உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வருக்கு கருப்புக்கொடி விவசாயிகளை தண்டிப்பதா?

முதல்வருக்கு கருப்புக்கொடி விவசாயிகளை தண்டிப்பதா?

சென்னை: 'தஞ்சையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது, எந்த வழக்கும் தொடரக்கூடாது' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தஞ்சை மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான நிலுவைத்தொகையை வழங்க கோரி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். தி.மு.க., அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பாராமுகமாக இருப்பதை கண்டித்து, முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டிய, விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து, விவசாயிகளை ஏமாற்றியது; நிலங்களை காக்க போராடிய, திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டது என, நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு செய்த துரோகங்கள் போதாதா?தற்போது, கருப்புக்கொடி போராட்டம் நடத்திய கரும்பு விவசாயிகள் மீதா, அடக்குமுறையை காட்டுவது? நான்கு ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின் போட்ட வேடங்களில், டெல்டாக்காரன் வேடம் பல்லிளிக்கிறது. கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரையும் விடுதலை செய்து, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய, நிலுவைத் தொகை கிடைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். போராடிய விவசாயிகள் மீது, தி.மு.க., அரசு எந்த வழக்கும் தொடரக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

sugumar s
ஜூன் 17, 2025 12:22

it is really bad that politicians think there should not any objection to their deeds. when they do when modi comes it is legal. if the same happens against them they dont like and go for punishing. people should teach lesson in 2026


lana
ஜூன் 17, 2025 10:40

எதுவுமே படிக்காமல் துண்டு சீட்டு கூட படிக்க தெரியாமல் இருப்பது இதுவே தமிழக மக்களின் தேவை. நல்லா படித்து I.I.M போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் படித்து IPS படித்து வந்தவர்கள் எங்களுக்கு தேவையில்லை. எங்களுக்கு குவாட்டர் கோழி பிரியாணி குடுத்தா நாங்கள் குடும்ப கொத்து அடிமையாக இருக்க தயார்


புரொடஸ்டர்
ஜூன் 17, 2025 08:32

சட்டம் தன் கடமையை செய்துள்ளது?


Prasanna Krishnan R
ஜூன் 17, 2025 11:55

நீங்க திமுக தலைவருக்கு தரகர்.


பாபு
ஜூன் 17, 2025 07:47

ஐ.பி.எஸ் படிச்சிட்டு அரசியல்வாதி. சட்டம் ஒழுங்கைப் பத்தி தெரியாது.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 17, 2025 08:19

எல்லாம் தமிழகத்தின் தலையெழுத்து....!!!


vivek
ஜூன் 17, 2025 08:47

கண்டுபுதுசிட்டேன்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை