உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எதிர்க்கட்சிகள் மீது பொய்வழக்கு புனைவது தான் பணியா? சந்தேகப்படுகிறார் அன்புமணி

எதிர்க்கட்சிகள் மீது பொய்வழக்கு புனைவது தான் பணியா? சந்தேகப்படுகிறார் அன்புமணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ஆளுங்கட்சியினரை காப்பதும், எதிர்க்கட்சிகள் மீது பொய்வழக்கு புனைவதும் தான் பணியா? போலீசார் சுதந்திரமாக செயல்பட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்' என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்தார்.

அவரது அறிக்கை:

சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், சென்னை மாநகர போலீசாரின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்திருக்கும் உச்சநீதிமன்றம், அந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. தமிழக போலீசார் எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதற்கு உச்சநீதிமன்றத்தின் கண்டனம் தான் சான்று.அண்ணாநகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரால் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக புகார் அளிக்கச் சென்ற சிறுமியின் பெற்றோரை போலீசார் கடுமையாகத் தாக்கியதுடன், சிறுமியின் தாய் நடத்தை மீதே சந்தேகம் தெரிவித்ததுடன், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப் போவதாகவும் மிரட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி, அந்த சிறுமி அளித்த வாக்குமூலத்தின் ஒரு பகுதியை கசிய விட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி பெற்றுத் தர வேண்டிய காவல்துறையினர் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் குடும்பத்தினரை அச்சுறுத்தியிருப்பதை ஏற்றுகொள்ள முடியாது. தமிழக போலீசாரின் செயல்பாடுகள் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் அவமானம். சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதிமன்றம் மாற்றிய நிலையில், அதை தமிழக அரசு ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். மாறாக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதன் மூலம் போலீசாரின் தவறுகளுக்கு துணை போகிறது என்று தான் பொருளாகும்.தமிழக போலீசாரின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் சீரழிந்து வருவது கவலையளிக்கிறது. போலீசார் எந்த அளவுக்கு ஆளும்கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாக செயல்படுகிறது; எதிர்க்கட்சிகளை எந்த அளவுக்கு பழிவாங்குகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். தமிழக காவல்துறைக்கு என சில சிறப்புகளும், பெருமைகளும் உள்ளன. அவற்றை பாதுகாக்கும் வகையில் போலீஸ் அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும். போலீசார் சுதந்திரமாக செயல்பட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

sundarsvpr
நவ 12, 2024 17:40

எந்த நல்லது கெட்டது நடந்தாலும் அது ஆண்டவனால் நிர்ணயிக்கப்பட்டவைகள். இதனை சட்டதால் சரிசெய்திட இயலாது. கரம் சந்த காந்தியை மஹாஸ்தமா என்று அழைத்தோம். அவரின் மரணம் ஏன் நார்மலாய் இல்லை. மஹாபாரத யுத்தத்தில் கோடிக்கணக்கில் இறந்தார்கள் இறுதியில் இருந்தது பகவான் கண்ணன் பாண்டவர் ஆறு நபர்கள். பகவான் இருந்தும் தடுக்க இயலவில்லை. இது செய்த பாவங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தண்டனை. புவியில் பிறந்த அவதார புருஷன் கண்ணனும் கால்நகத்தில் அம்பு பட்டு இறந்தான். இவைகள் எல்லாம் சர்வ வல்லமை படைத்தவனால் நிர்ணயிக்க பட்டவை.


சுராகோ
நவ 12, 2024 16:50

இதை பற்றி எந்த செய்தியும் காணோம். தி மு க ஆட்சி என்பதால் அரசியல் நாகரிகம் கருதி ஊடகங்கள் வெளியீடுவது இல்லை என நினைக்கிறேன்.


bgm
நவ 12, 2024 16:08

ஒரு அக்கா தலையை தலையை ஆட்டி ஆட்டி பேசுமே , அது, இன்ன பிற பெண்ணுரிமை வாதிகள், வைகுண்டம், kanoj moongre matteum வூ பீஸ், வாடகை வாயர்கள் யாரையும் காணோம்


Mohammad ali
நவ 12, 2024 17:31

அவர்கள் வேலை கொடுக்க போயிருக்கிறார்கள். முடித்ததும் பேசுவார்கள்


Narayanan
நவ 12, 2024 15:36

எதிர்க்கட்சியினர் மட்டும் இல்லை . திமுக ஆட்சியை பற்றியோ, திமுகவினரை பற்றியோ யாரவது பேசினால் அல்லது எழுதினால் சர்வாதிகாரமாக கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்படுவதே வாடிக்கை .


MARI KUMAR
நவ 12, 2024 14:46

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


SUBBU,MADURAI
நவ 12, 2024 15:33

This is the Reason why Tamilnadu Police has a zero respect among the citizens.


சமீபத்திய செய்தி