உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டும் அரசு கட்டுப்பாடுகள் விதிப்பதா? பாரத் ஹிந்து முன்னணி கண்டனம்

ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டும் அரசு கட்டுப்பாடுகள் விதிப்பதா? பாரத் ஹிந்து முன்னணி கண்டனம்

சென்னை:தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, போகி போன்ற ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கட்டுப்பாடுகளை விதிப்பதாக, பாரத் ஹிந்து முன்னணி தலைவர் பிரபு கண்டனம் தெரிவித்து உள்ளார். அவரது அறிக்கை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல்வேறு கட்டுப்பாடுகளை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ளது. காவல் துறையும் பல்வேறு கெடுபிடிகளை செய்கிறது. சென்னையில் இயங்கி வரும் பல்வேறு எண் ணெய் சுத்திகரிப்பு ஆலை களால், கடல் நீர் மாசுபடுகிறது. கூவம், அடையாறு ஆறுகள் வழியாக, அனைத்து கழிவுகளும் கடலில் தான் கலக்கின்றன. இது பற்றியெல்லாம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கவலைப்படவில்லை; அதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, போகி போன்ற ஹிந்து பண்டிகைகள் வந்தால், சுற்றுச்சூழல் மாசுபாடு என, பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி விழா எந்த பிரச்னையும் இல்லாமல், இயல்பாக நடக்கிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் கெடுபிடி செய்யப் படுகிறது. ஹிந்துக்களின் பண்டிகைகளை முடக்குவதற்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை, தி.மு.க., அரசு தவறாக பயன்படுத்துகிறதோ என்று சந்தேகம் எழுகிறது. ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டும், ஒரு தலைபட்சமாக செயல்படு ம் நிலையை மாசு கட்டுப்பாட்டு வாரியம் மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ