உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முரசொலி பட்டா இடத்தில் தான் உள்ளதா?: ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

முரசொலி பட்டா இடத்தில் தான் உள்ளதா?: ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முரசொலி அலுவலகம் பட்டா நிலத்தில் தான் உள்ளது என்பதற்கான வருவாய்த்துறை ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம், ஆதிதிராவிட சமூகத்தினருக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக, பா.ஜ., பிரமுகர் சீனிவாசன், தேசிய ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, முரசொலி நிர்வாகத்துக்கு, 2019 நவம்பர், டிசம்பரில் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், முரசொலி அறக்கட்டளை சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று(ஜன.,03) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, '' பஞ்சமி நிலம் என்பதற்கான எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யாமல் புகார் அளிக்கப்பட்டுள்ளது '' என முரசொலி அறிக்கட்டளை தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, முரசொலி அலுவலகம் பட்டா நிலத்தில் தான் உள்ளது என்பதற்கான வருவாய்த்துறை ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Raa
ஜன 09, 2024 12:25

பட்டா இல்லை என்றால் என்ன? எங்கள் ஆட்சிதானே, ஒன்னு போட்டுக்கொண்டாள் போகிறது.


Yaro Oruvan
ஜன 04, 2024 17:28

இத சொன்ன குருமா எங்க? சைக்கோவும் இத சொன்னாரே?? ஓ.. அவங்க அப்போ எதிர் கூட்டணி.. இப்ப? ஆளுக்கு ஒரு எம்பி சீட் கேப்பாங்க


r srinivasan
ஜன 04, 2024 11:27

இது என்ன பிரமாதம் எங்களுக்கு போலி பத்திரம் தயாரிக்க தெரியாத என்ன?


R KUMAR
ஜன 04, 2024 10:40

தமிழ் நாட்டில் உள்ள அனைத்து நிலங்களின் "மூல பத்திரம்" எங்களிடம் உள்ளது. எனவே கவலையில்லை


P.Sekaran
ஜன 04, 2024 10:33

இன்னும் இரண்டரை மாதத்தில் ஏதாவது செய்து பஞ்சமியை நிரந்தர பட்டாவாக மாற்றி காப்பாற்றிகொள்ளுங்கள் அடுத்த ஆட்சியில் ஒன்றும் செய்யமுடியாது எல்லாவற்றையும் தோண்டி துருவி நொங்கு எடுத்துவிடுவார்கள்.


rajen.tnl
ஜன 04, 2024 09:36

ஒருத்தன எதிர்க்கணும்ன்னா ஒன்னு நாம நல்லவனா இருக்கணும் ,, இல்லை என்றால் அதிகாரம் உள்ளவனை எதிர்க்க கூடாது


rajen.tnl
ஜன 04, 2024 09:34

நீதிபதிகள் அத்தனை பேரும் RSS காரனா மாறிட்டாங்க.. அதனால திமுக தூக்கம் இல்லாமல் அலையுது


vbs manian
ஜன 04, 2024 09:15

மூல பத்திரம் பத்திரமாக உள்ளதா.


SIVA
ஜன 04, 2024 08:32

அய்யா இன்னிக்கி அஷ்டமி , நாளைக்கு நவமி , அப்புறம் தசமி அப்ப பஞ்சமி தேதிக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கு அய்யா , இப்படி வரிசை படி வரமால் குறுக்கு வழியில் பஞ்சமிக்கு வருவதால் இது ஒன்றிய அரஸின் சதி உள்ளது , அதனால் இந்த வலக்கை தள்ளுபடி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம் ....


Rajarajan
ஜன 04, 2024 06:02

தி.மு.க. தற்போது, 23 ம் புலிகேசி வடிவேல் கதையாகிவிட்டது. ஒரு புறாவை நான் வறுத்து தின்றதற்கு, இவ்வளவு பெரிய அக்கப்போறா என்பார் வடிவேலு. அதுபோல, ஒரு வாட்ச் பில் கேட்டதற்கு, இவ்வளவு பெரிய அக்கப்போறா என தி.மு.க. தலைமை புலம்புவது கேட்க்கிறது. என்ன செய்வது ?? இது தான் ஒரிஜினல் ஏழரை.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ