உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பனைமரம் ஒரு ஜாதியின் மரமா? சீமான் ஆவேச பேட்டி

பனைமரம் ஒரு ஜாதியின் மரமா? சீமான் ஆவேச பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தின் தேசிய மரம் பனைமரம், அது எப்படி ஒரு ஜாதியின் மரமாக மாறியது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: கள்ளுக்கடையை திறந்தால் டாஸ்மாக் வியாபாரம் பாதிக்கும் என்பதால் கள்ளுக் கடையை மூடுகிறார்கள். கள்ளுக்கடையை திறந்தால் டாஸ்மாக்கில் வியாபாரம் படுத்துவிடும். இதனை தவிர வேறு ஏதும் காரணம் இருக்கா சொல்லுங்க? தமிழகத்தின் தேசிய மரம் பனைமரம், அது எப்படி ஒரு ஜாதியின் மரமாக மாறியது. நான் பனைமரம் ஏறினால் அது ஜாதி பெயராக மாறிவிடுகிறது. புதுச்சேரியில் கள் விற்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் அது போதைப்பொருளானது எப்படி? நான் பனை மரம் ஏறியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தால் விசாரணையை எதிர்கொள்ளத் தயார். இவ்வாறு சீமான் கூறினார்.கடந்த ஜூன் 15ம் தேதி, தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழை அருகே பனைமரத்தில் ஏறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்கினார். பனை மரத்தில் இறக்கி வந்த கள்ளை அனைவருக்கும் சீமான் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

புரொடஸ்டர்
ஜூன் 18, 2025 08:58

பனைமரத்தின் வவ்வால் என சீமான் நிரூபித்துள்ளார்.


முருகன்
ஜூன் 17, 2025 23:04

பனை மரம் ஏறி விட்டு சொல் ஜாதி பற்றி பேச ஏன் முயல்கிறாய் தினமும் ஒரு பேச்சு வரும் தேர்தலோடு காணமால் போவது உறுதி


ஜெய்ஹிந்த்புரம்
ஜூன் 17, 2025 21:31

பனமரத்துக்கு படிக்கட்டு


Mecca Shivan
ஜூன் 17, 2025 19:58

அவருக்கு ட்ரெயின் ஓடாத தண்டவாளம் ..இவருக்கு ஏணி கட்டிய பனைமரம் ..


தாமரை மலர்கிறது
ஜூன் 17, 2025 19:43

கள் ஐ டாஸ்மாக்கில் விற்க வேண்டியது தானே.


rama adhavan
ஜூன் 17, 2025 19:30

பாண்ட் போட்டுக்கொண்டு, மரத்தில் படிக்கட்டும் கட்டிக்கொண்டு பனை மரம் ஏறும் முதல் ஆசாமி இவர்தான். எல்லாம் விளம்பரத்துக்கு. எனவே மக்களே ஏமாறாதீர்கள்.


Kasimani Baskaran
ஜூன் 17, 2025 17:25

ஒரே பனைமரத்தில் ஒருவருக்கு மேல் ஏறினால் எங்கள் ஊரில் கீழே இரங்கியவுடன் டின் கட்டிவிடுவார்கள். மேலே ஏறும் பொழுது வணங்கிவிட்டுத்தான் போவார்கள்.. இப்படி சாரம் கட்டி ஏறுவது கேவலம்...


முதல் தமிழன்
ஜூன் 17, 2025 17:25

இவரெல்லாம் ஒரு ஆளுன்னு ...செய்தி போட்டுகிட்டு ...அரை வேக்காடு ஆள் இவர் .


Palanisamy Sekar
ஜூன் 17, 2025 16:39

தமிழ்நாட்டுல இந்த திமுக பெருந்தலைவர் காமராஜர் அவர்களை இந்த சாதியை சொல்லித்தானே திட்டுனாங்க. அதிலும் குறிப்பாக கருணாநிதிக்கு இந்த சாதியை கண்டாலே பிடிக்காது. அதனால் காமராஜர் அய்யாவை இந்த சாதி சொல்லியே திட்டுவாங்க மேடை தோறும்.


Ramanujam Veraswamy
ஜூன் 17, 2025 16:33

All distilleries in Tamilnadu and around Tamilnadu are owned by AMK and AIADMK leaders, either in their name or in the name of their benamis. If Tasmsc is closed, the ultimate loss will be their only. Then, how they will close Tasmac. Their agitation yo close Tasmac is only to misguide poor people.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை