உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடும் எங்களுக்கு வெறும் ரூ.2000 தானா? உறுமும் உடன் பிறப்புகள்

உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடும் எங்களுக்கு வெறும் ரூ.2000 தானா? உறுமும் உடன் பிறப்புகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'ஓரணியில் தமிழ்நாடு' என்ற தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை 234 தொகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. கட்சித் தலைவர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், ஓட்டுச்சாவடி முகவர்கள் வீடு, வீடாகச் சென்று உறுப்பினர்களாகச் சேர்க்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், 'மக்களுடன் ஸ்டாலின்' என்ற மொபைல்போன் செயலி வழியாகவும் உறுப்பினர்களை சேர்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி முகவர்கள் மட்டுமே புதிய செயலியில் உறுப்பினர்களை சேர்க்க முடியும்.அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதியிலும் நியமிக்கப்பட்ட ஏஜன்ட்டுகள் உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை துவங்கியுள்ளனர். சேர்க்கை பணிமொபைல்போன் மூலம் மேற்கொள்ளப்படுவதால், மொபைல்போனில் அவசியம் ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும்.இதற்காக கட்சித் தலைமை மூலம், ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களுக்கும், பூத் ஏஜன்ட்டுகளுக்கு 2 பேருக்கு 2000 ரூபாய் ரீசார்ஜ் செலவிற்கு அனுப்பியுள்ளனர். இந்த தொகை மாவட்டத்தில் உள்ள பூத் ஏஜன்ட்டுகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது.தேர்தல் நெருங்கும் நேரத்தில் மிக குறைந்த தொகையாக 2000 ரூபாய் கொடுத்திருப்பது, பூத் ஏஜன்ட்டுகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பணம் உறுப்பினர் சேர்க்கைக்காக ரீசார்ஜ் செய்வதற்கு மட்டுமே பயன்படும். எங்கள் உழைப்பிற்கு இது ஈடாகுமா.தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது, கட்சியின் நகர செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்களுக்கு மட்டும் பணமுடிப்பை தலைமை வழங்கி வருகிறது. எங்களுக்கு தருவதில்லை.தற்போது உறுப்பினர் சேர்க்கைக்கு முக்கிய பங்கு வகிக்கும் எங்களுக்கு வெறும் 2000 ரூபாய்தானா. கூடுதல் தொகை ஒதுக்கினால் உண்மை, உழைப்பு, நேர்மை என எதிர்பார்க்கலாம் என உடன் பிறப்புகள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Chandru
ஜூலை 15, 2025 09:28

Oh. Now you guys are Rs.2000./-0oopis


vivek
ஜூலை 15, 2025 08:51

வெறும் இருநூறு ரூபாய்க்கு பயங்கரமா முட்டு குடுக்கும் .. எவளோ தேவலை...


நரேந்திர பாரதி
ஜூலை 15, 2025 08:43

இருநூறு வாங்கி பழக்கப்பட்ட பரம்பரை கொத்தடிமைகளுக்கு இரண்டாயிரம் கொஞ்சம் அதிகம்தான்


Balaa
ஜூலை 15, 2025 08:01

வேணும்னா வாங்கிக்க. இல்லைன்னா 200 க்கு பண்றதுக்கு 2 லட்சம் பேர் வரிசைல நிக்கிறாங்க. அப்புறம் வட போச்சே கதை ஆயிடும்.


Siva Balan
ஜூலை 15, 2025 07:57

அடிமைகளுக்கு இதுவே அதிகம்.


Padmasridharan
ஜூலை 15, 2025 07:49

பொங்கலுக்கு கொடுக்கின்ற இலவச பொருட்களே இன்னும் சரியா எல்லோர்க்கும் வரவில்லை. இதுல அடுத்த பொங்கலுக்கு அப்புறம் வர்ற தேர்தலுக்கு தயார் பன்றாங்க


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 15, 2025 07:07

200 ரூபாய் வாங்கிக்கொண்டு வயிறுவலிக்க கதறிய.. உபி களுக்கு 2000 ரூபாய் என்றால் கசக்குதா? ஒரு புல் பாட்டில் வாங்கலாம், கோழிப்பிரியாணி வாங்கலாம்.. மினரல் வாட்டர் பாட்டில் வாங்கலாம்.. ஊறுகாய் பாக்கெட் வாங்கலாம்.. பின்னி பெடலெடுக்கலாம்...நாள்பூரா மட்டையாகி கிடைக்கலாம் .. அப்புறம் என்ன உறுமல் ... விட்டால் ஹம்மர் கார் கேட்பீர்கள் போலிருக்கு.., விட்டா தனியார் கல்லூரி ஆரம்பிகணும்னு, சினிமா கம்பெனி ஆரம்பிக்கணும்னு சொல்வீர்கள் போலிருக்கு? அந்த கனவையெலாம் விட்டுவிட்டு கொடுத்ததற்கு மேல் கூவுங்கள் ..கூவல்னா கூவல் அப்படியொரு உலகத்தரம் வாய்ந்த கூவலாய் இருக்கணும் .. கொஞ்சம் போட்டு தரச்சொல்கிறோம் ..


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 15, 2025 07:52

இந்தப்பொழப்புக்கு இவனுங்க ......


Barakat Ali
ஜூலை 15, 2025 06:30

உறுமும் உடன் பிறப்புகள் ........ உறுமும் பொருத்தமான வார்த்தையிங்கோ .....


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 15, 2025 07:51

பக்கோடாஸ், பக்கோடாஸ் ன்னு அழுது புரளுற, கோல்மால்புரத்து வண்டி கழுவுற மெசினை சொல்றீங்க போல ......


ராமகிருஷ்ணன்
ஜூலை 15, 2025 06:22

5 லட்சம் கோடிகளை கடன் வாங்கி வாரி சுருட்டி முழுங்கி ஏப்பம் விட்டாச்சு. பணபசி அடங்கவில்லையே திமுகவினர் மிகுந்த பண கஷ்டத்தில் இருப்பதாகக் நேற்று அண்ணன் நேரு சொல்லி உள்ளார். ஆகையால் ஏற்கனவே நீங்கள் கொள்ளை அடித்து வைத்துள்ள பணத்தை எடுத்து செலவுகள் செய்து கட்சியை காப்பாற்ற வேண்டும். தேர்தலில் தோல்வி தெரிந்து விட்டதால் திமுக பணத்தை வாரி இறைக்காது. பன்னும் டீயும் குடித்து விட்டு வேலையை பாருங்க


Barakat Ali
ஜூலை 15, 2025 05:33

படிச்சு உருப்படுங்கய்யா ன்னா ......... இங்கே ஒரு உ பி இப்படித்தான் எழுதுவது வழக்கம் ..... உ பி ஸ் இங்கே நடந்துகொள்ளும் தரத்துக்கு அவங்களுக்கு இதுவே ரொம்ப ரொம்ப அதிகம் ......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை