உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இஸ்ரேல் - ஹமாஸ் போர் விரைவில் முடிவுக்கு வருகிறது?

இஸ்ரேல் - ஹமாஸ் போர் விரைவில் முடிவுக்கு வருகிறது?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கெய்ரோ: இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர, போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கும், பிணைக் கைதிகளை விடுவிக்கவும் ஹமாஸ் பயங்கரவாதிகள் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து போர் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..மேற்காசிய நாடான பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேலுக்குள் புகுந்து, 2023, அக்., 7ல் தாக்குதல் நடத்தினர். நுாற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதையடுத்து துவங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர், 15 மாதங்களாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் முயற்சித்து வருகின்றன. இதற்கிடையே அமெரிக்க அதிபர் தேர்தலில் டெனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் வரும் 20ல் பதவி ஏற்க உள்ளார். 'நான் பதவி ஏற்று இரு வாரங்களுக்குள் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படவில்லை எனில் மிக மோசமான விளைவுகளை ஹமாஸ் படையினர் சந்திக்க நேரிடும்' என, டிரம்ப் எச்சரித்தார்.இதை தொடர்ந்து, போர் நிறுத்த பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டது. போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகள் விடுவிப்பு தொடர்பாக இஸ்ரேல் அளித்துள்ள வரைவு ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் படையினர் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதன் மூலம் கடந்த 15 மாதங்களாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வரவுள்ளது.விரைவில் நல்ல செய்தி வரும் என எதிர்பார்ப்பதாக இஸ்ரேல் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
ஜன 15, 2025 08:02

ஹமாஸை முழுவதுமாக ஒழித்துக்கட்டி பாலஸ்தீன நிர்வாகம் இஸ்ரேலிடம் வரவேண்டும். அதன் பின்னர் சந்தேகத்துக்கு இடமில்லாமல் பாலஸ்தீனம் செழிக்கும். சுற்றி இருக்கும் வேலை வெட்டி இல்லாத தீவிரவாத ஆதரவு நாடுகளுடன் இணைத்து செயல்பட்டால் பாலஸ்தீனம் பாலைவனமாகத்தான் செய்யும். இவ்வளவு நாளும் இஸ்ரேல் கொடுத்த பணம் மற்றும் தொழில்நுணுக்கத்தில் சக்கைபோடு போட்டு அண்டை நாடுகளை விட பாலஸ்தீனம் சிறப்பாகவே வளர்ந்து இருந்தது. அனால் துரதிஷ்டவசமாக தீவிரவாதிகளை நம்பி இப்பொழுது 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது.


Senthoora
ஜன 15, 2025 04:46

இனி அமெரிக்க மக்களும் ந்த போருக்கு உதவுவதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். லாஸ் லாஸ்ஏஞ்சல்லில் நடந்த அனர்த்தம், ஒரு பாடமாக அமைத்திருக்கும்.


J.V. Iyer
ஜன 15, 2025 04:14

நாற்பது பிணைக்கைதிகள் இன்னும் இருக்கிறார்கள் என்றால் ஒரு நாலாயிரம் ஹமாஸ் பயங்கரவாதிகளாவது காசாவில் இருக்கிறார்கள் என்று பொருள். இவர்களை எளிதாக வெளியே விட இஸ்ரயேலியர்கள் ஞான சூனியமா? பயங்கரவாதிகள் அடியோடு ஒழிப்படவேண்டும். ஆனால் திராவிடியாக்களைவிட மேலானவர்கள்.


முக்கிய வீடியோ