவனுக்கும் லட்சக்கணக்கான பேர் ஆதரவு அளிக்கிறார்கள்.


Maheswaran Narayanasamy
மே 13, 2025 23:33

காமன் மேன் பாதுகாக்கபட வேண்டும் நன்றி சவுக்கு சங்கர் வaaழ்க பலமுடன்


சிட்டுக்குருவி
மே 13, 2025 22:21

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? சவுக்குக்கு ஒரு சல்யூட் இதுபோன்ற நேர்மை நீதிக்கான ஆர்வலர்கள் ஒன்று சேர வேண்டும். கூட்டமைப்பு ஏற்படுத்தி அரசியலில் நேர்மை காத்திட உதவிடவேண்டும்.


V Venkatachalam
மே 13, 2025 22:13

செல்லாம் பெருந்தொகை க்காகவே கொண்டுவரப்பட்ட திட்டம்தானே அது. அதில் நீதி விசாரணையா?


swam nithi
மே 13, 2025 21:51

Are u ok Mr savukku Sankar???


உண்மை கசக்கும்
மே 13, 2025 21:32

செ பெ சும்மா இருப்பாரா.. மீண்டும் மீண்டும் ஒரு அபிஷேகம் விரைவில் எதிர்பார்க்கலாம்.


Jagan (Proud Sangi )
மே 13, 2025 21:14

GRS அவர்கள் மேல் சேற்றை வாரி சவுக்கு சங்கர் வீசி இருந்தாலும். அவர் நல்ல தீர்ப்பையே வழங்குவார் என்று எதிர்பார்க்கலாம். அவர் சவுக்கு மாதிரி தனிப்பட்ட வன்மம் கொண்டவர் அல்ல.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை