உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேனர் பின்னணியில் எதிர்க்கட்சியா? வேங்கைவயலில் தீவிர விசாரணை

பேனர் பின்னணியில் எதிர்க்கட்சியா? வேங்கைவயலில் தீவிர விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், இரண்டு ஆண்டுக்கு முன்பு மலம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் நடந்து, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வரும் நிலையில், குற்றவாளிகளை அடையாளம் காண அறிவியல் ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t8nyiqr0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனிடையே, வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பதை கண்டிக்கும் வகையில் தயார் செய்யப்பட்ட ஒரு பிளக்ஸ் பேனரின் போட்டோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: வேங்கைவயல் சம்பவம் நடந்து, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அதை உணர்த்தும் வகையில், கடந்த மாதம் 26ல், வேங்கைவயல் கிராமத்தில் வைக்க சிலர் ஏற்பாடு செய்துள்ளனர். அதற்காக, தயார் செய்யப்பட்ட பேனர் குறித்து தகவல் கிடைத்ததும், போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர்.அதனால், பேனர் வைக்கப்படவில்லை. இருந்தபோதும், அந்த பேனரை வீடியோ பதிவெடுத்து, சமூக வலைதளங்களில் பரப்பி விட்டுள்ளனர். லோக்கலில் விசாரித்த வரையில், எதிர்க்கட்சியினர் துாண்டுதலில் தான் யாரோ இதை செய்திருக்க வேண்டும். தீவிர விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

கத்தரிக்காய் வியாபாரி
ஜன 21, 2025 17:01

சுவரொட்டில கல் எறிந்த மூதாட்டியை தனிப்படை வைத்து பிடித்து உங்கள் ஆண்மையை காட்டிவிட்டீர்கள். இனி இந்த பேனர் வைத்தவனை தனிப்படை வைத்து தேடி பிடிக்கவும்.


Ramesh Sargam
ஜன 20, 2025 20:13

ம ல ம் கலந்தவனை - கலந்தவர்களை பிடிக்க துப்பில்லாத போலீஸ், பேனர் வைத்தவர்களை கண்டுபிடிக்க புறப்பட்டுவிட்டார்கள். வெட்கமாக இல்லை உங்களுக்கு.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 20, 2025 14:04

கிம்ச் சை ஆட்சியை இப்படியெல்லாம் கலாய்க்கக் கூடாது ......


Alagusundram Kulasekaran
ஜன 20, 2025 13:07

குற்றவாளிகளை கண்டுபிடிக்க தடுப்பதில்லை பேனர் வைத்தவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை கொடுப்பதனை விடுத்து குற்றவாளிகளை கண்டுபிடிங்க


Balamurugan
ஜன 20, 2025 12:28

குற்றவாளிகளை கண்டுபிடிக்க துப்பில்லாத காவல்துறை பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களாம். ஜனநாயகம் வாழ்க


கிஜன்
ஜன 20, 2025 12:05

காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ரவுடிகளை அடக்கிய என்கவுண்டர் ஏகாம்பரத்திற்கு ....வந்த சோதனை இது ....


Anand
ஜன 20, 2025 11:33

அந்த பேனரை வைத்தவர்கள் யார் என கண்டுபிடிக்க ஒரு தனிப்படை அமைக்கப்படும்...


rama adhavan
ஜன 20, 2025 11:21

இந்த விசாரணையும் மூல விசாரணை போல் தாமதம் ஆகாமல் இருந்தால் சரி.


Shekar
ஜன 20, 2025 11:00

அந்த பேனருக்கு முன்னே நிற்கும் அந்த 3 பேரை பிடிக்க 30 தனிப்படைகள் அமைத்து ஸ்காட்லாந்து போலிஸ் விசாரணையை முடுக்கிவிட்டள்ளனர்


karupanasamy
ஜன 20, 2025 10:40

200 ரூவா பேட்டா கிடையாது என்பது தெரிந்துவிட்டதால் இன்றைக்கு நோ ஊபீஸ் கமெண்ட்.


krishna
ஜன 20, 2025 17:06

NEENGA VERA AVANGA VENGAIVAYAL SAMPLE THANNI KUDIKKA ARIVAALAYAM VAASALIL QUEUEVIL NIRKKIRAARGAL 200 ROOVAA OOPIS CLUB BOYS THALAI VAIKUNDESWARAN PINNAL.


புதிய வீடியோ