உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு பணிக்கான தேர்வா அரசியல் கட்சிக்கான தேர்வா? டி.என்.பி.எஸ்.சி., தேர்வர்கள் அதிருப்தி

அரசு பணிக்கான தேர்வா அரசியல் கட்சிக்கான தேர்வா? டி.என்.பி.எஸ்.சி., தேர்வர்கள் அதிருப்தி

சென்னை: டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், அரசியல் கொள்கை சார்ந்த கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படுவதால், தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 1,033 அரசு பணியிடங்களுக்கான, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பொது அறிவு தேர்வு, நேற்று முன்தினம் நடந்தது. விண்ணப்பித்தவர்களில், 43,882 பேர் தேர்வு எழுதவில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zyis4i9l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 இந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள், தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, கூற்றும் காரணமும் என்ற வகை கேள்விகள் உள்ளன. அதில் ஒரு கூற்றை சொல்லி, அதற்கான காரணம் சரியா என, கேட்கப்படுகிறது. அந்த வகையில் கேள்வி எண், 133ல், 'அரசு பள்ளிகளில் ஹிந்தி திணிப்பை, தமிழகம் நீண்ட காலமாக எதிர்த்து வருகிறது. மேலும், எழுச்சி பெறும் இந்தியாவுக்கான பிரதம மந்திரியின் பள்ளிகளில் இணைய மறுத்து விட்டது. எனவே, மத்திய அரசு சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் நிதியை நிறுத்தி வைத்துள்ளது. ' இது, கூட்டாட்சி நிர்வாக முறை என்ற கருத்திற்கு எதிரானதாக கருதப்பட்டு, தமிழக அரசால் கடுமையாக எதிர்க்கப்படுகிறது' என குறிப்பிடப்பட்டு, நான்கு விடைகள் வழங்கப்பட்டுள்ளன. 'இந்த வினா, ஆளும் தி.மு.க., அரசின் கொள்கை சார்ந்தது' என, தேர்வர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:

தற்போது, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டி தேர்வுகளில், தி.மு.க., குறித்தும், அதன் தலைவர்கள் குறித்தும் கேட்கப்படும் கேள்விகள் அதிகம் உள்ளன. தற்போது, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ர சிக் ஷா கல்வி நிதி பங்கீடு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி, தி.மு.க., அரசின் கொள்கை முடிவு தொடர்பானது. பொது அறிவு தொடர்பான வினாக்களில், ஓர் அரசியல் கட்சியின் கொள்கை சார்ந்த முடிவுகள் குறித்து கேட்பது, எந்த வகையில் நியாயம்? இதில், பலருக்கு பலவிதமான கருத்துகள் இருக்கும். அவரவருக்கு அவர்களின் கருத்து நியாயமானதாக இருக்கும். இதற்கு எப்படி பதில் அளிக்க முடியும்? தங்களின் கொள்கைக்கு உட்பட்டு பதில் அளித்தால், தேர்வாணையம் அதை தவறு என சுட்டிக்காட்டும். எனவே, திட்டங்கள் தொடர்பான கேள்விகள் கேட்கலாம்; ஆனால், கட்சி, அரசியல் கொள்கை சார்ந்த கேள்விகளை, டி.என்.பி.எஸ்.சி., தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ManiMurugan Murugan
ஆக 20, 2025 00:42

தேவையற்ற கேள்விகளை அதுவும் தமிழக அரசு வேலை தேர்வில் கேட்பது பண்பற்ற செயல் இத்தகைய கேள்விகளை தேர்ந்தெடுத்த வினாத்தாள் தேர்வாளரகளின் அறிவறறத் திறன் தெரிகிறது இதை ஊக்குவித்த அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணியின் நாகரிக மற்ற செயல் தெளிவாகிறது மதிப்பெண்காக ஆம் சொல்வதை வைத்து ஒப்பாரி வைக்க தமிழகத்தில் ஹிந்தி இல்லை என்பது போல ஒப்பாரி கேவலம் ்த்தகைய கேள்வி களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அனைத்து தரப்பினருக்கும் மதிப்பெண் தரப்பட வேண்டும்


ஆரூர் ரங்
ஆக 19, 2025 11:02

டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு எத்தனை ரூபாய் கூடுதலாக வசூலிக்கப் படுகிறது. பொன்முடிக்கு எத்தனை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது போன்ற கேள்விகளைக் கேட்பார்களா?.


pmsamy
ஆக 19, 2025 07:18

ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை திட்டங்களை பாரபட்சம் இல்லாமல் மாற்றம் செய்ய வேண்டும் பிறகு மற்றவர்களைப் பற்றி பேசலாம்.


Mohan
ஆக 19, 2025 09:46

இதெல்லாம் ஒரு பொழப்பு ..இந்த கேள்வி கேக்க TNPSC வெக்க படனும்


SRIDHAAR.R
ஆக 19, 2025 07:07

வண்மையாக கண்டிக்கப்பட வேண்டியது பொது அறிவு கேள்விகளை கேட்டு அறிவாளிகள் ஐ தேர்ந்து எடுங்கள்


venkates
ஆக 19, 2025 05:14

தேசிய ஒற்றுமைக்கு ஏதிரான ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது ,இதை ஏதிர்த்து உச்சநீதி மன்றம் தேசிய அரசியல் கட்சி செய்யாதா? முதல்வருக்கு பார்த்து சரிகா சரியாய் படித்து பேசத் தேறியவில்லை ,,ஓட்டுக்காக பிரிவினை திணிப்பு நடக்கிறது .


சிட்டுக்குருவி
ஆக 19, 2025 04:57

அப்போதுதானே கட்சிக்காரர்களாக தேர்ந்தெடுக்கமுடியும் .இல்லையென்றால் எப்படி கட்சிக்காரர்களை கண்டெடுப்பது .


Kasimani Baskaran
ஆக 19, 2025 03:56

சிறுபான்மை ஆதரவில் ஜெயித்து கட்சியில் கொள்கைதான் அரசின் கொள்கை என்று உருட்டும் ஒரே கட்சி தீம்க்காதான்.


Mani . V
ஆக 19, 2025 03:53

தமிழ்நாட்டின் கொள்ளையர் குடும்ப வரலாறை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டுமா? இல்லையா?


கணேஷ் எஸ்
ஆக 19, 2025 02:57

தமிழ்நாட்டில் நாஜிக்களின் ஆட்சி நடக்கிறது?


Kasimani Baskaran
ஆக 19, 2025 03:55

நாஜிக்களை அவமதிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.