உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எல்லாமே முன்தயாரிப்பு தானா?

எல்லாமே முன்தயாரிப்பு தானா?

சட்டசபையில் நேற்று (ஜன.,20) உரை நிகழ்த்த, கவர்னர் ரவி வந்தார். தேசிய கீதம் வாசிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார். அதை ஏற்காமல் கவர்னர் சபையில் இருந்து வெளியே சென்றார். அவர் சென்றதும், ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த தீர்மானத்தை எடுத்து, முதல்வர் ஸ்டாலின் வாசித்தார். கவர்னர் ரவியும் தன் பங்கிற்கு சபையில் இருந்து வெளியேறியதும், அரசின் மீது சில குற்றச்சாட்டுக்களை அடுக்கி அறிக்கை வெளியிட்டார்.முதல்வர் ஸ்டாலின் சபையில் பேசிக் கொண்டிருந்தபோதே, இந்த அறிக்கை வெளியானது. இரு தரப்பும் ஏற்கனவே ஒத்திகை பார்த்ததுபோல, இந்த விவகாரங்கள் அரங்கேறின.அதேபோல், கவர்னர் பிரச்னை எழுப்புவார் என்பதை அறிந்து, சட்டசபை துவங்கியதும், நேரடி ஒளிபரப்பை நிறுத்தி விட்டனர். செய்தியாளர் அறையில் இருக்கும், ஒலிப்பெருக்கியையும் அணைத்துவைத்து விட்டனர்.என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்தே, கவர்னர் தரப்பும், முதல்வர் தரப்பும் இப்படி செயல்பட்டுள்ளதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ராமகிருஷ்ணன்
ஜன 21, 2026 13:02

திமுக ஆட்சியில் இருந்தால் எல்லா சட்டங்களை மீறுவார்கள், நீதிபதிகளை, தீர்ப்புகளை மதிக்க மாட்டார்கள். அக்கிரம அரசியல் செய்வார்கள். திமுக எதிர்க்கட்சியாக இருந்தால் நேர் எதிராக மாறி 24 மணி நேரமும் ஆளும் கட்சிக்கு தொல்லை கொடுத்து பதவி விலக வேண்டும் என்று மூச்சுக்கு 300 தடவை பினாத்துவான்கள். மொத்ததில் தமிழகத்தை சுரண்டி சுருட்டி முழுங்கும் வேலையை மட்டும் பார்த்துக் கொள்வார்கள். திருடர்கள் முன்னேற்ற கழகம் அழிந்தால் தான் இந்தியாவுக்கு நல்லது.


Selvakumar Krishna
ஜன 21, 2026 12:55

ஜனகனமன தேசிய கீதம் நிகழ்ச்சி நிறைவில் பாடப்படவேண்டும், தமிழ்த்தாய் வாழ்த்து நிகழ்ச்சி முதலில் பாடவேண்டும் என்பதை மாற்ற முயன்றால் யார் அனுமதிப்பார்கள்


Vasan
ஜன 21, 2026 12:26

"நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை" பாட்டு பாடும் முதல்வர், "ஜன கன மன" பாட மறுப்பது ஏன்?


sankar
ஜன 21, 2026 11:53

தரம் தாழ்த்துப்போன அரசு


Yasararafath
ஜன 21, 2026 11:43

யாருக்கு தெரியும்.?


Anantharaman Srinivasan
ஜன 21, 2026 11:29

ஒருகாலத்தில் மதிப்பு மிக்கதாயிருந்த சட்டசபை மீன்கடை மார்கெட் கூட்டம் போலாகி விட்டது.


தமிழன்
ஜன 21, 2026 11:26

கவர்னர் ஒரு சிலரால் ஆளும் கட்சியால் நியமனம் செய்யப்படுபவர். மக்கள் தேர்ந்தெடுத்த மன்றத்தில் கவர்னர் எப்படி அதிகாரம் செலுத்தமுடியும். இது மக்களாட்சியா இல்லை மன்னர் ஆட்சியா? தீர்மானங்கள் தவறாகவே இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். கவர்னர் யார் அதை எதிர்க்க? நாளை இன்னொரு கவர்னர் தேசிய கீதம் பதினைந்துமுறை தினமும் பாடவேண்டுமென்றால் அதையும் ஏற்க முடியுமா?


GMM
ஜன 21, 2026 10:39

தேசிய கீதம் வாசிக்க மறுப்பது மற்றும் விளக்கம் சொல்வது எவ்வளவு பெரிய குற்றம். நீதிமன்ற வழக்குகள் நிர்வாகத்தில் புகுந்து அதிகார முறையை மாற்றி விட்டன. வழக்கில் வக்கீல் வருமானம் தேட சில காலம் உதவியாக இருக்கும். பின் நீதிமன்றம் சரி செய்ய முடியாத நிலை ஏற்படும். கவர்னர் நிரந்தர அதிகாரி. அவர் வெளியேறும் போது சபாநாயகர் முதல் அனைவரின் பிரதிநிதி துவம் தானே செயல் இழக்க வேண்டும். இதனை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். தவறியதால் மாநில கவர்னர் அறிக்கை வெளியிட்டுள்ளார். நீதி, நிர்வாக எதிரிகள் அதிகம் ஊடுருவி விட்டனர். இதனை கவனிக்காமல் மத்திய அரசு உலகம் சுற்றி வருகிறது.


Mohamed Raffi
ஜன 21, 2026 10:14

கவர்னர் பதவியை இழிவு படுத்திவிட்ட ரவி


பேசும் தமிழன்
ஜன 21, 2026 11:17

நீங்கள் தேசியகீதம் பாடாமல்.... நாட்டையே கேவலப்படுத்தி விட்டீர்கள் !!!


பாமரன்
ஜன 21, 2026 09:34

இன்னாங்கோ... கெவுனரும் ஆக்டிங் செஞ்ச மாதிரி போட்ருக்கீங்கோ... பகோடாஸ் காண்டாகிட போறாய்ங்க... நமக்கு வந்தா தானே ரத்தம்... அவிகளுக்கு வந்த தக்காளி சட்னிய ரத்தம்னு எப்பூடி சொல்லலாம்.... ம்ம்ம்ம்


Raj Kamal
ஜன 21, 2026 13:38

அருமையான கலாய்ப்பு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை